Bigg boss kavin: இந்த வாரம் வீட்டின் தலைவரானார் மதுமிதா
Bigg boss 3 tamil: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பல செய்திகளை கொண்டுவந்துள்ளது. அவற்றில் முக்கியமான செய்தி என்னவென்றால் இந்த வாரத்திற்கான தலைவர் யார்? இந்த வார வீட்டுத் தலைவருக்கான போட்டி இன்று நடைபெற்றுள்ளது. மேலும் அந்த போட்டியில் மதுமிதா வெற்றிபெற்றுள்ளார். அதில் வெற்றி பெற்றவுடன் மதுமிதா கொடுத்த சவுண்ட், அதற்கும் மேலாக தானே வெற்றி பெற்றதுபோல சேரனின் கொண்டாட்டம் இருந்தது
ஒருபுறம் இப்படி இருக்க, மறு புறம் வீடு சண்டைகள் நிறைந்ததாகவே இருந்தது. முதலில் நேற்றைய பிரச்னை இன்னும் ஓயவில்லை எனத் தெரிகிறது. இந்த வாரம், வனிதா, அபிராமி, மதுமிதா என தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக உருவாக்கிய பிரச்னைகள் வீட்டில் ஒரு அணியை உருவாக்கிவிட்டது. முகெனில் ஆரம்பித்து கவின், தர்சன், சாண்டி, லாஸ்லியா என ஐந்து பேர் அந்த அணியில் இணைந்துள்ளனர்.
இப்படியாக பிரச்னைகள் இருந்தாலும், வீட்டையும் தன்னை சுற்றியிருப்பவரையும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார் சாண்டி. பாட்டு பாடுவது, ஆட்டம் ஆடுவது, காமெடி செய்வது என அந்த அணி வீட்டில் தன் பொழுதை போக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியாக இருக்க இன்று மீண்டும் ஒரு புதிய பிரச்னை உருவாகியிருக்கிறது. இம்முறை, இந்த லிஸ்டில் இணைந்திருப்பது கஸ்தூரி.
இது முதல் பிரச்னையில் அனைவரும் கத்தி கூப்பாடு போட்டு, அந்த இடத்திலிருந்து வெளியேறினார்கள் சாண்டி, முகென், தர்சன், சாண்டி, லாஸ்லியா. பின் அவர்களை பின் தொடர்ந்த கஸ்தூரி, இந்த பிரச்னையை தொடர்ந்து சாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை கண்ட கவின் 'உங்களிடம் பேசினால் எங்க அண்ணனுக்கு கேஸ் வாங்கி கொடுத்துருவீங்க' என்றபடி சாண்டியை தனியாக அழைத்து செல்கிறார். அப்போதும், விடாமல் பின் தொடர்ந்தார் கஸ்தூரி. உங்களிடம் எங்களுக்கு பேச விருப்பம் இல்லை என்று கவின் சொல்ல, அப்போ நீங்க அந்த 4 பொண்ணுங்க கிட்டையும் பேசிருக்க கூடாது என்றார் கஸ்தூரி.
இது கவினை கோவப்படுத்தியது. அந்த நான்கு பெண்களிடமும் அவர்களின் விருப்பத்துடனே பேசினேன். இதுக்கு மேல அதை பேசாதீங்க என்று கோவப்பட்டார் கவின்.
இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த பிரச்னை பேசப்படுகிறது. இந்த பிரச்னையில் தான் செய்தது தவறு என்று சொல்லி கவின் மனிப்பு கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன. இருந்தும் கவினுடன் ஏதாவது பிரச்னை வந்தால், அனைவரின் வாதமும் இந்த நான்கு பெண்கள் என்ற பிரச்னைக்கே திரும்புகிறது. முதலில் வனிதா, அடுத்து மதுமிதா, தற்போது கஸ்தூரி. ஒவ்வொரு முறை இந்த பிரச்னையை பற்றி பேசும்போதும் கவின் கோவத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார், இன்று போலவே.
இதன் விளைவாக 'வீட்டில் உள்ளவர்கள் இந்த பிரச்னையை திரும்ப திரும்ப பேசி கவினை டிரிகர் செய்கிறார்களா?' என்றெல்லாம் சிலர் சிந்திக்கின்றனர்.
பிரச்னைகளை வந்தபடியாகவே இருந்தாலும், அவர்கள் சந்தோசமாக இருப்பதை எப்போதும் மறக்கவில்லை. என்ன பிரச்னையாகவே இருந்தாலும் நாங்கள் அதை சந்தோசமாக எதிர்கொள்வோம் என்றே இருந்தார்கள் இந்த ஐந்து பேர். அதற்கு சான்று அவர்கள் பாடிய 'We are the boys-uuu' பாடல். இவர்கள் பாட்டு பாடி மகிழ, அந்த பாடல் வீட்டில் சிலரை கோவமும் படுத்தியது.
நேற்றைய நாளின் ஒரு பகுதியாக ஹலோ (Helo) மெசேஜ் டாஸ்க் வழங்கப்பட்டது. லாஸ்லியா 'உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என தளபதி டயலாக்கை பேச, கவின் 'ஒருத்தர் மேல நீங்க வச்சிருக்க விஸ்வாதத்த காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என தல டயலாக் பேசினார். இவர்களுக்கு இடையில் சாண்டி 'மேயிற மாட நக்குற மாடு கெடுத்த மாதிரி, சும்மா இருந்த என்ன சொறிஞ்சு விட்டுட்டாங்க குருநாதா' என கவுண்டமனி டயலாக் அடித்தார். அடுத்த வந்த வனிதா, "வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, I am Back, I am Waiting' என சூப்பர் ஸ்டாரில் ஆரம்பித்து, தல, தளபதி வரை அனைவரின் டயலாக்கை பேசித் தீர்த்துவிட்டார். இந்த டாஸ்க்கின் முடிவில், அற்புதமாக பாட்டுப்பாடிய அபிராமி சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.