This Article is From Aug 19, 2019

சிரிப்பு நிறைந்த முகத்துடன் அபிராமி, கதறி அழும் லாஸ்லியா!

Bigg Boss Tamil Season 3, Day 56: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கவின், லாஸ்லியா காப்பாற்றப்பட்டார்கள் என அறிவித்தார், கமல். இடைவேளைக்குப் பின் முகென் காப்பாற்றப்பட்டார் என்று எளிமினேஷனை அறிவித்தார்.

Advertisement
Entertainment Written by

Abirami, Bigg Boss Tamil 3 Contestant: அபிராமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்

Bigg Boss Tamil Season 3 Highlights: 56 நாட்கள், அதாவது 8 வாரங்கள்... 8 வாரங்களை பிக் பாஸ் வீடு கடந்துவிட்டது. 8வது வாரத்தின் நாமினேஷன் பட்டியலில் மதுமிதா (Madhumitha), அபிராமி (Abirami), லாஸ்லியா (Losliya) கவின் (Kavin), முகென் (Mugen Rao) என ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர். பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஏற்பட்ட விவாதங்கள், சண்டைகள் என அனைத்தையும் தொடர்ந்து, இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்ற பெரும் குழப்பம் சனிக்கிழமை வரை நீடித்தது. சனிக்கிழமையன்று மதுமிதா வெளியேற்றப்பட்டார். இருந்தாலும், அவர் வெளியேற்றப்பட்டார் என்று சந்தோஷப்பட வேண்டாம், அவர் பிக் பாஸ் வீட்டின் விதிகளை மீறியதற்காகவே வெளியேற்றப்பட்டார். மக்கள் ஏற்பாடு செய்த நாமினேஷன் நிச்சயம் இருக்கும் என ஷாக் கொடுத்தார் கமல் (Kamal Hassan).

அதன்படி, நாமினேஷனில் மீதமிருந்த கவின், லாஸ்லியா, முகென், அபிராமி ஆகியோரில் 'முதலில் ஒரு பெண், ஒரு ஆண் என இருவரை காப்பாற்றலாம். யாரை காப்பாற்றலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்?' என போட்டியாளர்களிடம் கருத்து கேட்க முதலில் சாண்டியின் (Sandy) கைகள் கவினிடம் சென்றது, தர்சன் (Tharshan) முகென் காப்பாற்றப்பட வேண்டும் என்றார், வனிதா (Vanitha), செரின் (Sherin) அபிராமியை கைகாட்டினார்கள். ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் கவின், லாஸ்லியா காப்பாற்றப்பட்டார்கள் என்று அறிவித்தார்.

பின் வழக்கம்போல ஒரு இடைவேளைக்குப் பிறகு என்ற கமல், இடைவேளையின்பின் முகென் காப்பாற்றப்பட்டார், என்று எளிமினேஷனை அறிவித்தார்.

என்றும் எதற்கென்றாலும் அழும் அபிராமி, இன்று தன் கண்களில் கண்ணீரை சொட்டவில்லை. மாறாக உதடுகளில் பெரும் சிரிப்புடனே வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறும்வரை அந்த சிரிப்பு அவரின் உதடுகளில் ஒட்டிக்கொண்டே இருந்தது. 'அழும் அபிராமியை விட இப்படி சிரிக்கும் அபிராமியையே  அனைவருக்கும் பிடிக்கும்' என்றார் கமல். இவர் அழவில்லை, ஆனால் இவர் வெளியேற்றம் மற்றொருவருக்கு பெரிய சோகத்தை அளித்தது. லாஸ்லியா... இவர் தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு நேரத்திலும் உடனிருந்தது அபிராமிதான். ஒரு உற்றத் தோழியாக. அதனாலோ என்னவோ, அபிராமியின் பிரிவை லாஸ்லியாவின் மனம் ஏற்க மறுத்துவிட்டது. கதறி அழுதார். அபிராமியைக் கட்டி அணைத்து ஒரு முத்தமும் தந்தார்.

Advertisement

அபிராமி, மிகவும் தெளிவாகவும் மிகவும் தைரியமாகவும் இருந்தார். இப்போது வெளியில் இருக்கும் அபிராமி ஏன் அப்படி வீட்டிற்குள் இல்லை என்றெல்லாம் பலருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கேள்வியை கவினும் கேட்டுவிட்டார். 'எங்கையா இருக்க விட்டீங்க' அப்படித்தான அபிராமி?

Advertisement