This Article is From Jul 29, 2019

பிக் பாஸ் 35வது நாள்: வீட்டின் முதல் ஓபன் நாமினேஷன், என்ன ஆகப்போகுதோ?

இந்த வார நாமினேஷனில் யார் எல்லாம் இடம்பெறப்போகிறார்கள்?

பிக் பாஸ் 35வது நாள்: வீட்டின் முதல் ஓபன் நாமினேஷன், என்ன ஆகப்போகுதோ?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் வீட்டில் நடந்த பிரச்னைகளில் அதிகமானவை மீராவிடமிருந்தே துவங்கியது. அனைத்திற்கும் மேலாக, சேரன் மீது ஒரு மிகப்பெரிய குற்றத்தை வைத்தார். மக்களிடையே அவர்மீது அதிருப்பதி ஏற்பட அந்த குற்றச்சாட்டே மிகப்பெரிய காரணமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், சேரனுக்கு அதிர்ச்சி கொடுக்க மீரா தவறவில்லை. "நீங்க நேனச்ச மாதிரியே உங்களுக்கு முன்னாடி என்னை வெளிய அனுப்பிட்டீங்க சேரன் சார்" என்று சொன்னபடியே வெளியே சென்றார். அதை கவணித்த கமல், அவர் வெளியே வந்தவுடன் உங்களை வெளியேற்றியது சேரன் அல்ல, மக்கள் என பதிலளித்தார்.

idehaur8

மீரா வெளியே சென்றதும், வீட்டு மக்களுக்காக இந்த முறை கமல் ஒரு டாஸ்க் கொடுக்கிறார் "ஹீரோ - ஜீரோ - வில்லன்". ஹீரோ-வெற்றி தோல்விக்கு எல்லாம் அப்பாற்பட்டு நான் மதிக்கும் ஒரு மனிதர். வில்லன்- இந்த போட்டியில் எனக்கு கடும் எதிராளி. ஜீரோ- இந்த போட்டியில் இவரால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. வீட்டில் உள்ள அனைவரும், தங்களுக்கான "ஹீரோ - ஜீரோ - வில்லன்" யார் யார் என்பதை காரணத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

m1vuiu3

இந்த டாஸ்க்கின் முடிவில், அதிக ஹீரோ பட்டங்களை வென்றது, சேரன். அதிக வில்லன் பட்டங்களை வென்றது, தர்ஷன். வீட்டில் பலர், சேரனை மதிக்கத்தக்க நபராக பார்க்கிறார்கள். அதே நேரத்தில் கடும் போட்டியாளராக பலர் தர்ஷனை கருதுகிறார்கள்.

6csouo58

மீரா அவுட். அவர் இல்லாத வீடு எப்படி இருந்துச்சு?

நேற்று மீரா இல்லாத வீடு சற்றும் ஆராவாரமின்றி அமைதியாகவே இருந்தது. அனைவரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவது, குழப்பங்களை பேசித் தீர்ந்துக்கொள்வது என அந்த நாள் அமைதியாகவே சென்றது. சாண்டி லாஸ்லியாவிடமும், கவின் சாக்க்ஷியிடமும், தங்களுக்கு இருந்த பிரச்னைகளை விவாதித்துக்கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி சாக்க்ஷி, அபிராமி ஆகியோர் முகேன் மீது அன்பு காட்டுவது, அவர் முதல் வாரம் இருந்தது போல இல்லை என்பதை சாக்க்ஷி அபிராமியிடம் சொல்ல, அபிராமி அப்படி இருக்காத என முகேமிற்கு அறிவுரை வழங்கினார்.

qh68cah8

இது ஒருபுறம் இருக்க, மீரா இல்லாத வருத்தைத்தை சாண்டி மட்டும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். கலாய்க்க இருந்த ஒரு ஆள் குறைந்துவிட்டதே என்பது சாண்டியின் கவலை. 

pkgi9bqg

லாஸ்லியாவின் செயல்பாடுகள் குறைந்தும், மாறியும் இருப்பது குறித்து அபிராமி லாஸ்லியாவிடம் கூற, தனிப்பட்ட சில செயல்கள் காரணமாக நான் இப்படி மாறிட்டேன் எனக் கூறினார். அது என்ன பிரச்னையாகவே இருக்கட்டும், ஆனால் தமிழ்நாடு ரசிகர்கள் கிடைப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம், அது ஒரு வரம், அந்த வரத்தை தவறவிட்டிடாதே என அபிராமி அறிவுரை வழங்கினார்.

5le276e

அந்த நாள் அப்படியாக இருக்க, அடுத்த நாள் எப்படி இருக்கும் என்பது பார்வையாளர்களின் எண்ண ஓட்டமாக இருந்திருக்கும்.

அதற்கான சில குறியீடுகளை  இன்றை பிக் பாஸ் ப்ரோமோ அளித்துள்ளது. நாமினேஷனில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுள்ளது இந்த வார பிக் பாஸ். ஓபன் நாமினேஷன், அனைவரின் முன்பும் இன்றைய நாமினேஷனை தேர்வு செய்ய வேண்டும். லாஸ்லியாவின் தேர்வு மதுமிதா, சாக்க்ஷியாக இருந்தது. மறுபுறம் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்தார். 

eb4alh5

இந்த வார நாமினேஷனில் யார் எல்லாம் இடம்பெறப்போகிறார்கள்?

வழக்கமாக எல்லோரின் குறலும் ஒருமித்து ஒலிக்கும் ஒரு பெயர் மீரா. இந்த வாரம் அவர் வீட்டிற்குள் இல்லை, அதனால் வெறு பெயர்கள் அவர்களுடைய வாய்களிலிருந்து ஒலித்தாக வேண்டும். எப்படியும் சரவணனுக்கு நண்மை செய்வதாக ஒரு குழு கிளம்பும் என எதிர்பார்க்கலாம். ஓபன் நாமினேஷன் என்பதால், இந்த வாரம் சேரனின் பெயர் தவறிப்போகலாம். அதே நேரம், சாக்க்ஷியின் பெயரை ஏற்கனவே லாஸ்லியா கூறிவிட்டார், இன்னும் சிலர் அவருடைய பெயரை கூறுகையில் இந்த நாமினேஷனில் ஒரு இடத்தை அவர் பிடிக்கலாம். கடந்த வாரங்களிலிருந்து ஒரு மிகப்பெரிய மாற்றமாக, லாஸ்லியாவின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால், அவர் பெயரை கூட சிலர் கூறலாம், அவர் பெயரை கூறினால் தனக்கான ஆதரவு குறைந்துவிடுமோ எனக் கூறாமலும் போகலாம். இந்த பட்டியலில் இந்த வாரம் ரேஷ்மாவும் இணையலாம்.

எது எப்படியோ, இந்த வாரம் வீடு அமைதியாக இருக்கும் என்று எண்ணிய மக்களின் எண்ணத்தில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் மண் அள்ளிப்போட்டுவிட்டார் பிக் பாஸ்!

.