Kavin, Cheran, Bigg Boss Contestants: வீட்டில் என்ன நடக்கிறது?
Bigg Boss Tamil 3: அப்பட்டமாக வீடு இரண்டு அணிகளாக மாறிவிட்டது என்பது பிக் பாஸின் கடந்த வார நிகழ்வுகள் காண்பிக்கின்றன. ஒரு அணியில் இவர்கள்தான் என உறுதியான நிலையில், மற்றொரு அணியில் யார் இருக்கிறார்கள், இல்லை இருக்கிறார்களா என்பது மிகவும் குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. மேலும் இந்த வார வீட்டின் தலைவர் செரின் (Sherin) எந்த அணியையும் சாராமல் போதுவான நிலைப்பாட்டில் இருக்கிறார். இன்னிலையில், நேற்றைய பிக் பாஸ், இந்த வாரத்தின் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் (Bigg Boss Luxury Budget Task), வனிதா - கஸ்தூரி இடையே சண்டை என அனைத்தையும் தாண்டி, சில முக்கியமான விஷயங்கள் தெரியவருகிறது. இவர்கள் வருத்தத்துடனும் அக்கறையுடனும் பேசுகிறார்களா, அல்லது அவர்களின் செல்வாக்கை பெற பேசுகிறார்களா என்ற சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக தர்சனிடம் (Tharshan) விவாதித்த சேரன் (Cheran). அடுத்து, செரினுடன் விவாதித்த கவின் (Kavin). இப்போது சந்தேகத்தை கிளப்பி இருப்பது இந்த இரண்டு சம்பவங்களும்தான்.
முதலாவதாக சேரன், தர்சனிடம் "ப்ளான் என்ன? இன்னும் ஐந்து ஆறு வாரங்கள் உள்ளன?'' என்று தன் உரையாடலை துவங்கினார். இந்த வாரம், சேரன் நாமினேஷனில் தர்சனுக்குதான் வாக்களித்திருந்தார். ''உன்னுடைய வெய்ட்டு தெரியனும்" என்று அந்த செயலை நியாயப்படுத்திவிட்டார். அதன்பின்தான் இந்த உரையாடல் துவங்கியது. ''எனக்கு ரெண்டு பேர் வரனும். ஒன்னு நீ, இன்னு லாஸ்லியா. ரெண்டு பேரையும் தட்டி கொடுத்து கொண்டு போகனும். நான் இருந்தன்ன இதை செஞ்சிக்கிட்டே இருப்பேன். ஒருவேளை நான் போயிட்டேன்னா எங்க வேணாலும் தட்டி விட்டிருவாங்க" என்று எச்சரித்தார். பின் இந்த வாரம் நாமினேஷனில் நடந்ததை பற்றி விவாதித்துவிட்டு நேரடியாக 'அன்று கமல் சார் கவின், முகென் யார் இருக்கலாம்னு கேட்டப்ப கவின்தான்னு சாண்டி மாஸ்டர் சொல்லிட்டாரு. இந்த பதிலை நாளைக்கு எல்லாருக்கும் சொல்ல மாட்டார்னு என்ன நிச்சயம்?' என்று நேரடியாக சாண்டியை பற்றி பேசினார். முன்னதாகவே முந்தைய நாள் இரவு, இந்த ஐந்து பேரின் கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற உரையாடல் வனிதா, சேரன், கஸ்தூரி ஆகியோரிடையே நிகழ்ந்தது. இவை இரண்டையும் பார்க்கும்போது, சேரன் தர்சனின் செல்வாக்கை பெற நினைக்கிறாரோ என பார்வையாளர்கள் மனதில் தோன்றுகிறது. இது தர்சன் மீது சேரன் காட்டும் அக்கறையா?
அதே நேரம், செரின் கவினிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, 'அவங்க அப்படி நினைக்கிறாங்கனா, நீ ஏன் வீட்டை விட்டு போகனும்னு நினைக்கிற?' என்ற கேள்வியுடனே இந்த உரையாடல் துவங்கியது. சென்ற வாரம் நடைபெற்ற பிரச்னை பற்றிய சேரன் மீதான அதிருப்தியை கவின் விளக்கினார். இவர்கள் அனைவருக்கும் செரன் மீதுள்ள குறிப்பான குற்றச்சாட்டு, ஆண்-பெண் என பெரிய விவாதம் நிகழ்ந்தபோது, இவர் அதுபற்றி எதுவும் பெசாமல் அமைதியாக இருந்தார் என்பதுதான். ஒருவேளை அவர் பேசி இருந்தால், இந்த பிரச்னை இந்த அளவு தீவிரத்தை அடைந்திருக்காது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. 'சேரன்- தர்சன் - லாஸ்லியா' இவர்களிடையேயான உறவு வேறு, என்கிட்டையும் சாண்டி அண்ணன் கிட்டையும் தான் ஒரு டைரக்டர் என்பதை ரெண்டு மூனு தடவ சொல்லிருக்காரு. ஆனால் சென்ற வாரம் கமல் சார் இதை பற்றி கேட்கும்போது, அவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், இதுநாள் வரை அதுபற்றி எங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் எங்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு எல்லாம் இல்ல. ஆனா, இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லைங்கிற மாதிரி போறதுதான் எனக்கு வித்தியாசமாக இருக்கு. அதனால, அவர்கிட்ட இருந்து விலகி இருந்துக்குறேன்' என்றார் கவின். 'இது நிஜமான விஷயம்தான்' என்று செரின் பதிலளித்தார். கவினுக்கு இந்த அதிருப்தி என்பது கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. அது அவரின் பேச்சுகளிலும் தெரிந்தது. முந்தைய நாளில் கூட லாஸ்லியாவிடம் (Losliya) இது பற்றி பேசியிருந்தார்
இந்த பிரச்னைகள், ஒருபுறம் கவின் - சேரன், ஆகியோரிடையே மறைமுகமாக எதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. மேலும் மறைமுகமாக சேரனை தாக்குகிறாரா கவின் என்ற கேள்வியை எழுப்புகிறது. மறுபுறம், 'சேரன் உண்மையிலேயே அக்கறையில்தான் இப்படி பேசுகிறாரா?' அல்லது 'தர்சனை அந்த அணியிலிருந்து பிரிக்க நினைக்கிறாரா?' என்ற கேள்வியை பார்வையாளர்கள் மனதில் எழுப்புகிறது.
இது குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் தெரிவியுங்கள்!