This Article is From Jul 26, 2019

பிக் பாஸ் 32வது நாள்: பாம்புப்பட்டில திருவிழா, கீரிப்பட்டிக்காரங்க எல்லாம் வந்திருங்க!

இன்னைக்கு பாம்புப்பட்டில திருவிழா. அந்த ஊர் மக்க எல்லாம் ஒன்னு திரண்டு, கீரிப்பட்டி ஊருக்காரங்கள திருவிழாக்கு வர சொல்லி வரவேத்தாங்க.

பிக் பாஸ் 32வது நாள்: பாம்புப்பட்டில திருவிழா, கீரிப்பட்டிக்காரங்க எல்லாம் வந்திருங்க!

நாடோடிகள் படத்துல ஒரு திருவிழா பாட்டு வருமே, "ஆடுங்கடா மச்சா ஆடுங்கடா, அழகான பொன்ன பாத்து தேடுங்கடா"-இதுதான் இன்னைக்கு பிக் பாஸ் போட்ட பாட்டு!

ஓ... அப்போ இன்னைக்கு ஊர்ல திருவிழாவா? 

பாட்டுக்கு ஏத்த மாதிரியே வீட்டில இருந்த எல்லாரும் குத்தாட்டம் போட்டு முடிச்ச பிறகு, "வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்வது?" என்பது குறித்து சரவணன் வீட்டின் மற்ற மக்களுக்கு விளக்குகிறார். "நம்ம தலைவர் வந்து குழந்தை நியாபகத்தை ஏற்படுத்துறாரு, பரவாயில்ல" என்று தன் குழந்தையின் நினைவுகளுடனே சரவணன் குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ளவது எனக் கற்பித்தார்.

ivglsang

அன்றைய டாஸ்க் துவங்குவதற்கு முன்பு வரை, அனைவரும் அங்கங்கே அமர்ந்து வீட்டின் பிரச்னைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். ரேஷ்மா, சேரனுடனான பிரச்னை குறித்து மதுமிதாவிடம் விவவாதித்துக் கொண்டிருந்தார். சேரன் நேற்று ரேஷ்மாவிடம் கோபப்பட்டது, அதற்குப்பின் ரேஷ்மா சேரனிடம் பேசியது, சேரன் மன்னிப்பு கேட்டது என அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தார். அடுத்து சாக்க்ஷி-சாண்டி, முந்தைய நாளில், டாஸ்கின்போது மதுமிதாவுடன் ஏற்பட்ட பிரச்னை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். லாஸ்லியா கவினிடம், இந்த வாரத்தின் மோசமான போட்டியாளராக தன்னை தேர்ந்தெடுக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தார். காரணம் என்னனு தான் தெரியல.

டாஸ்க் துவங்கியது. "நாட்டாமை பாதம்பட்ட இங்க வெள்ளாமை விளையுமடி" என்ற பாடலுடன் பாம்புப்பட்டிக்குள் வலம் வருகிறார் நாட்டாமை சேரன். டாஸ்க் நடந்துக்கிட்டு இருக்க நேரத்துல கீரிப்பட்டி மைனர், பாம்புப்பட்டி வருத்தப்படாத வாலிபர் சங்கத்து இளவட்டங்கள கூப்பிட்டு ஒரு கதைய சொன்னாரு. அவர் சொன்ன கதையோட மையக் கருத்து என்னன்னா, பாம்புப்பட்டி நாட்டாமையும் கீரிப்பட்டி நாட்டாமையும் புருஷன்-பொண்டாட்டி. அவங்க ரெண்டு பேருக்கும் பொறந்த குழந்தைதான் லாஸ்லியா. 

kfd897fg

இந்த கதைய கவினும்-சாண்டியும் ரெண்டு ஊர் முன்னாடியும் சொல்ல, சேரனும் மதுமிதாவும் அந்த கதைக்கு ஏற்ப நடிக்க, ரெண்டு ஊரும் சந்தோஷமா இருந்துச்சு. எவ்வளவு நேரத்துக்கு?

இன்னைக்கு ரெண்டு ஊரும் அமைதியாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. அப்பொ லாஸ்லியா எதையோ தூக்கிட்டு போக, ரேஷ்மா, சாக்க்ஷி, மீரா, சேரன், கவின், சாண்டி என எல்லாரும் துரத்திட்டு போனாங்க. கடைசில லாஸ்லியாவ புடிச்சாச்சு. சேரன், லாஸ்லியா கையப் பிடிச்சு இழுத்துட்டு வர, மதுமிதா அது நம்ம புள்ளனு சொல்ல வீடு நல்ல சந்தோஷமா இருந்துச்சு. 

q8vc7amo

இருக்கக்கூடாதே!

இந்த சம்பவத்துலதான் பிரச்னை வெடிச்சது. வழக்கம்போல மீராதான், அவர் எதோ சொல்லனும்னு ஆராம்பிச்சாங்க. 'இந்த சம்பவத்துல, சேரன் தன் இடுப்பை பிடிச்சு இழுத்து விட்டாரு' என ஆரம்பிச்சார். சேரன் மீது குற்றம் சாட்ட அனைவரும் "இப்படி பேசாதீங்க"-னு சொல்ல, "அது ரொம்ப கடுமையாக இருந்துச்சு" என மீரா மாற்றி சொல்ல ஆரம்பித்தார். எல்லாரும் சொல்லியும் மீராவின் வாய் ஓய்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் அனைவரின்முன் கைகூப்பி "தெரியாமல் எதர்ச்சையாகவே இந்த சம்பவம் நடைபெற்றது, எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை" என மன்னிப்பு கேட்டு உள்ளே சென்ற சேரன், அழுக ஆரம்பித்துவிட்டார். அனைவரும், அவரை தேற்ற ஆரம்பித்தனர். அப்போதும் மீரா அமைதியாக இல்லை. 'அவர் தனிப்பட்ட வஞ்சம் வைத்துக்கொண்டுதான் அப்படி செய்தார்' என சொல்லிக்கொண்டே இருந்தார்.

foq8g818

அவருடன் இருந்த சரவணன், கவின், சாண்டி, அதுமட்டுமின்றி முகேன் சொல்லிக்கூட அவர் கேட்பதாக இல்லை. அதுவரை மகிழ்ச்சியாக இருந்த வீடு தன் மகிழ்ச்சிப் பொழிவை இழந்தது. மீரா, 'தான் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும், மற்றவர் சொல்வதை தான் கேட்க மாட்டேன்' என்று எண்ணம் கொண்டிருக்கிறார் போல. முகேன், "நீ அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றாலும், நீ சொன்னது அப்படிதான் இருந்தது." என்று கூறிக்கொண்டிருக்க அதை கேட்காமல் எழுந்து சென்றுவிட்டார்.

இந்த வாரம், மீராவின் டார்கெட் சேரன்தான் போல!

kuq6enjg

அனைவரும் தன் இயல்பு வேலைகளுக்குத் திரும்ப, பிரச்னையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அன்றைய நாளின் மாலையில் பாம்புப்பட்டியில் நடக்கவுள்ள திருவிழாவிற்காக, இரண்டு ஊருக்காரங்களும், ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பயிற்சி செய்துகொண்டிருந்தனர். 

ஆ! சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு பாம்புப்பட்டில திருவிழா. அந்த ஊர் மக்க எல்லாம் ஒண்ணு திரண்டு, கீரிப்பட்டி ஊருக்காரங்கள திருவிழாக்கு வர சொல்லி வரவேத்தாங்க. மைனருக்கு சிறப்பு அழைப்பு விடுத்த நாட்டாமை, இந்த விழாவிற்கு அவர சிறப்பு விருந்தினரா அழைப்பு விடுத்தாரு. 

9r0j582g

மைனரோட சிறப்பு உரை, ரெண்டு ஊர் காரங்களோட ஆட்டமும் பாடலுமா, அந்த திருவிழாவும், அந்த நாளும் முடிஞ்சது. என்னதான், சிறப்பாவே இந்த நாள் முடிஞ்சிருந்தாலும், எல்லாரும் அழுகும்போதும் அறிவுரை வழங்கிட்டு இருந்த சேரனையே அழுக வச்சிட்டீங்களே மீரா!

-சு முரளி

.