Bigg Boss Tamil: பாரம்பரியத்திற்கு திரும்பும் பிக் பாஸ் வீடு
Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் (Big Boss Luxury Budget Task) அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சில வாரங்களுக்கு முன் எப்படி வீட்டை இரண்டு கிராமங்களாக பிரித்தாரோ, அதே மாதிரி இந்த வாரமும் வீட்டை இரண்டு ஊர்களாக பிரிக்கப்பட்டது. வீட்டை கிராமமாக மாற்றியது மட்டுமல்லாமல், முழுவதுமாக கிராம வாழ்க்கையையே வீட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த டாஸ்க் மூலம் கலாச்சார வாழ்க்கையை வாழ்வது மட்டுமின்றி கலாச்சார கலைகளையும் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் இதற்காக, கலைஞர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் கற்றுக்கொடுக்கும் கலைகளை கற்றுக்கொண்டு, மாலையில் அந்த கலைகளை அரங்கேற்ற வேண்டும். இந்த டாஸ்கிற்காக சாண்டி(Sandy), முகென் (Mugen Rao), லாஸ்லியா (Losliya), வனிதா (Vanitha) ஒரு கிராமத்தினராகவும், சேரன் (Cheran), கவின் (Kavin), செரின் (Serin), தர்சன் (Tharshan) ஒரு கிராமத்தினராகவும் பிரிக்கப்பட்டனர்.
இந்த டாஸ்கின் முதன் கலையாக பொம்மலாட்டம் இடம்பெற்றது. இந்த கலையை கற்றுக்கொடுக்க காலீஸ்வரன் என்ற கலைஞர் உள்ளே வந்தார். இவர் இதுவரை 5000 மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டார் பிக் பாஸ். வீட்டிற்குள் வந்த அவர், சுமேரிய நாகரீகத்தில் தோன்றிய இந்த பொம்மைகள் பற்றிய வரலாற்றை கூறி, இந்த பொம்மைகளின் வகைகள், அதன் அசைவுகள், அவற்றை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொடுத்தார். அதை கற்றுக்கொண்ட வீட்டு உறுப்பினர்கள், மாலையில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சியை நடத்தினர். சேரன் தலைமையிலான அணி மது ஒழிப்பு பற்றி பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தியது, மறுபுறம், வனிதா தலைமையிலான அணி கூட்டு குடும்பம் பற்றி நிகழ்ச்சியை நடத்தியது. இறுதியில், வனிதா தலைமையிலான அணி வெற்றி பெற்று பரிசுகளை பெற்றார்கள். முகெனிற்கு சிறப்பு பாராட்டெல்லாம் கிடைத்தது.
நேற்றைய நாள் அப்படியாக இருக்க, இன்றைய நாளின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தெருக்கூத்து கலை இடம்பெற்றுள்ளது. தெருக்கூத்து கலைஞர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு தெருக்கூத்து எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறார்கள்.
முன்னதாக, தாங்கள் இந்த போட்டியில் வெற்றியாளராக என்ன தகுதிகளை கொண்டுள்ளீர்கள் என்ற கருத்து போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. மேலும் அப்போது ஒவ்வொருத்தரிடமும் யார் ஒருவர் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி எதிர் கேள்விகளை கேட்கிறார்களோ, அவர்கள் தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்வாவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு நாளுக்கு முன்பு துவங்கிய இந்த டாஸ்க் நேற்று முடிவடைந்தது. இதில், வனிதா சிறப்பாக செயல்பட்டதாக, நேரடியாக கேப்டன் பதவிக்கான போட்டிக்கு தேர்வானார்.
போட்டியாளர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியலும் 3 காய்ன்களும் கொடுக்கப்படும். மேலும், இந்த காய்ன்களை அதிகமாக சம்பாதிக்க ஒவ்வொருத்தருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த போட்டியில் அதிக காய்ன்களை சேர்த்தவர் கேப்டன் பதவியில் பங்குகொள்பவராக இருந்தால், அவருக்கு அந்த சமையத்தில் ஒரு கூடுதல் சலுகை வழங்கப்படும் என்ற ஒரு டாஸ்கையும் பிக் பாஸ் அறிவித்திரு