This Article is From Aug 26, 2019

'காமெடி கிங்' சாண்டி, 'மன்மத லீலை 2' கவின்-பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி K.S.ரவிகுமார்!

Bigg Boss 3 Tamil: நேற்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களை தொடர்புகொண்ட தொலைக்காட்சி, அவர்களின் வாழ்த்துகள் அடங்கிய ஒலிப்பதிவுகள் இடம்பெற்றிருந்தது.

'காமெடி கிங்' சாண்டி, 'மன்மத லீலை 2' கவின்-பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி K.S.ரவிகுமார்!

Bigg Boss 3 Tamil: தன் ஆசானாக சேரன், கே.எஸ். ரவிகுமார் அவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

Bigg Boss Tamil 3: முன்னதாக இந்த வாரத்தின் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கின் (Luxury Budget Task) ஒரு பகுதியாக பிக் பாஸ் போட்டியாளர்களிடம், உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அனைவரும் தங்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். நேற்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களை தொடர்புகொண்ட தொலைக்காட்சி, அவர்களின் வாழ்த்துகள் அடங்கிய ஒலிப்பதிவுகள் இடம்பெற்றிருந்தது. அப்போது, தன் ஆசானாக சேரன் (Cheran), கே.எஸ். ரவிகுமார் (KS Ravikumar) அவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அவரின் ஒலிப்பதிவும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது.

us6ovp68

'அகம் டிவி வழியே அகத்திற்குள்' என்று தன் பேச்சை துவங்கியிருந்த கே.எஸ். ரவிகுமார் சேரனை நலம் விசாரித்தார். சேரனை பாராட்டு மலையில் நனைத்த ரவிக்குமார் "எப்போதுமே நீ என் பழைய துணை இயக்குனர்தான்" என உரிமையுடன் குறிப்பிட்டார். "நீ ஜெய்க்கனும் உன்னுடைய குடும்பம் மாதிரி, உன்னுடைய மூன்று மகள்கள் மாதிரி நானும் வேண்டிக்கிற மாதிரி நானும் வேண்டிக்கிறேன்" என்று கூறிய ரவிக்குமார் "மூன்று மகள்கள் என நான் குறிப்பிட்டது வீட்டிற்குள் இருக்கும் மூன்றாவது மகளையும்தான்" என்றார். 

அவருடன் மட்டுமின்றி, வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். முதலில் லாஸ்லியாவிடம் (Losliya) துவங்கி "வீட்டிற்குள் லாஸ்லியாவாக நுழைந்த நீ, வெளியே வரும்போது 'கேய்ன்'லியாவாக வர வேண்டும்" என்றார். மேலும்,"திரையுலகமே உங்களை வரவேற்க தயாராக இருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

qlkvlvao

'காமெடி கிங்' சாண்டி (Sandy), 'மன்மத லீலை 2 ஹீரோ' கவின் (Kavin) (Just Kidding), நல்ல தோற்றம் கொண்ட நல்ல மனிதரான செரின் (Serin), நடிகர் மாதவனின் மறு உருவமான தர்சன் (Tharshan), 'ஆக்சன் ஹீரோ' முகென் (Mugen Rao), 'உள்ளே வெளியே' வனிதா (Vanitha), வெளிய இருக்க மாதிரி உள்ள இருக்க மாதிரி உள்ள இருக்க முடியலையேனு வருத்தப்படுற கஸ்தூரி (Kasthuri), என அனைவர் பற்றியும் ஒரு சில வார்த்தைகளை கூறிய கே.எஸ். ரவிகுமார், அனைவருக்கும் தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

'குருவை மறக்காத மாணவன்' என்று சாண்டியை பாராட்டிய கலா மாஸ்டர், 'வெற்றியுடன் நாட்டுக்கு திரும்ப வேண்டும்' என வாழ்த்திய லாஸ்லியாவின் ஆசிரியர் பிரகாஷ், "நான் கோவமாக இருந்தால் எனக்காக ஒரு பாடல் பாடுவர், எங்கள் பள்ளியின் சிறந்த பாடகர் அவர்தான்" என்று பாராட்டிய முகெனின் கனேஷ்வரி டீச்சர், ''அழகாக நடிப்பார்' என்று செரினை வாழ்த்திய அவரது ஆங்கில ஆசிரியர், கஸ்தூரியின் கண்களை கலங்க வைத்த அவரது மகளின் குறல், "நீ மட்டும் பக்கத்துல இருந்திருந்த உன்ன கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்திருப்பேன்டா. டேய் கவிராஜன், நீ கலைஉலகிற்கு கவினாக இருந்தாலும், எனக்கு எப்பவுமே கவிராஜன் தான்டா" என்று கவின் பற்றி தன் நேகிழ்ச்சியை பகிர்ந்து, 'வாய்ப்புகள் கொடுக்க மறுத்த பலர் முன் நீ வாழ்ந்து காட்டுன மட்டும் பத்தாது, வளர்ந்தும் காட்டனும்" என்று அறிவுரை வழங்கிய பூங்கோதை ஆசிரியை, 'தடைகளை தாண்டி செல்ல என்னுடைய வாழ்த்துகள்" என்று வாழ்த்திய தர்சனின் ஆசிரியர் துஷிதரன், என்று அந்த பகுதி முழுவதும் வாழ்த்துகளுடனே கழிந்தது.

.