This Article is From Aug 26, 2019

உங்கள காலி பண்ணிட்டு இவங்கள காலி பண்றதுதான் ஜி ப்ளானு - 'கவின்' எதை சொல்கிறார்?

Bigg Boss Tamil 3 Promo: இன்றைய மூன்று ப்ரோமோக்களும் கவினை மையப்படுத்தியே வெளியாகியிருக்கிறது.

Advertisement
Entertainment Written by

Bigg Boss 3 Tamil, Kavin: கவின் என்ன சொல்ல வருகிறார்?

Bigg Boss Tamil 3: இன்றைய நாளுக்கான மூன்று பிக் பாஸ் ப்ரோமோக்கள் (Bigg Boss Promo) வெளியாகிவிட்டது. எதோ, இன்றைய நாள் கவினுக்கான (Kavin) நாள் போல மூன்று ப்ரோமோக்களும் கவினை மையப்படுத்தியே வெளியாகியிருக்கிறது. அதுவும், மூன்று ப்ரோமோக்களும் மூன்று விதத்தில் அமைத்துள்ளது. முதல் ப்ரோமோவின் எளிமிணேஷன் இல்லை என்று தெரியாமல் கவினை நாமினேட் செய்யும் போட்டியாளர்கள், இரண்டாவது ப்ரோமோவில் தான் ஏன் நாமினேட் செய்யப்பட்டேன் எனத் தானே சொல்லும் கவின், மூன்றாவது ப்ரோமோவில் முற்றிலும் வித்தியாசமாக தன் கருத்துகளை முன் வைக்கும் கவின் என மூன்று ப்ரோமோக்களும் மூன்று விதமாக அமைந்துள்ளது.

முதல் ப்ரோமோவில் ,இந்த வாரத்தின் நாமினேஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. முதலில் முகென் (Mugen Rao) 'எனக்கு அட்வைஸ் பண்ண கவின் அண்ணனே இப்பொ தப்பு செய்யிராரோ அப்படி தோனுது' என்று கவினை நாமினேட் செய்தார். இரண்டாவதாக தர்சன் (Tharshan) 'கவின் ப்ரோ தான் மைக்கை கழட்டுனது மட்டுமில்லாம லாஸ்லியா மைக்கையும் கழட்ட சொன்னது ரொம்ப தப்பு' என்று கவினை நாமினேட் செய்தார்.  அடுத்து சேரனும் (Cheran) 'நான் கவினை ஸ்ட்ராங்கா நாமினேட் பண்றேன்' என்று கவினை நாமினேட் செய்தார். ஆனால், இந்த வாரம் எளிமினேஷன் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாதெ!

முன்னதாக நேற்று நிகழ்ச்சியில் 'இந்த வாரம் எளிமினேஷன் கிடையாது. நீங்கள் ஓட்டு (Bigg Boss Vote) போட தேவையில்லை' என்பதை கமல் ஹாசன் அறிவித்திருந்தார்.

Advertisement

முதல் ப்ரோமோ இப்படியாக இருக்க, இரண்டாவது ப்ரோமோ, கவின் நாமினேட் ஆனதை உறுதி செய்தது. 'நான் தான காரணம்?' என்று லாஸ்லியா (Losliya) கேட்க "காமெடி பண்ணாத பா. இது நடந்துதான் ஆகனும். உன்ன காப்பாத்தனும் அப்படினு நெனைக்கிறவங்க, என்ன உன்கிட்ட இருந்து பிரிக்கத்தான் பாப்பாங்க" என்று பதிலளித்தார். பின் அவர்களுக்கிடையேயான உரையாடல் அங்கு இடம்பெற்றிருந்தது, வழக்கம்போல ஒரு Background BGM-உடன்!

Advertisement

முதல் இரண்டு ப்ரோமோக்கள் இப்படி இருக்க, மூன்றாவது ப்ரோமோ இவை இரண்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த ப்ரோமோ, எதோ டாஸ்க் (Bigg Boss Task) நடைபெறுவதை உணர்த்துகிறது. கவின் மத்தியில் அமர்ந்துகொண்டிருக்க சாண்டி (Sandy) கேள்வி கேட்கிறார். ''நட்புக்கு உட்டுக்கொடுத்துட்டு போகனும்னு சொல்றீங்க பாத்தீங்களா?" என சாண்டி கேட்க "உட்டுகொடுத்துட்டு போகனும்னு சொல்லல, என் பிரண்ட்ஸை உட்டுகொடுத்துட்டு போனதில்லைனு சொல்றேன்'' என்று பதிலளித்தார். 

Advertisement

'எனக்கும் அது வேணும்னு ஆசைப்படலாமே?' என சாண்டி மீண்டும் கேள்வி கேட்க "நான் ரெடி, அதனால தான் 'Game On' போட்டுட்டு நாணே பர்ஸ்ட் வந்துட்டனே, நான் பர்ஸ்ட் வர்றேன் அப்படினாலே எல்லாரையும் அடிச்சுட்டு முன்னாடி போகப்போறேன்னு தான அர்த்தம். செய்யிரனா இல்லையானு பாருங்க.  உங்கள காலி பண்ணிட்டு இவங்கள காலி பண்றதுதான் ஜி ப்ளானு" என்றெல்லாம் பேசினார். (கவின் இப்படியெல்லாம் பேசமாட்டாரே!)

சரிங்க பிக் பாஸ், இந்த மூனு ப்ரோமோ மூலமா என்ன சொல்ல வர்றீங்க?

Advertisement