நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்களை எழுப்பி ஒவ்வொருக்கும் தங்க முட்டை கொடுத்து பாதுக்காக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் நேரடியாக கலந்து கொள்ள ‘கோல்டன் டிக்கெட்'-டிற்கான டாஸ்க்குகள் தொடங்கிவிட்டன. கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.
இந்நிலையில் போட்டியாளர்கள், கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஒரு டாஸ்க்கில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பிளாக்குகளை அடுக்கவும் வேண்டும், பிறர் அடுக்கினால் அதைப் பந்தை வைத்து எறிந்து கலைக்கவும் வேண்டும். அதில் சாண்டி மற்ற அனைவரின் பிளாக்கையும் அடித்து கலைக்கிறார். ஆனால், கவின் பிளாக்கை மட்டும் கலைக்கவில்லை. கேட்டால் 'அவனே முட்டி வலியால் இருக்கிறான்' என்று பதில் சொல்லிவிட்டு பிறரின் பிளாக்குகளை அடித்துக் கலைக்கிறார்.
நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்களை எழுப்பி ஒவ்வொருக்கும் தங்க முட்டை கொடுத்து பாதுகாக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஷெரின் முட்டையை உடைக்க முயன்று சாண்டி பரிதாபமாக தோற்று வெளியேறினார்.
இதன் தொடர்ச்சியாக இன்றைய நாளில் வெளியான ப்ரோமோவில் விளையாட்டின்போது சாண்டி லாஸ்லியாவை தடுக்க முற்பட, அவர் கீழே விழுந்து விடுகிறார். அதைப் பார்த்த கவின், ‘நீதான் தள்ளி விட்ட' என்று சொல்ல உடனே சாண்டி, தான் அதை செய்யவில்லை என்று மறுக்கிறார்.
மற்ற போட்டியாளர்களும் சாண்டி வேண்டுமென்றே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் கவின் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
மற்றொரு ப்ரோமோவில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கிற்கு நடுவே லாஸ்லியாவிடம் பேசச் செல்கிறார் கவின். அதைப் பார்த்த ஷெரின் ‘நீ பேசிவிட்டு வர்ற வரைக்கும் நாங்க ஹோல்டில் இருக்கணுமா?' என்று கேட்கிறார். உடனே கவின், ‘என்ன நியாயமா எந்த விளையாட்டு விளையாடுனீங்க' என்று கேட்க, ஷெரின் பந்து கூடையை எத்திவிட்டு வெளியேறுகிறார்.
டாஸ்க்கில் தனக்கு எதிராக செயல்படாத சாண்டியையும், கவின் எவ்வளோ வெறுப்பேற்றினாலும் சிரிந்தபடியே சமாளிக்கும் ஷெரினையும் லாஸ்லியாவுக்காக பகைத்துக் கொள்கிறார் கவின்.