தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிறப்புவது யார்?
திராவிட அரசியலின் இரண்டு மாபெரும் தலைவர்களின் உயிரிழப்பானது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 வருட காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை தமிழகம் இழந்துள்ளது. இவர்களின் இடத்தை ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடமும், மறுப்பக்கம் மு.க.ஸ்டாலினிடமும் விட்டுச்சென்றுள்ளனர்.
தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தமிழகத்தின் மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருகை தந்தனர். அதில் ஒருவரின் கட்சி மற்றுமே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறது.
இன்னொரு பக்கம், இரண்டாக உடைந்த அதிமுக அணியின் மற்றொரு பிரிவான சசிகலா, டிடிவி தினகரன் அணியினர். இதில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரிலே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது அணியே உண்மையான அதிமுக என கூறிவருகின்றனர்.
இதில், வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் தோல்வியுற்ற கட்சிகளுக்கான வேறுபாடு என்பதையும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தலின் தரவுகளை வைத்து பார்க்கும் போது, பெரும்பாலான மாநிலங்களில் பெரும் வேறுபாட்டுடனான வெற்றியே கிடைத்துள்ளது. அதாவது, வெற்றி பெற்ற கட்சிகள், தோல்வியுற்ற கட்சிகளை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான தொகுதிகளையே கைப்பற்றியுள்ளன.
இதில், 94 சதவீத தேர்தல் முடிவுகளில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னிலை வகுக்கிறது. அதன்படி, 1952 முதல் 2014 வரையிலான தேர்தல்களில் பெரும்பான்மையான வேறுபாட்டில் வெற்றி பெற்றதாக 5 மாநிலங்கள் உள்ளது. அதில், முதல் இடத்தில் தமிழகம் உள்ளது.
அதாவது, தமிழகமே வெற்றி பெறுபவர்களுக்கு, மிகப்பெரும் வெற்றி வாய்ப்பை அளித்து வந்துள்ளது.
தமிழகத்தில் கிடைக்கும் இந்த மாபெரும் வெற்றி மூலம், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் பல தசாப்தங்களாக பயன் அடைந்தது இல்லை.
1980 முதல் தமிழகத்தில் தலைதூக்கிய திராவிட அரசியலால், தேசிய கட்சிளுக்கான வாய்ப்புகள் என்பது சுருங்கிவிட்டது. தமிழகத்தில் 20 சதவீதம் வாக்குவங்கி கொண்ட காங்கிரஸ் தற்போது, 4 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு போதும் அங்கம் வகிக்காத பாஜக தற்போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இது ஜெயலலிதா வாழ்நாளில் சிந்திக்க முடியாத ஒரு மாற்றமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், கடந்த 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக ஆதரவு அளித்தது. எனினும் இந்த ஆதரவை 13 மாதங்களில் திரும்ப பெற்றது. இதில், 1999ல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்தது.
ஜெயலலிதா காலக்கட்டத்தில் மற்ற கட்சிகளை காட்டிலும் அதிகமாக எப்போதும் 10 சதவீத பெண்கள் வாக்குகளை அதிமுக பெற்று வந்தது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திமுக 2 சதவீத ஆண்கள் வாக்குகளை அதிகமாக பெற்று வந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.