இது கேப்டன் டாஸ்கின் ஒரு பகுதியா?
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தொடர்ந்து மூன்றாவது நாளாக லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. பொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது வில்லுப்பாட்டு பாட போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. வில்லுப்பாட்டு எப்படி பாடுவது என்று கற்றுக்கொண்ட இரண்டு அணியினராக இருந்த போட்டியாளர்கள், தனித்தனியாக பிரிந்து வில்லுப்பாட்டு பாடினர். முதலில் சாண்டி, வனிதா, முகென், லாஸ்லியா, குழந்தைகளை தனியாக விட்டு வேலைக்கு செல்லும் பெற்றோரின் தவறுகளை வில்லுப்பாடலாக பாடினார்கள். அதன்பின் வந்த சேரன், கவின், தர்சன், செரின் அணி, ஆடம்பரத்திற்காக கடன் வாங்கி அவதிப்படும் குடும்பத்தை பற்றிய பாடலை பாடினார்கள். இதில் முதலில் பாடிய சாண்டி அணியே சிறப்பாக பாடியதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த வாரத்திற்கான சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர்கள்!
பின் இந்த வாரத்திற்கான சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியை கேட்டார் பிக் பாஸ். முன்னதாகவே கேப்டன் போட்டிக்கு வனிதா தேர்வாகியுள்ளதால், இரண்டு சிறந்த போட்டியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க சொன்னார். முதலில் முகென் டாஸ்கின் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சேரன் மொத்த வாரத்திற்கான சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மோசமான போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு கவின் தன்னையும் தர்சனையும் தேர்வு செய்யச்சொல்ல அந்த அறிவிப்பை 'முன்னாள் கேப்டனாகிய நான்' என செரின் அறிவித்தார். பின் அனைவரும் கலைந்து செல்ல, வனிதா 'இந்த வாரம் சிறைக்கு அனுப்பினால், நாம் போராட்டம் செய்வோம்' என்று குறல் கொடுத்தார். அதற்கு கலைந்து சென்ற அனைவரையும் அப்பொழுதே அழைத்து 'போராட்டம் எல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாம்' என கவுன்டர் கொடுத்தார். அங்கேயே அவரது அலப்பறை ஆரம்பித்துவிட்டது.
இன்று வெளியான ப்ரோமோக்களும் அந்த அலப்பறை தொடர்கிறது என்பதை காண்பித்தது. எல்லாரும் விதிகளை பின்பற்றுங்க என லாஸ்லியா சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது கவின் மைக்கை கைகாட்ட, 'கவின் நீங்க மைக்ல கை வைக்காதீங்க, மைக்க வந்து பிக் பாஸ் சொல்றதுக்கு முதலே மாட்டறது நான்தான். இதுவரைக்கும் ஒருதடவ கூட பிக் பாஸ் என்ன மைக்க மாட்டுங்கனு சொன்னதில்ல' என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே, 'லாஸ்லியா மைக்க மாட்டுங்க' என்று பிக் பாஸ் கலாய்க்க துவங்கிவிட்டார். போக போக இன்னும் கலாய்ப்பாரோ!
மற்றொரு ப்ரோமோவில், இந்த வீட்டில் யார் பிரபலமானவர் என்ற கேள்வி வனிதாவிடம் கேட்க்கப்பட்டிருந்தது. பிரபலமானவர்களை வரிசைப்படுத்த துவங்கிய வனிதா, 'நான்தான் இந்த வீட்டில் மிகவும் பிரபலமானவர்' என முதலிடத்தை தனக்குத்தனே அளித்துக்கொண்டார். இரண்டாவது இடம் சேரன் அவர்களுக்கு, அடுத்த இடத்தில் லாஸ்லியா, மூன்றாவது இடம் அவருக்கு. இப்படி அடுக்கிய அவர் முகெனிற்கு இறுதி இடத்தை அளித்தார். இதில், 4 மற்றும் 5வது இடங்களை சாண்டி கவினும், 6 மற்றும் 7வது இடங்களை தர்சன், செரினும் பிடித்துள்ளனர். இந்த டாஸ்க்கின் துவக்கத்தில் முகென், சேரன், மற்றும் வனிதா ஆகிய கேப்டன் போட்டியாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். அதனால், 'ஒருவேளை இது கேப்டன் டாஸ்கின் ஒரு பகுதியாக இருக்குமோ' என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று ப்ரோமோக்களில் ஒரு ப்ரோமோ கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சியாக இருக்கும். இன்று மாற்றாக தர்சன்-செரினின் காதல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
நேற்றைய நாளில் 'லவ்லி' மூமென்ட்!
நேற்றைய நாளில் இரவில், கவின் படுக்கை அறை கண்ணாடியில் 'Daddy & Mama, We Miss You' என்று ஹார்டின், ஸ்மைலி போட்டி லாலா பாப்பாவிற்கு மெசேஜ் அனுப்பினார்.