Bigg Boss Tamil 3, Day 103 : பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சோபா தொகுப்பாளர் பிரியாங்கா உட்கார்ந்ததும் உடைந்து விட்டது
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இறுதி போட்டியில் சாண்டி, லோஸ்லியா, ஷெரின் முகேன் ஆகியோர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். நேற்று ‘எங்கேயோ கேட்ட குரல்' கொடுக்கப்பட்டது. ஆடியோ க்ளிப்பில் வரும் நிகழ்வு எங்கு நடந்தது…? எதைக் குறித்து பேசினார்கள்…? யார் உள்ளனர்? என்பது குறித்து பதிலளிக்க வேண்டும். இந்த போட்டியில் ஷெரின் வெற்றி பெற்றார்.
தொகுப்பாளர்கள் வருவதற்கு முன்னர், போட்டியாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதாவது, இந்த வீட்டில் என்ன நடந்தாலும், யார் வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன நிகழ்ந்தாலும் கண்களுக்கு தெரியாது, செவிகளுக்கு கேட்காது போன்று இருக்க வேண்டும்.
இதையடுத்து விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்ஷன், மாகாபா ஆனந்த் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். இதில், மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்க இருக்கும் கேம் ஷோ ‘தி வால்' புரோமோ வீடியோ காட்டப்பட்டது. பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சோபா தொகுப்பாளர் பிரியாங்கா உட்கார்ந்ததும் உடைந்து விட்டது. பிக் பாஸ் அதற்கு சோபாவை டிஸ்மேண்டில் செய்ததற்காக பிரியங்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
பிக் பாஸில் வெற்றி பெற போட்டியாளர்கள் என்ன செய்ய வேண்டும்…? என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் அனைவரும் பதிலளித்தனர். மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களது நினைவுகளையும் நண்பர்களைக் குறித்து மகிழ்ச்சியாக பேசினார்கள்.