This Article is From Jul 03, 2020

‘உங்கள் தைரியமே உயர்ந்தது..!’- லே பகுதியில் மோடி, ராணுவ வீரர்கள் முன்னிலையில் உணர்ச்சி உரை!

"தன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்"

‘உங்கள் தைரியமே உயர்ந்தது..!’- லே பகுதியில் மோடி, ராணுவ வீரர்கள் முன்னிலையில் உணர்ச்சி உரை!

'உங்கள் நம்பிக்கை, தீரம் மற்றும் எண்ணத்தை எவற்றாலும் அசைக்க முடியாது'

ஹைலைட்ஸ்

  • இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார் பிரதமர் மோடி
  • லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது
  • சீனா, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது
Leh:

இந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று லே பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.

பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தலைவர் எம்.எம்.நரவனே ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருந்தனர். எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், பிரதமரின் திடீர் வருகையானது ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

லடாக்கில் பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்:

-உங்கள் வீரம் மற்றும் உழைப்புக்கு எதுவும் ஈடு இணை இல்லை. 

-நீங்கள் எவ்வளவு உயரத்தில் முகாமிட்டிருந்தாலும், அது உங்கள் தைரியத்தின் உயரத்துக்கு ஈடாகாது. 

-உங்கள் நோக்கமானது, உங்களை சூழ்ந்துள்ள இந்த மலைகளைப் போல உறுதியானது.

-உங்கள் நம்பிக்கை, தீரம் மற்றும் எண்ணத்தை எவற்றாலும் அசைக்க முடியாது. 

-உலகின் மிகக் கடினமான சூழலில் உங்களின் முழு உழைப்பையும் கொடுத்து வருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் திரும்ப திரும்ப, இந்திய ராணுவம்தான் உலகிலேயே மிகச் சிறந்தது என்பதை நிரூபித்து வருகிறீர்கள். 

-இங்கிருந்து நீங்கள் அனுப்பிய தகவல் உலகையே அடைந்துள்ளது. அது மிக உறுதியாக இருக்கிறது. 

-இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனும், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தியர்களும், நீங்கள் நாட்டை பலமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பீர்கள் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள். 

-தன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். 

-லடாக்கில் இருக்கும் ஒவ்வொரு மூலைக்கும், ஒவ்வொரு கல்லுக்கும், ஒவ்வொரு நதிக்கும், அது இந்தியாவைச் சேர்ந்தது என்பது தெரியும். 
 

.