This Article is From Oct 04, 2018

அறுவை சிகிச்சைக்கு செல்லும் பூடானின் முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்!

ஒட்டி பிறந்த இரட்டையர்களான நிமா மற்றும் தவா பெல்டன் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்கள். பலகட்ட சோதனைக்கு பின்பே அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
உலகம்

நிமா மற்றும் தவா பெல்டன் உயர்தர இமேஜ் ஸ்கேனிற்கு பிறகே அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தப்படுவார்கள்.

Melbourne:

பதினான்கு மாதங்களுக்கு முன் பூடானின் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரின் உடலும் மார்புப் பகுதியோடு ஒட்டியுள்ளதால், அறுவை சிகிச்சைக்காக பல தரப்பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவுகளுக்கு பின்பே சிகிச்சை செய்யப்படும்.

பூடானின் இரட்டையர்கள் சிகிச்சைக்காக சென்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் ராயல் குழந்தைகள் மருத்துவமனையின், மருத்தவர் இயன் மெக்கன்ஸி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஒட்டி பிறந்த இரட்டையர் அறுவை சிகிச்சையில் ஒருமுறைக்கு இருமுறை அனைத்தையும் சரி பார்த்து இந்த சிகிச்சை மிகவும் அவசியமானது என கூறியுள்ளார். மேலும், பலதரப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டே அடுத்த வாரத்தில் சிகிச்சை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

பூடானின் முதல் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் கடந்த 2017, ஜூலை 13ஆம் தேதி பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement