Bigg Boss Tamil, Kavin, Sandy: சாண்டிக்காக பாட்டு பாடும் கவின்.
Bigg Boss Tamil 3: இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை, பாரம்பரிய கலைஞர்களுடனேயே துவங்கியது. பிக் பாஸ் வீட்டிற்குள் 3 நாட்கள் பயிற்சி அளிக்க சென்ற அனைத்து கலைஞர்களும் ஒருமித்து பாட்டுப்பாட மேடையின் மேல் நுழைந்தார் கமல் ஹாசன் (Kamal Hassan). நுழைந்தது மட்டுமில்லாமல், அவர்களுடன் உரையாடிவிட்டு 'தன்தனத்தோம் என்று சொல்லியே...வில்லினில் பாட' என்று ஒரு வில்லுப்பாட்டையும் எடுத்துவிட்டார். பாடி முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் என கைகாட்ட, காலையில் பாட்டு போட எழுந்து ஆட்டம் ஆடியது. செரின் (Sherin), தர்சன் (Tharshan), லாஸ்லியா (Losliya), கவின் (Kavin), சாண்டி (Sandy) என இவர்கள் கதைத்த காட்சிகள் என அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. அடுத்து அகம் டிவி வழியே அகத்திற்குள்...
கலைகளில் சிறந்து விளங்கியவர் யார்?
முதல் நாள் பொம்மலாட்டம் கற்றுக்கொடுக்க வீட்டிற்குள் வந்த காலீஸ்வரன் அவர்கள், வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் ஒவ்வொரு வரிகளில் விளக்கத்தை சொன்னார். தர்சனுக்கு 'ஊராளி மகராசனுக்கு வாராராம் சொம்பு தூக்கி அப்படிங்கிற மாதிரி இவரோட அறிவுக்கு நம்ம அப்படியே சொம்பு தூக்கி நிக்கலாம். முகெனுக்கு (Mugen) "ஓரு கரண்டி மாவுல ஊருக்கெல்லாம் தோசைனு சொல்லுவாங்க, நிலா மாதிரி அவரு, பளிச்சுனு சொன்னதெல்லாம் புடுச்சுக்குறாரு'' என்று பாராட்டினார். அறிவுக்கு பாத்திரமா விளங்கக்கூடியவர் சேரன் (Cheran), பட்டுக்குஞ்சம் செரின் என அனைவரையும் பாராட்டினார். இறுதியில், மிகச்சிறந்த் போட்டியாளர் என்று சாண்டியை பெயரிட்டார். கலையில் மிகுந்த அற்பணிப்பை கொண்டவர் என்று பாராட்டினார்.
நீங்கள் இந்த போட்டியில் வெற்றியாளராக வர வேண்டும்?
அடுத்து, நீங்கள் ஏன் இந்த போட்டியின் வெற்றியாளராக வர வேண்டும் என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்தார். இந்த வாரத்தின் டாஸ்கின்போது சொன்னதையே அனைவரும் மீண்டும் அடுக்கினர். முகென் 'அப்பா மாதிரி வாழ்க்கைல தோத்திற கூடாதுனு எப்போவுமே சொல்வாரு. நான் எந்த அளவுக்கு வெற்றி பெறனும்னு எங்க அப்பா அசை படுறாரோ அதே அளவுக்கு ஒரு மகனா எங்க அப்பா வெற்றி பெறனும் என்கிறது என்னோட ஆசை' என்று தன் அப்பாவிற்காக தான் வெற்றி பெற வேண்டும் என்றார். கவின் 'அதிகமா அடி வாங்குனது நானு, அதனால கப்பு எனக்குதான்" என்று வடிவேலு ஸ்டைலில் தனக்கான காரணங்களை சொன்னார்.
இந்த வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும்?
இந்த வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களிடம் கருத்து கேட்டார் கமல் ஹாசன். வழக்கம்போல வனிதாவிற்கு (Vanitha) வாக்குகளை வாரி வழங்கினார்கள். சாண்டி, கவின், தர்சன், முகென், அட வனிதாவே அவருடைய பெயரைத்தான் சொல்லிக்கொண்டார். சேரன் மற்றும் செரின் கவினின் பெயர்களை குறிப்பிட்டனர். கடைசியாக இருந்த லாஸ்லியா, தன்னைத்தானே வெளியே போக வேண்டும் என்று குறிப்பிட்டுக்கொண்டார்.
யாராவது ஒருவர் வீட்டிற்குள் வரவேண்டுமென்றால்?
அடுத்து, 'வனிதாவைப்போல, முன்னதாக வீட்டை விட்டு வெளியேறியவர்களில் யாராவது ஒருவரை திரும்ப வீட்டிற்குள் கொண்டுவருவதாக இருந்தால் யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வியை ஒவ்வொரு போட்டியாளரிடமும் முன்வைத்தார். முதலில் இருந்த சாண்டி, கவின், முகென் ஒருமித்த குறலில் 'நைனா!' என்று வாக்களித்தனர். அடுத்து வனிதா, 'நான் வந்ததே போதும் சார், வேற யாரும் வேண்டாம்' என்றார். செரின் யாரை சொல்லியிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, சாக்க்ஷி. தர்சனும் மோகன் அப்பா என்று மோகன் வைத்யாவின் பெயரையே குறிப்பிட்டார். அடுத்து லாஸ்லியா சற்று வித்தியாசமாக அபிராமியின் பெயரை குறிப்பிட்டார். 'சேரன் எங்கடா?' நீங்களும் அதைதான யோசிக்கிறீங்க. சேரன் சொன்ன பெயரை சென்சார் செய்துவிட்டார் பிக் பாஸ். அப்படி சென்சார் செய்யும் அளவுக்கு யார் பெயரை சேரன் சொல்லி இருப்பார் என்பது நம் அனைவராலும் ஊகிக்க முடிந்ததே.
கவின் பாடிய பாட்டு, அதற்கு சாண்டி கொடுத்த கவுன்டர் பாட்டு!
அடுத்து நாமினேஷனில் இருந்த நான்கு பேரையும் அழைத்து ஒரு பொம்மலாட்ட பொம்மையை கொடுத்து, அந்த பானியிலேயே, யாராவது ஒருவர் அல்லது அனைவருக்கும் ஏதாவது அறிவுரை வழங்க வேண்டும் நினைத்தால் சொல்லுங்கள் என கேட்டபோது முகென், செரின், வனிதா என வரிசையாக வந்து ஒவ்வொருவர் பற்றியும் சொன்னார்கள். வனிதா பேசி முடித்ததும், "பாருங்க, அந்த பொம்மைய கூட பேச விடமாட்றாங்க" என்று கேலி செய்தார்.
அடுத்த வந்த கவின் சாண்டியை மட்டும் தனியாக அழைத்து அவருக்காக ஒரு பாட்டு பாடினார்.
நான் போன பின்னே, கலங்காத அண்ணே
இனிமேல் உனக்கு பாரமே இல்ல...
நீ போ முன்னே, பாக்காத பின்னே
உன்தன் திறமைக்கு வானமே எல்ல...
இனிமே கொஞ்சம் பாத்து...
உன் ப்ளான் எல்லாம் லைட்டா மாத்து...
சாண்டி இல்லைனா கவலையே இல்லைனு
இருக்குற எல்லாரும் சொல்வாங்களே...
இது ஒன்னு போதுமே போட்டில நீ ஜெய்க்க
தம்பி ஆசைய நிறைவேத்து ணே...
அண்ணா அண்ணா...சாண்டி அண்ணா
நான் இல்லைனாலும் நீ ஜெய்க்கனும் ணே...
வெளிய போனது லாலாவ பாப்பேன்
பைனல்ஸ் வரும்போது உன்கையில் சேர்ப்பேன்...
லாலே..லா..லா. லல.. லாலே...
சாண்டி எப்பொவுமே கவுன்டர் கொடுக்குறத வாடிக்கையா வச்சிருப்பார். அப்படி, கவின் பாடுன பாட்டுக்கு பாட்டுலையே ஒரு கவுன்டர் கொடுத்தார்
காட்றியா டாட்டா.. இரு கொஞ்சம் குவைட்டா..
கமல் சாரு சொல்வாரு...யூ சேவ் ரைட்டா...
இவர்கள் இருவருக்கு இடையில் இருக்கும் நெருக்கத்தை இந்த பாடல்களே சொல்லிவிடும்.