This Article is From Jul 04, 2018

‘இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி!’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால்

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி!’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால்

ஹைலைட்ஸ்

  • உச்ச நீதிமன்ற 5 பேர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது
  • 2016-ல் ஆம் ஆத்மி, இந்த வழக்கை தொடுத்தது
  • புது டெல்லிக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும், கெஜ்ரிவால்
New Delhi:

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக நெத்தியடி தீர்ப்பை தந்துள்ளது, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு. இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார் புது டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

 

 

இந்த தீர்ப்பு, துணை நிலை ஆளுநருடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது. மாநில அரசு முடிவெடுக்க முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், துணை நிலை ஆளுநர் அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது டெல்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி’ என்று பெருமிதத்துடன் கருத்து கூறியிருந்தார். 

சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகளின் பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வர துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும் என கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் 9 நாட்கள், துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவாலின் இந்த போராட்டம், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதால் முடிவுக்கு வந்தது. அதே நேரம், மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் என்று, ஆம் ஆத்மி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியது.

இந்த அதிகார மோதல் 2015-ம் ஆண்டு டெல்லி மாநில ஆட்சிப் பொருப்பை ஆம் ஆத்மி ஏற்றுக் கொண்டதில் இருந்து தொடர்ந்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசு, ஊழல் தடுப்பு துறையை டெல்லி அரசிடம் இருந்து பறித்தபோது முதல் பிரச்சனை தொடங்கியது. மேலும், மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, துணை நிலை ஆளுநரின் அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்ததால், பிரச்சனை தீவிரமடைந்தது.

.