Bigg Boss 3 Tamil : டி-சர்ட்களை அனுப்பி வைத்த சாண்டியின் மனைவி
Bigg Boss Tamil 3, Day 64: பிக் பாஸின் நேற்றைய நிகழ்ச்சி, நாமினேஷன், பிக் பாஸ் டாஸ்க், கேலி, கொண்டாட்டம், பாட்டு என அனைத்தையும் தாண்டி இன்னொரு ஆச்சரியத்தையும் இணைத்து வைத்திருந்தது. அது நமக்கான ஆச்சரியம் மட்டுமல்ல, வீட்டிற்குள் இருக்கும் கவின் (Kavin), சாண்டி (Sandy), தர்சன் (Tharshan), முகென் (Mugen), லாஸ்லியா (Losliya) என கடந்த வாரம் 'We are the Boys' என்று சுற்றித்திருந்த ஐந்து பேருக்குமான ஆச்சரியம். சாண்டியின் மனைவி இந்த ஐந்து பேருக்கும் ஒரு ஸ்பெஷல் டி-சர்ட்டை பரிசாக அனுப்பியுள்ளார்.
பிக் பாஸ் வீடு 64 நாட்களை கடந்துவிட்டது. பல பிரச்னைகளை இந்த வீடு சந்தித்துவிட்டது, சில பிரச்னைகள் சாதாரனமாக கடந்துவிட்டன, பல பிரச்னைகள் பூதாகரமாக வெடித்தது. அப்படி இரண்டு வாரங்களுக்கு முன், மதுமிதாவுடனான விவாதத்தின் போது, காதுகள் கேட்டு ஓய்யும்படி 'We are the Boys' என்ற பாடலை இந்த ஐந்து பேரும் பாடினார்கள். அதன் விளைவாக நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களின் முத்திரையுடன் 'We are the Boys' என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை சாண்டியின் மனைவி பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி சாண்டிக்கு பிரத்யேகமாக 'குருநாதா' என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட டி-சர்ட்டையும் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இந்த டி-சர்ட்களை பார்த்து ஐந்து பேரும் கொண்டாட்டம் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது.
'We are the Boys' பாடல் வரிகள்: (We are the Boys Song Lyrics)
ஊர்ல நாலு பேரு, உதவாக்கர இருப்பான்,
உதவி பண்ணாலும் கெட்ட பேரு எடுப்பான்!
நின்னா குத்தாமா!
நடந்த குத்தமா!
சிரிச்சா குத்தமா!
உனக்கு என்ன பண்ணா பத்துமா?
Because, We are the Boys-uu
'எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா?'
என்ன பாவம் பண்ணிப்புட்டோம், எங்கள குத்தம் சொல்றீங்க,
சமாதானம் பேச வந்த பழைய குப்பைய அல்றீங்க!
ஆண் என்னங்க, பெண் என்னங்க,
எல்லாருமே இங்க ஓர் இனங்க!
உங்க கண்ணத்தான் திறந்து பாருங்க,
எங்க கூட வந்து நிக்கிறதும் பொண்ணு தானுங்க!
Because, We are the Boys-uu