Bigg Boss 3 Tamil: ஷெரின், சாண்டி பெண்ணைப் போன்று மேக்கப் போட்டுவிட்டார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. தற்போது வீட்டில், சாண்டி, ஷெரின், லோஸ்லியா, முகேன் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர்.
நேற்றைய நாள் பேட்ட படத்தின் பாடலோடு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சாண்டிக்கு தனது உடைகளை கொடுத்த ஷெரின், அவருக்கு பெண்ணைப் போன்று மேக்கப் போட்டுவிட்டார். அப்போது, சாண்டியை பிக் பாஸ் சந்தியா என்றழைத்தார். சாண்டி பெண் வேடத்துடன் மேகம் கருக்குது பாடல் பாடி ஆடினார்.
நால்வரும் இறுதி சுற்றுவரை முன்னேறி வந்தது குறித்த பயணம் குறித்து பேசினார்கள். ஸோமாட்டோ ஆப் பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்யும் டாஸ்க்கும் அது குறித்து விளம்பரம் செய்யும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா,ரேஷ்மா பசுபுலேட்டி, ஃபாத்திமா பாபு மற்றும் மீரா மிதுன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். வந்தவர்கள் லோஸ்லியா, ஷெரின், சாண்டி, முகென் ஆகியோருக்கு கிப்ட் வாங்கிட்டு வந்துள்ளனர்.
மனதை தொட்ட உணர்ச்சிகளின் குமுறல்களை பிக் பாஸ் போட்டோவாக வைத்துள்ளார். இதனைக் கண்டு, போட்டியாளர்கள், அவர்களது நியாபகங்களை வெளிப்படுத்தினர்.