94 வது நாளை எட்டிய பிக் பாஸ் தொடரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
நேற்று கொடுக்கப்பட்ட ‘உடைத்திடு, எடுத்திடு' டாஸ்க்கில் பலூனை உடைத்து தங்களின் பெயர் எழுதியிருக்கும் சீட்டினை சேகரிக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றார்.
அதன் பின் யாஷிகா ஆனந்த், மகத் இருவரும் விருந்தினர்களாக வருகை தந்தனர். இருவரும் போட்டியாளர்களுக்கு பரிசு கொடுத்தனர். லாஸ்லியாவிற்கு அவரின் அப்பா தன் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார். முகேனுக்கு மைக் வழங்கப்பட்டது. சாண்டிக்கு செஃப் கேப், கவினுக்கு 4 இதயமும், ஷெரினுக்கு பேனாவும் லெட்டர் பேடும் கொடுத்து உங்களின் விருப்பமானவருக்கு கடிதம் எழுதுங்கள் என்று கொடுத்தனர்.
ஷெரின் தர்ஷனுக்கு கடிதம் எழுதுவதாக கூறி கடிதம் எழுதினார். பேனாவையும் லெட்டர் பேடையும் கொடுக்கும் போது யாஷிகா அந்தக் கடிதத்தை யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்டு சொன்னார். எழுதி முடித்த பின் பிக் பாஸ் அந்த கடிதத்தை யாருக்காக ஷெரின் எழுதினாரோ அவரிடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஆனால், ஷெரின் அதை சுக்கு நூறாக கிழித்து தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்து எடுத்து சென்று விடுகிறார்.
டாஸ்க்கில் வென்றதற்காக தர்ஷன் மன்னராக முடி சூட்டப்பட்டு பிற போட்டியாளர்கள் பணிவிடைகள் செய்யத் தொடங்கினார்கள்
லாஸ்லியாவுக்கு அப்பாவுடைய புகைப்படம் வந்ததை கண்டு கவினும் லாஸ்லியாவும் “நாம் தான் நம்மை எந்த வகையிலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் தானே டாஸ்க்கில் விளையாடி வருகிறோம். இதற்கு மேல் என்ன செய்ய முடியும். குடும்பத்தினர் என்ன நினைத்திருக்கிறார்கள்” என்று குழம்பி போய் இருவரும் பேசுகின்றனர்.
லாஸ்லியாவோ சரி இதைக் கூட பேச வேண்டும் எல்லாரும் டாஸ்க்கில் இருக்கிறார்கள் நாமும் அங்கேயே போவோம் என்று கூறி கவினை அழைத்து செல்கிறார்.
இரவில் மன்னரான தர்ஷன் ஷெரின் எழுதி கிழித்து போட்டது குப்பைத் தொட்டியில் இருக்கிறதா எனத் தேடுகிறார்.
சாண்டி வழக்கம்போல உற்சாக பாட்டு பாடி கதை சொல்லி மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறார்.