சாண்டி பேசும் எதுவும் கவினுக்கு புரிந்ததுபோல் இல்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘டிக்கெட் டூ ஃபினாலே'-வுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இறுதிகட்டத்தில் சேரன், கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், ஷெரின், முகேன் ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளனர்.
நேற்றைய தொடர் தங்க முட்டையைப் பாதுகாக்கும் டாஸ்க்குடன் தொடங்கியது. ஒரு பக்கம் கவினும் லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருக்க, மறுபுறம் சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் லாஸ்லியாவின் முட்டையை உடைக்க பிளான் போடுகிறார்கள். மூன்று பேரும் முட்டையை மறைத்து மறைத்து நின்று, யாரும் எதிர்பார்க்காத வேளையில் முட்டையைப் போட்டு உடைத்து விடுகிறார்கள். முதலில் ஷாக்கான லாஸ்லியா பின்னர், சிரித்து சமாளிக்கிறார்.
தொடர்ந்து கவினிடம் பேச்சுக் கொடுக்கிறார் சாண்டி. அந்த நேரம் பார்த்து, கவினின் முட்டையை உடைக்கிறார் முகேன். இதைப் பார்த்த கவின், “எனக்கு சாண்டி அண்ணே வந்து பேச்சு கொடுக்கும் போதே தெரியும், ஏதோ நடக்கப் போகுதுன்னு…” என்கிறார். இதைக் கேட்ட சாண்டிக்கு மனம் வாடுகிறது.
‘யாருக்கு எந்த இடம்' என்ற, டாஸ்க்கில் சாண்டி, கவினுக்குக் கொடுத்த 7-வது இடத்தைப் பற்றி கோபமாக கவினிடம் கூறுகிறார் லாஸ்லியா. கொஞ்சம் எக்ஸ்ட்ரீமாக சென்ற லாஸ்லியா 'உன் ஃபிரெண்டுன்னு சொல்லிட்டு எப்படி அவனுக்கு 7-வது இடம் கொடுக்க மனசு வந்துச்சு. இவனுக்கு 6 கொடுத்துட்டு, எனக்கு 7 கொடுத்திருந்தா கூட சந்தோஷப் பட்டிருப்பேன்,' என சாண்டியிடம் முறையிடுகிறார் லாஸ்லியா. அவர் இப்படி கேட்டதும் கூனிக்குறுகுகிறார் சாண்டி. கூடவே பக்கத்தில் நிற்கும் தன் நண்பன் கவின், தனக்காக எதுவும் பேசவில்லையே என்ற ஆதங்கமும்… இது கவின் – சாண்டிக்குள் பிரச்னையாக மாறுகிறது.
இதற்கிடையே சாண்டியை அழைத்த பிக் பாஸ், “கவினிடம் பேசுங்கள்,” என்றார். அதற்குக் கதறி அழுத சாண்டி, “நெருங்கிய நண்பர்கள் ஏதேனும் சொல்லிவிட்டால் என்னால் தாங்க முடியாது” என்று கூறி உடைகிறார்…
அத்தோடு தன்னை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பிக் பாஸிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு, “மற்ற போட்டியாளர்கள் அனைவரும் போட்டியை விளையாடுகிறார்கள். நீங்களும், உங்களது போட்டியை விளையாடுங்கள்,” என்றார் பிக் பாஸ்.
“கவினிடம் பேசுங்கள். இப்போது இல்லையென்றால், சிறிது நேரத்திற்குப் பிறகு பேசுங்கள். அவர் உங்களது நண்பர்,” என்று சாண்டிக்கு அறிவுரை வழங்கினார் பிக் பாஸ். சாண்டியும் கவினுடன் இணைந்து உட்கார்ந்து பேசுகிறார். ஆனால், சாண்டி பேசும் எதுவும் கவினுக்கு புரிந்ததுபோல் இல்லை.
அடுத்து, ‘கோல்டன் டிக்கெட்டுக்கான கடைசி டாஸ்க்'. சைக்கிளை மிதிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அதற்கான பாயின்ட்ஸ் வழங்கப்படும். ஆனால், அந்த பாயின்ட் சைக்கிள் ஓட்டும் நபருக்குச் சேராது. சைக்கிளின் சீட்டுக்கு அடியில் யார் ஃபோட்டோ ஒட்டப்பட்டிருக்கிறதோ அவரைக்குத்தான் பாயின்டுகள் சேரும்.
போட்டி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முட்டி வலி காரணமாக கவின் விலகுகிறார். இரண்டு மணி நேரத்தில் முதுகு வலி காரணமாக சேரன் விலகுகிறார். 5 மணி நேரம் கழித்து ஷெரின் விலகுகிறார். மீதமுள்ள நபர்கள் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இன்றைய நாள் எபிஸோடில் தெரிந்து கொள்ளலாம்.