This Article is From Aug 30, 2019

பிக் பாஸ் 'கவின்' குடும்பத்தினருக்கு மோசடி வழக்கில் சிறை தண்டனை!

Bigg Boss Tamil: 2007-ஆம் ஆண்டு, ஏலச்சீட்டு நடத்திய கவினின் தாய் உட்பட ஐந்து பேர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பத்தராமல் தலைமறைவானதாக குற்றச்சாட்டு.

பிக் பாஸ் 'கவின்' குடும்பத்தினருக்கு மோசடி வழக்கில் சிறை தண்டனை!

Bigg Boss Tamil Season 3, Kavin: சர்ச்சையில் சிக்கியுள்ள கவினின் குடும்பத்தினர்

Bigg Boss Tamil 3:தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சரவணன் மீனாட்சி' என்ற தொடரிலும், 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற திரைப்படம் மூலமாகமும் மக்களுக்கு அறிமுகமானவர் கவின் (Kavin). இவர் தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று விளையாடி வருகிறார். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 60 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக பயணித்து வருகிறார். வீட்டிற்குள் இருக்கும் அவர் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், வீட்டிற்கு வெளியில் அவரது குடும்பமும் ஒரு பிரச்னையை சந்தித்துள்ளது. அவரது குடும்பத்தினரை சீட்டு பண மோசடி வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்து சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் கவின் என்கிற கவின் ராஜ். இவர் தாய் ராஜலட்சுமி உட்பட சொர்நாதன், அருணகிரிநாதன், தமையேந்தி, ராணி என்று ஐந்து பேர் சேர்ந்து திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஏலச்சீட்டு நடத்திய இவர்கள் 2007-ஆம் ஆண்டு, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பத்தராமல் தலைமறைவானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின் இந்த பண மோசடியில் பாதிக்கப்பட்ட 29 பேரும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். அப்படி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரனை நடத்தப்பட்டதுள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற விசாரனையில், இந்த வழக்கில் சமந்தப்பட்ட 31 சாட்சிகளிடம் நீதிபதி விசாரனை நடத்தியுள்ளார். 31 பேருமே இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்ன காரணத்தினால், நீதிபதி இந்த ஐந்து பேரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.

மேலும், இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பணமும், 2007 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, அந்த 1 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வட்டியுடன், மொத்தம் 55.10 லட்சம் ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும், அப்படி செலுத்த தவறினால் இவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில், தன் குடும்பம் உறவினர்கள் பற்றி பேசுகையில், சில ஆண்டுகள் முன்தான் குடும்பத்துடன் ஒரு பிரச்னை காரணமாக சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு குடிபெயர்ந்ததாகவும், அப்போது தன் உறவினர்கள் யாரும் அடைக்களம் தரவில்லை, நண்பர்களே உதவினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

முன்னதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீராவின் (Meera Mithun) மீது, பண மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அடுத்து சம்பள பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுவதாக, நிகழ்ச்சி தரப்பிலிருந்து மதுமிதா (Madhumitha) மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்னை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது, கவினின் குடும்பத்தினரும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
 

.