கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதியாக வெற்றியும் பெற்ற முதல் நபர் முகேன் மட்டுமே
big boss 3 finals: கடந்த 105 நாட்களாக நடைப்பெற்று வந்து பிக் பாஸ் சீசன் 3 நேற்றுடன் நிறைவு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ்.
சாண்டி,முகேன், லாஸ்லியா,ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதி கட்டத்திற்கு போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் முழுக்க நடந்த ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தை முகின் பிடித்துள்ளார் என்று கமல் அறிவித்திருந்தார்.
மலேசியாவைச் சேர்ந்த முகென்னுக்கு வெற்றியாளர் விருதுடன் 50 லட்ச ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டது. சாண்டியும் லாஸ்லியாவும் முறையே இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முகெனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், மலேசியா ரசிகர்கள் இந்த முடிவை வெகுவாக கொண்டாடியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதியாக வெற்றியும் பெற்ற முதல் நபர் முகேன் மட்டுமே
இது ஒருபுறம் இருக்க, ஃபைன்ல்ஸில் இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் சிறப்பு பட்டங்களுடன் கூடிய விருதை வழங்கினார். கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.சிறந்த நண்பர் (best buddy) விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது.வனிதாவிற்கு கட்ஸ் அண்ட் கிரிட் (guts and grit) விருது வழங்கப்பட்டது.சேரனுக்கு மிகவும் ஒழுக்கமானவருக்கான விருது வழங்கப்பட்டது.
தர்ஷனுக்கு இதில் ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த விருதுடன் தர்ஷனை அனுப்பி விடுவார்களா? என்ற பயமும் ஏக்கமும் அவரின் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நேரத்தில் தான் மிகப் பெரிய ஷாக்கை தந்தார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ச்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் முன்னிலையிலும் கமல் அறிவித்தார்.
பரிசினை முகேன் தட்டி சென்றலும், தர்ஷன் பட வாய்ப்பு மூலம் மீண்டும் தன்னை சினிமா உலகில் நிறுவிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதை தர்ஷன் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.