This Article is From Aug 31, 2019

"அடி வாங்குனது நானு, அதனால கப்பு எனக்குதான்" - கவின்!

Bigg Boss Promo: மீண்டும் கமல் 'நீங்கள் ஏன் வெற்றியாளராக வர வேண்டும்?' என்ற கேள்வியை முன் வைத்தார்.

Advertisement
Entertainment Written by

Bigg Boss 3 Tamil, Kavin: அடி வாங்குனது நானு, அதனால கப்பு எனக்குதான்

இன்று ஆவலாக காத்துக்கொண்டிருந்த மூன்று ப்ரோமோக்களும் வழக்கமான சனிக்கிழமை போல தமதமாகவே வெளியாகின. அதில் முதல் ப்ரோமோ நிலிந்துவரும் பாரம்பரிய கலைகள் பற்றி கூறியது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்காக வீட்டிற்குள் சென்ற கலைஞர்கள், இன்று கமலுடன் மேடையில் நின்று கொண்டிருந்தனர். எப்போது கமலை மட்டுமே கொண்டு காட்சி அளிக்கும் அந்த மேடை, இன்று கலைஞர்களுடன் கலர்புல்லாக காட்சியளித்தது. முதல் ப்ரோமோ இப்படியாக இருக்க இரண்டாவது ப்ரோமோ வனிதா-கமல் ஆகியோருடனான உரையாடல் பற்றி இருந்தது. கேப்டன் டாஸ்கின்போது அவர் வரிசைபடுத்திய அதிக பிரபலம் கொண்ட நபர்களின் பட்டியலில் கமலின் கேள்வி இருந்தது, குறிப்பாக முகெனிற்கு 8வது இடம் அளித்தது. 'எங்க போனாலும் எமன் தான் கொண்டு போய் சேர்க்கிறார் என்பதற்காக, கடவுள்களிலேயே சிறந்த கடவுள், எமன்தான் என்று சொல்லிட முடியுமா?' என்ற கமல் 'இல்லை நீங்க எமன் வேஷம் போட்டதுனால அந்த கேள்வி நியபகம் வந்துச்சு' என்று அதற்கான காரணத்தை கொடுத்தார்.

மீண்டும் கமல் 'நீங்கள் ஏன் வெற்றியாளராக வர வேண்டும்?' என்ற கேள்வியை முன் வைத்தார். முகென் 'அப்பா மாதிரி வாழ்க்கைல தோத்திற கூடாதுனு எப்போவுமே சொல்வாரு. நான் எந்த அளவுக்கு வெற்றி பெறனும்னு எங்க அப்பா அசை படுறாரோ அதே அளவுக்கு ஒரு மகனா எங்க அப்பா வெற்றி பெறனும் என்கிறது என்னோட ஆசை'  என்று தன் அப்பாவிற்காக தான் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தை கூறினார். அடுத்து கவின் 'அதிகமா அடி வாங்குனது நானு, அதனால கப்பு எனக்குதான்" என்று காமெடியாக சொன்னார்.

Advertisement

இப்படியான நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும் என்ற கேள்விக்கு அனைவரும் வனிதா என்று கைகாட்ட, கடைசியில் வனிதாவே 'நானும் என் பெயரையேதான் சார் சொல்லியிருப்பேன்' என டிவிஸ்ட் கொடுத்தார். ஆன, இந்த வாரம் எளிமினேஷன் இல்லைங்கிற விஷயம் உங்களுக்கு தெரியாம் போச்சே. 

Advertisement

அதுவும் இல்லாமல், வனிதாவே நினைத்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவர் வெளியே செல்ல வாய்ப்பில்லை. எனென்றால், இந்த வார கேப்டன் அவர்தான். அதனால், இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் வராது. அதனால், அவரின் பெயரை நாமினேஷனில் சேர்க்க வேண்டும் என்றாலே அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும். அப்படியே அடுத்த வாரம் நாமினேட் செய்தாலும், மக்கள் வாக்களித்தால்தான் அவர் வெளியேற முடியும். அப்படியே ஒருவேளை, மக்கள் வாக்களித்தலும், அதற்கு அடுத்த வாரம்தான் அவர் வெளியேற்றப்படுவார்.

அப்புறம், இந்த வாரம் வெளியே போகப்போறேன்னு பாட்டு எல்லாம் பாடுன கவின், கடைசி வாரம், கடைசி வாரம்னு எக்ஸ்ட்ராவா தூங்கின செரின், இந்த வாரம் எளிமினேஷன்  கிடையாது, எளிமினேஷன்  கிடையாதுஎளிமினேஷன்  கிடையாது!

Advertisement