This Article is From Aug 20, 2019

வனிதாவை 'வாத்து' என்ற கஸ்தூரி, உருவத்தை கேலி செய்கிறாரா?

Bigg Boss Luxury Budget Task: தொன்று தொட்டு வந்த ஸ்கூல், டீச்சர் (School - Teacher Task) டாஸ்க் தான், இந்த வார பிக் பாஸ் டாஸ்க்.

Advertisement
Entertainment Written by

Kasthuri, Vanitha, Bigg Boss Tamil Season 3: இன்றைய நிகழ்ச்சி 'வனிதா vs கஸ்தூரி' ஷோவாக மாறிவிட்டது.

Bigg Boss Tamil 3, Day 58: பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் கலவரங்கள் அனைத்தும் ஓய்ந்து, இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்கு (Bigg Boss Luxury Budget Task) திரும்பியுள்ளது. தொன்று தொட்டு வந்த ஸ்கூல், டீச்சர் (School - Teacher Task) டாஸ்க் தான், இந்த வார பிக் பாஸ் டாஸ்க். இந்த ஸ்கூல், டீச்சர் டாஸ்க், மீண்டும் பள்ளிக்கு போகலாம், கனா காணும் காலங்கள், என பிக் பாஸின் முதல் இரண்டு சீசன்களிலும் எதோ ஒரு வாரத்தில், தன் பகுதியை ஆக்கிரமித்தபடியே இருக்கிறது. அப்படி இந்த வாரத்தின் பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக தன் இடத்தை பித்திருக்கிறது, ஸ்கூல் டாஸ்க். கடந்த வாரங்களில் நாட்டாமை, மேனேஜர் என்று தலைமை பொறுப்பு வகித்த சேரனை (Cheran) தலைமை ஆசிரியராக நியமித்திருக்கிறார் பிக் பாஸ். அடுத்து ஆசிரியையாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார் கஸ்தூரி (Kasthuri). ஆக கவின் (Kavin), சாண்டி (Sandy), தர்சன் (Tharshan), முகென் (Mugen Rao), வனிதா (Vanitha), லாஸ்லியா (Losliya), செரின் (Sherin) என அனைவரும் குழைந்தைகளாகவே மாறிவிட்டனர்.

பள்ளிக் குழந்தைகள் என்ன என்ன சேட்டை செய்வார்களோ, அனைத்து சேட்டைகளையும் இவர்கள் செய்தார்கள். சாண்டி இந்த டாஸ்க்கில் வாண்டு பையனாக மாறினார். சேரன், கஸ்தூரியை பார்த்து 'மத்த கேர்ல்ஸ் எங்க?' என்று கேட்ட போது, 'இது டீச்சர் இல்ல ஆய!' என அங்கேயே அவர் சேட்டையை ஆரம்பித்துவிட்டார். அதனால்தான் என்னவோ அவர், தலைமை ஆசிரியரின் அருகில் அமர வைக்கப்பட்டுள்ளார். 

அருகில் இருக்கும் குழந்தையை கடிப்பது, விளையாட்டு பொருட்களை மற்றவர்கள் மீது எறிவது, அருகில் இருக்கும் குழந்தையிடம் பென்சில், ரப்பர் திருடுவது, கிருக்கி வைப்பது, அழுவது என அனைத்து சேட்டைகளையும் இந்த குழைந்தைகளாக மாறியுள்ள போட்டியாளர்கள் கச்சிதமாக செய்தார்கள். அப்போதுதான், இந்த பிரச்னை வெடித்தது. 

Advertisement

'இப்போ நான் கூப்பிட போறது?' என கஸ்தூரி கூற, லாஸ்லியா 'வனிதா!' என கூச்சலிட்டார். ஆனால், அது பிரச்னை அல்ல. அதன்பின் 'வாத்து' என்று சொல்லிவிட்டு சிறிய இடைவேளைக்கு பிறகு 'வாத்து பாடலை பாட வனிதாவை அழைக்கிறேன்' என்றார். இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்திருப்பது இந்த சம்பவம்தான்.

Advertisement

இதில், அதிக அதிருப்தி அடைந்தார் வனிதா, அது அவர் முகத்திலும் தென்பட்டது. ஆனால், கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாத வனிதா, டாஸ்க்கில் இருந்த மாதிரியே 'நீங்க என்ன வாத்து சொன்னீங்க!' என்று வனிதா கூற, சாண்டி மற்றும் சிலர் 'ஆமா, நீங்க சொன்னீங்க' என்று ஆதரவு குறல் கொடுக்க, வனிதா, டீச்சராக இருக்கும் கஸ்தூரியை மன்னிப்பு கேட்கும்படி வேண்டினார். அந்த இடத்தில் தீர்வு கிடைக்காததால், இந்த பிரச்னை தலைமை ஆசிரியர் சேரன் வரை சென்றது. 'ஸ்டூடன்ட்ஸ் தப்பு பண்ணா, டீச்சர் தண்டிக்கிறாங்க அல்ல, அப்போ டீச்சர் தப்பு பண்ணா ஏன் மன்னிப்பு கேட்க மாட்டீங்கிறாங்க ஸ்டூடன்ட்ஸ்க்கு?' என்று தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினார். இது மாணவர்களுக்கு என்ன எடுத்துக்காட்டு என்று முறையிடவும் செய்தார்.

Advertisement

ஆனால், அந்த பிரச்னை அத்துடன் முடியவில்லை. அன்றைய நாளுக்கான டாஸ்க் ஓய்ந்த பிறகும் தொடர்ந்தது. டாஸ்க் முடிந்தபின்னும் இது பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டேதான் இருந்தது. கஸ்தூரி அந்த சம்பவத்தை பற்றி விளக்கிக்கொண்டிருக்க, "நான் குண்டுனு சொல்ல வர்றீங்களா, முனு குழந்தைகளுக்கு அம்மாங்க நானு, எனக்கு பதினெட்டு வயசுல மகன் இருக்கான், கேலி கேலிதான், இது வேணும்டே பண்ற மாதிரிதான் எனக்கு தெரியுது" என கோபத்தை வெளிப்படுத்தினார் வனிதா.

Advertisement

முன்னதாக சென்ற வாரமே, பல பெரிய பிரச்னைகளின்போது வனிதா, கஸ்தூரி இடையே மறைமுகமாக சிறு சிறு விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்தது. ஆனால், இன்று அது நேரடியாக 'வனிதா vs கஸ்தூரி' ஷோவாக மாறிவிட்டது. முன்னதாக, கடந்த வாரம் கமல் ஹாசனுடனான (Kamal Hassan) உரையாடலின்போது, கஸ்தூரி நேரடியாக வனிதாவை வத்திக்குச்சி என்று குறிப்பிட்டார். பின்னர், இது அவர் வைத்த பெயர் அல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தார். 

தெரியாமல் விளையாட்டுக்கு கஸ்தூரி என்ற வார்த்தையை குறிப்பிட்டாரா? அல்லது காரணத்துடனேயே குறிப்பிட்டாரா?

Advertisement