This Article is From Jul 20, 2019

பிக் பாஸ் 26வது நாள்: என்னங்கடா எல்லாரும் அழுகுறீங்க!!!

பிக் பாஸ் வீட்டின் 26வது நாள் முழுவதும் அழுகை நிறைந்ததாகவே இருந்தது. காலை துவங்கி மாலை வரை ஒருவர் மாற்றி ஒருவர் அழுகை.

பிக் பாஸ் 26வது நாள்: என்னங்கடா எல்லாரும் அழுகுறீங்க!!!

பிக் பாஸ் வீட்டின் 26வது நாள் முழுவதும் அழுகை நிறைந்ததாகவே இருந்தது. காலை துவங்கி மாலை வரை ஒருவர் மாற்றி ஒருவர் அழுகை. எதுக்குயா அழுகுறீங்க, பாக்குற எங்களுக்கே ஃபீல் ஆகுதா இல்லையா!

அப்படி யார் எல்லாம் அழுதார்கள், எதற்காக அழுதார்கள்?

முதலில் அழுகை லிஸ்டில் சேர்ந்தவர் சாக்க்ஷி. அதாங்க ஜெயிலுக்குள்ள நடந்த அந்த 'லூசு' பிரச்னை. சாக்க்ஷி, மீராவை லூசுனு சொன்ன பிரச்னை. 25வது நாள் இரவு நடந்த அந்த பிரச்னைதான் சாக்க்ஷியை அழுக வச்சிருச்சு. ரொம்ப நேரம் பேசி, 'ஐய்யோ இனிமேல் பேச முடியாதுடா சாமி'-னு விவாத்ததை முடிக்க, சாக்க்ஷி சிரிக்க ஆரம்பிக்கிறார். நன்றாக சிரிக்கிறார். 'ஆத்தி! என்ன ஆச்சு'-னு சாண்டி பார்க்க 'எனக்கு ரொம்ப ஆச்சுனா சிரிச்சிறுவேன்'-னு சொன்ன சிறு பொழுதில் சிரிப்பு அழுகையாக மாறியது. இவ்வாறு மீரா செய்வது 'ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவரை டார்கெட் செய்து, கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்கிறார் மீரா. அந்த வகையில் இந்த வார டார்கெட் சாக்க்ஷிதான்' என்பது செரின், ரேஷ்மா ஆகியோரின் கருத்து மட்டுமல்ல. பலரும் அவ்வாரே யோசிக்கிறார்கள். 

2ja1e7lo

இந்த சண்டைக்கு நடுவுல, மாஸ் காட்டுனது செரின்தான். முதலில், மீரா சொடக்கு போட்டு பேச, 'என்கிட்ட சொடக்கு போட்டு பெசாத. அது மரியாதை இல்லாத செயல். அப்படி செஞ்சா எனக்கு நல்லா கோவம் வரும்'-னு செரின் சொன்னார். மீரா, 'சொடக்கு போட்டு பேசுறது ஒன்னும் மரியாதை இல்லாத செயல் இல்லையேனு' சொல்ல அதற்கு செரின், 'அப்போ லூசுனு சொல்றதும் மரியாதை இல்லாத வார்த்தை இல்லையேனு' சொல்ல மீரா சரண்டர். 'நான் அப்படி பண்ணதுக்கு என்ன மன்னிச்சுருங்க'-னு சொல்லிட்டு மீண்டும் சாக்க்ஷியிடமே திரும்பினார். 

அடுத்து, மீரா ஒவ்வொரு முறை பேசும்போதும், 'வீடியோ போட்டு பாத்த தெரிஞ்சுரும், வீடியோ போட்டு பாத்த தெரிஞ்சுரும்' எனக் கூற, அதற்கு செரின் 'ஆமா, உங்களுக்கு என்ன ஆக்சஸ் கொடுத்திருக்காங்களா வீடியோக்கு. நீங்க கேட்கும்போதேல்லாம் வீடியோ வத்திருமா!' என ஒரு கவுன்டர். மாஸ் காட்றீங்களே செரின்!

s95g6nj

அடுத்து கவின். மொத்த குடும்பமும் சேர்ந்து இந்த கவின் பையனை அழுக வச்சிட்டாங்க. அப்படி என்ன பண்ணாங்க இத்தனை நாள் 'கவின் சாக்க்ஷி கிட்ட பேசக்கூடாது'னு சொன்ன எல்லாரும், இப்போ 'சாக்க்ஷி அழுத அப்போ, கவின் ஏன் வந்து பேசல'னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது கவின் காதிற்கு வர கொஞ்சம் வருத்தத்துடன் இருந்தார். இதைப் பற்றி சேரனிடம் பேச, 'முதல்ல சாக்க்ஷிய லவ் பண்ண. அடுத்து லாஸ்லியாக்கு நல்ல சப்போர்ட் இருக்கறதுனால லாஸ்லியாவ லவ் பண்றனு மக்கள் நினைப்பாங்க' என்கிற எதார்த்தை சொல்லி, இப்படி எல்லாரும் பேசுறதுக்கு ஒரு தீர்வா எல்லோர் முன்னாடியும் வச்சு 'நான் செஞ்சது தப்புதான். இனி எதாவது என்ன பத்தி பேசனும்னா என்கிட்ட நேர வந்து பேசலாம்' என சொல்ல, கவினும் அப்படியே செஞ்சிட்டார். இது ஒரு பக்கம். 

gtvj05fo

இந்த பிரச்னை குறித்து இரவே, சாக்க்ஷியிடம் பேசி மன்னிப்பு கேட்டிருந்திருக்கிறார் கவின். அடுத்த நாள் காலையில், இவ்வாறு எல்லோர் முன்னாடி சொன்ன பிறகு லாஸ்லியாவிடம் சென்று பேசுகிறார், கவின். அப்போது லாஸ்லியா 'நீ நடிக்கிற கவின்' எனக் கோவத்துடன் சொல்ல, இன்னும் மன வருத்தம் அடைய, பாத்ரூமிற்குள் சென்ற கவின், அழுக ஆரம்பித்துவிட்டார். அவருடைய அழுகை நீண்ட நேரம் தொடர்ந்தது. யாரும் அவருடன் இருக்க விரும்பவில்லை. சாண்டியை மற்றும் அழைத்து உடன் வைத்துக்கொண்டார். அப்படி இருந்தும் அவர் அழுகை நிற்கவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு அழுகையை நிறுத்திவிட்டு வெளியே வந்த கவின், எல்லோருடனும் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன். இந்த பிரச்னையால் வீட்டில் தொடர முடியாது, வெளியே செல்கிறேன் என கேமரா முன் பிக் பாஸிடம் கூறினார். ஒரு டவுட், கவின் நீங்க நல்லவரா? கெட்டவரா?

ctnbqqe8

அடுத்து அழுதது செரின். 'லாஸ்லியா ஏன் அப்படி சொன்னா. நான் அவர் மேல எவ்வளவு பாசமா இருந்தேன். எப்பவும் பூனக்குட்டி, பூனக்குட்டி என பாசமாதான இருந்தேன். அவ ஏன் அப்படி சொன்னா' என அழுக ஆரம்பித்துவிட்டார். அப்படி லாஸ்லியா என்ன சொன்னார்?

முந்தைய நாள், செரின் தர்ஷனுக்காக ஹார்ட் வடிவத்தில் ஒரு சப்பாத்தி சுட, ஏற்கெனவே தர்ஷன் மீது கோவத்திலிருந்த லாஸ்லியா, கத்தி எடுத்த அந்த ஹார்ட்டை குத்திவிட்டார். அதற்காக, சேரன், தர்ஷன் என அனைவரும் அமர்ந்திருக்கையில் செரினிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது நடைபெற்ற விவாதத்தில், லாஸ்லியா 'நான் எல்லோரும் என்கிட்ட எப்படி இருகாங்களோ, நானும் அப்படிதான் இருப்பேன்' என சொல்லியிருக்கிறார். 'நான் அவள் மீது பாசமாகதானே இருந்தேன்' என்பது செரினின் வருத்தம். 

இந்த பிரச்னைகளால், லாஸ்லியாவும் வருத்தத்துடனேயே காணப்பட்டார்.

um50ulvg

இடையில் மீரா வேற அழுதார். ஆனா, அவர் எதுக்கு அழுதார்னு சத்தியமா தெரியல.

இவ்வாறு மொத்த குடும்பமும் அழுகை முகமாகவே நேற்று இருந்தது. அந்த அழுகை முகம் கமலின் வருகையால் புத்துணர்வு அடையுமா?

லெட்ஸ் வெய்ட் அண்டு வாட்ச்!

-சு முரளி

.