This Article is From Jul 12, 2019

'சாக்ஷிதான் ரியல் கில்லர், வனிதா பேசுனாலே...','பிக் பாஸ் 3'- தற்போதைய மக்கள் ரியேக்சன்!

இந்த வாரம்: வழக்கமா, போலீஸ் தானடா கொலையாளியை ஜெயில்ல போடுவீங்க, இங்க என்னடா உல்டாவா கொலையாளி போலீஸை ஜெயில்ல போடுறீங்க!

'சாக்ஷிதான் ரியல் கில்லர், வனிதா பேசுனாலே...','பிக் பாஸ் 3'- தற்போதைய மக்கள் ரியேக்சன்!

பிக் பாஸ் 3, மூன்றாவது வாரத்தின் டாஸ்க் வெற்றிகரமாக முடிந்தது. 'ஆட்ட கடுச்சு, மாட்ட கடுச்சு, கடைசில மனுஷனையே கடுச்ச கதை' மாதிரி, முதல்ல நாளு பேரை கொலை செய்த இந்த வார கொலையாளிகள் கடைசில அந்த கொலைய விசாரிக்க வந்த 'இன்ஸ்பெக்டர்' கவினையே கொன்னுட்டாங்க. ஒருவழியா டாஸ்க் முடிய, ‘பெஸ்ட் போட்டியாளர்' யார்னு பிக் பாஸ் கேக்க, கவின் சாக்ஷியை சொல்ல, 'அப்போ நான் என்ன தக்காளி தொக்கா?' அப்படிங்கிற மாதிரியே இருந்தது மோகன் வைத்தியாவோட லுக். 

மொத்த குடும்பமும் சிறந்தப் போட்டியாளர்களா மோகன் வைத்தியா, வனிதாவை தேர்வு செய்ய, பிக் பாஸ் முன்றாவதா இன்னொரு சாய்ஸ் கொடுக்க, இந்த முறை சாக்ஷி பேருக்கு டிக் போட்டாச்சு. அடுத்து என்ன, வழக்கம்போல இவங்க மூணு பேர்தான் அடுத்த வார கேப்டன் போட்டியாளர்கள்-னு ஒரு பொது அறிவிப்பு கொடுத்தாச்சு. 

பாசிடிவ் இருந்தா அங்க ஒரு நேகடிவ் இருக்கனும்ல. அடுத்து என்ன மோசமான போட்டியாளர் பட்டியல்தான். முதலில் டிக் செய்யப்பட்டது, சேரன் மற்றும் சரவணன். 'சும்மா இருப்பனா நானு'-னு வனிதா பேசி சரவணன் மேல இருந்த டிக்கை கவின் மேல மாத்திவிட்டுட்டார். ஆக மொத்தத்துல, மோசமான போட்டியாளரா டிக் வாங்குன, சேரனும் கவினும் ஜெயிலுக்குப் போகனும். 'இது பிக் பாஸின் உத்தரவு'

வழக்கமா, போலீஸ் தானடா கொலையாளியை ஜெய்ல்ல போடுவீங்க, இங்க என்னடா உல்டாவா கொலையாளி போலீஸை ஜெய்ல்ல போடுறீங்க!

மேக்-அப்பை கலைச்ச சாக்ஷி, மைக்கெல் ஜேக்சன் டேன்ஸ் ஆடுன மோகன், முத்தம் கொடுத்த ஷெரின், காபி கொட்டப்பட்ட ரேஷ்மா, கடைசியா துப்பாக்கியை தொலைச்ச கவின், இன்ஸ்பெக்டர் கவின். இதையெல்லாம் செய்ய வச்ச வனிதா-முகேன் காம்போ!

'இதெல்லாம், என்னடா காம்போ, 'பிக் பாஸ் 1' பாத்திருக்கியா, அங்கையும் அதே கொலையாளி டாஸ்க், எங்க ஆரவ்-ஹரிஷ் கல்யான் காம்போவ பாத்திருக்கியா, மண்ட பத்திரம்', அப்படிம்கிற ரேஞ்சுக்கு பில்ட்-அப் கொடுக்கிற நெட்டிசன்ஸ்.

இந்த, நெட்டிசன்ஸ் இப்போ பிக் பாஸ் வீட்ட பத்தி வெளியிட்ட கருத்துகளை பற்றி கொஞ்சம் பார்ப்போமா!

சாக்ஷிதான் ரியல் கில்லர், இது என் கருத்து அல்ல, டிவிட்டர் வாசிகளின் கருத்து, ஆதாரங்கள் பின்னே இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு கும்பல் சாக்ஷியை பத்தி பேச, இன்னொரு கும்பல் 'ட்ரால் வனிதா'-னு சுத்திட்டு இருக்காங்க!

நீங்க என்ன பண்ணாலும் நாங்க ட்ரால் பண்ணுவோம் அப்பிடிங்கிறது அந்த கும்பலோட கொள்கை போல..

இது ஒரு பக்கம் இருக்க, 'எப்போ பாத்தாலும் மதுமிதா எதாவது ஒரு சண்டைய கெளப்பனும்னே சுத்திட்டு இருப்பாங்க போல' அப்பிடினும் கொஞ்ச பேர் சொல்றாங்க!
 

இது இந்த வார மக்கள் 'டாப்' கருத்துகள். இந்த கருத்து எப்போ மாறும், எப்படி மாறும்னே சொல்ல முடியாது, மாற வேண்டிய நேரத்துல கரெக்டா மாறிடும்!

.