This Article is From Jul 30, 2019

பிக் பாஸ் 36வது நாள்: பலர் மனம் கவர்ந்த '96' ஜானு, லாஸ்லியாதான்!

இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்க்ஷி மற்றும் அபிராமி. இத்துடன் நாமினேஷன் ப்ராசஸ் முடிந்தது.

பிக் பாஸ் 36வது நாள்: பலர் மனம் கவர்ந்த '96' ஜானு, லாஸ்லியாதான்!

பிக் பாஸ் 36வது நாளின் காலை, தர்ஷன் இலங்கை தமிழ் கற்றுக்கொடுக்க, அருமையாகவே துவங்கியது. ஆனால், அதற்கு ஆப்பு வைக்கும்படி ஒன்றை அறிவித்தார் பிக் பாஸ். அந்த ஆப்பு என்னவென்றால் நாமினேஷன், இந்த முறை சற்று வித்தியாசமாக ஓபன் நாமினேஷன், அனைவரின் முன்பு, தான் யாரை நாமினேஷன் செய்கிறீர்கள் என்பதை காரணத்துடன் கூற வேண்டும். 'ஐயோ!' என ஒரு பகுதியினரின் கவலையாக இருந்தாலும் 'ஐ!!!' என மற்றொரு பகுதியினரின் சந்தோசமாக இருந்தது. 

19eb25f8

qhbomhk8

அப்படி சந்தோசப்பட்டவர்களின் ஒரு ஆளான சாக்க்ஷியைத்தான் முதலில் நாமினேஷன் செய்ய அழைத்தார் பிக் பாஸ். சாக்க்ஷியின் பெயர் கவின், லாஸ்லியாவாக இருந்தது. இந்த வாரம் மீரா இல்லாததால், சாக்க்ஷியை பின் தொடர்ந்த அனைவரும் கவின் பெயரையே கூற ஆரம்பித்துவிட்டனர். கவின் பெயர் மட்டுமின்றி மதுமிதா, ரேஷ்மா ஆகியோரின் பெயர்களை சிலர் சொன்னார்கள். பின் அவர்கள் பெயரும் அங்கங்கே ஒலித்தது. முதல் வாரத்திலிருந்து நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த சேரன், சரவணனின் பெயர்கள் இந்த வாரம் தவிற்கப்பட்டது. ஓபன் நாமினேஷனின் விளைவாக இருக்குமோ?

mrkk9mgg

இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்க்ஷி மற்றும் அபிராமி. இத்துடன் நாமினேஷன் ப்ராசஸ் முடிந்தது.

அதற்குப்பின், அந்த நாள் முழுவதும் இந்த நாமினேஷன் மட்டும்தான் பேச்சாக இருந்தது. சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததிலிருந்து துவங்கியது அந்த பேச்சு, மதுமிதா மீரா, சரவணன், சாண்டி முகேன் ஆகியோரிடையே "ஏன் கவினை நாமினேட் செய்யவில்லை?" என்ற விவாதத்தில் முடிந்தது.

824onbt8

சாக்க்ஷியை கவின் கஸ்டப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் மதுமிதா, ரேஷ்மா ஆகியோரின் வாதம். சரவணன் அதற்கு மிக அழகாக பதிலளித்தார். "அது 'ஆண் உணர்வு', வெளியில் நடந்ததுதான் உங்களுக்கு தெரியும், ஆனால் அவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியுமா, தெரியாமல் எதையும் பேசக்கூடாது, அது தெரியாமல், இதை பற்றி விவாதிக்க நாம் தகுதியற்றவர்கள்.", என சரவணன் சொல்ல அவர்களின் வாய்கள் சற்று சான்தமானது. ஆனால், அவர் சொன்ன அந்த பதில், ஒரு ஆண் மற்றொரு ஆணுக்குதான் ஆதரவு அளிப்பார் என்பது போல மற்றவரின் காதுகளுக்கு சென்றது.

அந்த நாள் முழுவதும், அமைதியாகவும் அழுகை நிறைந்ததாகவுமே இருந்தது. சிலர் தான் நாமினேட் செய்தவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். சிலர் அவர் என்னை நாமினேட் செய்துவிட்டார் என்று அழுக, இவரை நாமினேட் செய்துவிட்டோம் என சிலரும் வருந்தினர். 

po8rc3lg

அந்த நாளில் முகேன் சாண்டிக்கு எம்.ஜி.ஆர் கண்ணாடி செய்து கொடுக்க, அதை அணிந்து கொண்டு எம்.ஜி.ஆராகவே மாறிவிட்டார் சாண்டி. சற்று நேரம், எம்.ஜி.ஆர் பிக் பாஸ் வீட்டை சுற்றிப் பார்த்தார். கவினிடம்,"வந்த ரெண்டு வாரத்துல கலகலனு இருந்த, இப்பொ கொலகொலனு ஆயிட்ட" என கவுன்டர் போடவும் தவறவில்லை. செரினிடம் ஆரம்பித்து சேரன் வரை ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லை இந்த எம்.ஜி.ஆர் சாண்டி.

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் என கவினிற்கு அட்வைஸ் வேறு.

sdr3ttjg

அழுகையாக இருந்த நேற்றைய நாள், இன்று ஆரவாரமாக மாறுமா?

இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்கை இன்று அறித்துள்ளார் பிக் பாஸ். இந்த வார டாஸ்க் என்னவென்றால் 'போடு ஆட்டம் போடு'. பிக் பாஸ் போடும் பாட்டிற்கு அவர்கள் ஆட்டம் போட வேண்டும். "அவ்வளவுதானா, சோ சிம்பில்"-னு சொல்ற அளவுக்கு இந்த டாஸ்க் அவ்வளவு ஈசி இல்லைங்க. 

எல்லோருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த கதாப்பாத்திரத்திற்கு சமந்தமான பாடல் ஒளிக்கும் போது, அவர்கள் வந்து பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஆட்டம் ஆட வேண்டும். 

2mel86qo

இந்த டாஸ்க் எவ்வளவு கஸ்டம்னா, சரவணனுக்கு சின்ன கவுண்டர் கேரெக்டர். "கடைவீதி கலகலக்கும்" என்ற பாட்டை பிக் பாஸ் போட்ட போது, பாவம் மனுசன் பாத்ரூம்குள்ள போனாரு. வெற வழியில்லாம வந்து ஆட்டம் ஆடுனார். 'ஆத்திரத்த அடக்கலாம், ஆனா மூத்திரத்தை அடக்க முடியாது' என வடிவேலு சொல்லிருப்பாரு. ஆனா, இந்த டாஸ்க்ல அதையும் அடக்கித்தான் ஆகனும். இப்பொ தெரியுதா, இந்த டாஸ்க் எவ்வளவு கஸ்டம்னு!

எப்படி '96' திரைப்படத்தில் ஜானு நம் மனங்களை கவர்ந்தாரோ, அம்மாதிரி பிக் பாஸ் வீட்டில் நம் மனங்களை கவர்ந்த ஒருவருக்குத்தான் இந்த கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. லாஸ்லியாதான் இந்த வாரத்தின் பிக் பாஸ் வீட்டில் '96' ஜானு.

4mvsa1l8

"நீங்களும் எவ்வளவு நாள்தான் நல்லவராவே இருப்பீங்க?", இந்த வார பிக் பாஸ் வீட்டின் மக்காத்தாவின் விநாயக் மகாதேவ் கவின்தான்.

தலனு ஒருத்தர் உள்ள இருந்த தளபதினு ஒருத்தர் உள்ள இருக்கனுமா இல்லையா, அதனாலதான் 'போக்கிரி' விஜயாக வலம் வருகிறார் முகேன். வீட்டில் முழுசா மாறுன வல்லவன் சிம்புவாக வலம் வந்தார் சாண்டி.  

சரி மத்தவங்களுக்கு எல்லாம் என்ன கதாப்பாத்திரம், அடுத்த பிக்பாஸ் வரை காத்திருப்போம்!

.