This Article is From Sep 24, 2019

Bigg Boss Tamil 3, Day 93: ‘நட்புனா என்னானு தெரியுமா..? பச்சை மிளகாய கடிச்சு நிரூபித்த போட்டியாளர்கள்

Bigg Boss Tamil 3:  இறுதியில் பிக் பாஸ் ‘இது ஒரு ஜாலியான விளையாட்டு’ என்று சொல்லி ஏமாற்றி விட்டார். முகேன் அதிகபட்சமாக 3 பச்சை மிளகாயை சாப்பிட்டார். 

Bigg Boss Tamil 3, Day 93: ‘நட்புனா என்னானு தெரியுமா..? பச்சை மிளகாய கடிச்சு நிரூபித்த போட்டியாளர்கள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சேரன் வெளியேறிய நிலையில் முகேன், தர்ஷன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி மட்டுமே தற்போது வீட்டில் இருக்கின்றனர்.

முகேன் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விட்டார். அதனால் மற்ற அனைவரும் எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டார்கள்.  

போட்டியாளர்கள் அனைவரும் தங்களது நண்பர்களைக் காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்டு பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார்கள். லாஸ்லியா முதலில் கவினைக் காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்டார். ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்றவே தர்ஷன் பச்சை மிளகாய் சாப்பிட்டார். லாஸ்லியாவை காப்பற்ற கவினும், கவின், லோஸ்லியா இருவரையும் காப்பாற்ற சாண்டியும் பச்சை மிளகாய் சாப்பிட்டனர். தர்ஷன், சாண்டி இருவரையும் காப்பாற்ற ஷெரின் பச்சை மிளகாய் சாப்பிட்டார். 

இறுதியில் தர்ஷனைக் காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்ட முகெனிடம், அவர் ஏற்கனவே பலமுறை காப்பாற்றப்பட்டுவிட்டார். ஆதலால், அவருக்குப் பதிலாக வேறு யாரேனும் காப்பாற்றுங்கள் என்று பிக் பாஸ் தெரிவிக்க, சாண்டி, ஷெரின் ஆகியோரை முகென் காப்பாற்ற பச்சை மிளகாயை சாப்பிட்டார்.

இறுதியில் பிக் பாஸ் ‘இது ஒரு ஜாலியான விளையாட்டு' என்று சொல்லி ஏமாற்றி விட்டார். முகேன் அதிகபட்சமாக 3 பச்சை மிளகாயை சாப்பிட்டார். 

இந்த வாரத் தலைவராக போட்டிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் முகேன் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தொடர்ந்து போட்டியளார்களுக்கு குறைவாக தண்ணீர் பயன்படுத்தி துணி துவைக்கும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. அதில் சாண்டி மற்றும் லாஸ்லியா அணியினர் வெற்றி பெற்றனர்.

.