Kavin: கவினிற்கு ஆதரவாக பிக் பாஸ் பிரபலங்கள் கருத்து.
பிக் பாஸ் போட்டியாளரான கவினின் குடும்பத்தினருக்கு, சீட்டு வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அந்த செய்தி பரபரப்பை கிளப்பியது. இந்த செய்தி இன்னும் அவருக்கு தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவலாக பேசப்பட்டது. இதன்பின், இவருக்கு எதிராக சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். அதை தொடர்ந்து, இவருக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற காயத்ரி ரகுராம், காஜல் பசுபதி ஆகியோர் கவினிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் 3வது சீசனில் பங்கேற்று வெளியேறிய சாக்க்ஷி அகர்வாலும், கவினிற்கு ஆதரவாக தன் கருத்து வெளியிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் டிவிட்டர் வாசிகள் நேற்று '#WeStandForKavin' என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கியுள்ளனர்.
இது குறித்து காயத்ரி ரகுராம்,"நடிகர்கள் மீடியாக்களின் டி.ஆர்.பி-க்கான பலியாட்கள் அல்ல" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளரான காஜல் பசுபதியும் கவினிற்கு ஆதரவாக தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் கவினுடன் பெறும் மனக்கசப்பை சந்தித்த சாக்க்ஷி, "என்னை பின்பற்றுவர்கள் மற்றும் என் ரசிகர்கள் கவினின் குடும்பத்தை கேலி செய்ய வேண்டாம்." என்று வேண்டிக்கொண்டுள்ளார்.
இதுமட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். இதன் வெளிப்பாடாக, நேற்று டிவிட்டரில் இந்தியா அளவில் '#WeStandForKavin' என்ற ஹேஸ்டேக் டிரெண்டானது. இதுமட்டுமின்றி, கவினை பற்றி பேசும் பிரபலங்களில் வீடியோக்களையும் டிவிட்டரில் பதிவேற்றிய வண்ணம் உள்ளனர்.
முன்னதாக இந்த சீட்டு வழக்கில், சமந்தப்பட்ட 5 பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், இந்த பிரச்சனை காரணமாக கவின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆனால் அது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் நிகழ்ச்சி தரப்பிடமிருந்து வெளியாகவில்லை.