This Article is From Sep 20, 2019

Bigg Boss Tamil 3: “முட்டாள்தனமான சென்டிமென்டுகளை பார்க்க நேரமில்லை…” - கொந்தளிக்கும் ஷெரின்!

Bigg Boss Tamil 3: விளையாட்டின் போது கூட அந்த நேரத்து போட்டி மனப்பான்மை கூட கவினும் லாஸ்லியாவும் வெளிப்படுத்தியதில்லை. இருவரும் போட்டி மனப்பான்மையுடன் டாஸ்க்குகளை எதிர்கொண்டதில்லை.

Bigg Boss Tamil 3: “முட்டாள்தனமான சென்டிமென்டுகளை பார்க்க நேரமில்லை…” - கொந்தளிக்கும் ஷெரின்!

இருவரும் பிறரிடம் போட்டி போடுவது போல் தங்களுக்குள் போட்டியிட்டதே இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ ஃபினாலே'க்கான டாஸ்க்குகள் நடந்து கொண்டு வருகின்றன. நேற்றைய நாள் நடந்த டாஸ்க்கில் சாண்டியின் பந்துகளை லாஸ்லியா எடுக்க முயல மோதி கீழே விழுந்து விடுகிறார். உடனே கவின் “எப்படி தள்ளி விடுற” என்று கேட்க “டேய் ரொம்ப பண்ணாதடா” என்று சாண்டி பதில் சொல்கிறார். 

உடனே “ யார் ரொம்ப பண்றா…?” என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். அதன்பின் விளையாட்டிற்கு நடுவில் லாஸ்லியாவிடம் சென்று ‘எங்கு அடிபட்டிருக்கு விளையாடா முடியுமா…?' என்று நலம் விசாரிக்க செல்கிறார். 

முகேன் ‘ கேம்  ஹோல்ட் ல இருக்கு' என்று சொல்ல உடனே கோபமான ஷெரின் கவினின் கூடையில் உள்ள பந்துகளை தன் கூடைக்குள் கொட்டி விட்டு ‘நீ வர்ற வரைக்கும் ஹோல்ட்ல நாங்க இருக்கணுமா என்று கேட்டு  வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 

கவின் தான் ஹோல்டில் இருக்கச் சொல்லி சொல்லவே இல்லையென்று கூறி விட்டு ‘எல்லா விளையாட்டும் ரூல்ஸ் படிதான் விளையாடுறீங்களா' என்று கேட்டதும் ஷெரின் தன் கூடை பந்தினை எட்டி உதைத்து விட்டு விளையாட்டினை விட்டு வெளியேறுகிறார். 

தன்னிடம் சமாதானம் பேச வரும் தர்ஷனிடம் “எனக்கு இந்த மாதிரி முட்டாள்தனமான செண்டிமெண்டுகளை பார்க்க நேரமில்லை” என்று சொல்கிறார். 

விளையாட்டின் போது கூட அந்த நேரத்து போட்டி மனப்பான்மை கூட கவினும் லாஸ்லியாவும் வெளிப்படுத்தியதில்லை.  இருவரும் போட்டி மனப்பான்மையுடன் டாஸ்க்குகளை எதிர்கொண்டதில்லை.  இருவரும் பிறரிடம் போட்டி போடுவது போல் தங்களுக்குள் போட்டியிட்டதே இல்லை. 

இதை ஒவ்வொரு டாஸ்க்கிலும் ரூம் மேட்ஸ் பார்த்துக் கொண்டுதான் வருகின்றனர். 

யாரும் இதை கவினிடமோ லாஸ்லியாவிடமோ புகாராக கூறியதில்லை. இன்று ஷெரின் மட்டுமே அதை வெளிப்படுத்தியுள்ளார். 

 சேரன் முதுகுவலியினால் அவதிப்பட்டபடியே விளையாடி வருகிறார். சாண்டி வழக்கம் போல சூப்பர் ஹீரோக்களின் கதையென ‘பவர் பாட்டி' கதையை தொடர்ந்தபடி இருக்கிறார். 

.