நேற்று வீட்டிற்குள் சாண்டி எம்.ஜி.ஆர் போல வலம் வந்ததால் என்னமோ, இன்னைக்கு அவருக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் 'துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை' புரட்சித் தலைவர் பாடலுடன் துவங்கினார். வழக்கமாக இந்த பாடலின் போது மட்டுமே குத்தாட்டம் போடும் வீட்டு மக்கள், அன்று நாள் முழுவதும் ஆடிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
துள்ளுவதோ இளமை பாடலுக்கு கவின்மீது ஏறி துள்ளி ஆடிக்கொன்டிருந்த சாண்டி, "நேற்று போலவே இன்றைய நாளும் மிகவும் அமைதியாகவே ஆரம்பித்தது, இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என நம்புகிறேன். அந்த வெடி சத்தம் கேட்டவுடன், நான் அதில் போகப்போகிறேனா, இல்லை மாரணம் அடையப்போகிறேனா என்பது தெரிந்துவிடும்" என இன்றைய நாளுக்குக்கான ஒரு ரன்னிங் கமென்ட்ரியை கொடுத்தார்.
அன்றைய நாள், 'ரேப் சாங் எப்படி பாடுவது?' என்ற முகேனின் வகுப்புடனே துவங்கியது. "சில்லாட்டா, பில்லாட்டா!" காஞ்சனா பாடலுடன், சாண்டி இந்த வகுப்பைத் துவங்கி வைக்க, அபிராமி பிக் பாஸ் வீடு பற்றி ஒரு சொந்த ரேப் சாங்கை அழகாக பாடினார். அடுத்து அந்த வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வரிகள் அமைத்து ஒரு ரேப் சாங்கை பாடினார் ரேஷ்மா. செரினில் துவங்கிய பாடல், காதல் மன்னன் என கவினில் முடிந்தது. அடுத்து 'ரேப் பேட்டில்' பற்றி முகேன் கூற அபிராமியும் ரேஷ்மாவும் பாடல்களாலேயே சண்டை போட்டுக் கொண்டனர். இன்றைய நாளின் 'டோன்ட் மிஸ்' மூமென்டாக இது நிச்சயம் இருக்கும். நீங்களும் மிஸ் செய்துவிடாதீர்கள் மக்களே.
மதியம் போல இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்கை அறிவித்தார் பிக் பாஸ். போடு, ஆட்டம் போடு. வீட்டு மக்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சினிமா கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒவ்வொரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. டாஸ்க் பஸர் ஒலித்தவுடன், தங்களுக்கு கொடுக்கப்பட்ட உடையை அளித்துக்கொண்டு, கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டும். அவர்களுக்கான பாடல் ஒலிக்கும்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக மேடையில் ஏறி ஆட்டம் ஆட வேண்டும். அவர் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு வந்த ஆடிவிட வேண்டும். பாடல் ஒலித்து 15 நொடிகளுக்குப்பின் ஒரு வார்னிங் சவுண்டு ஒலிக்கும். அது ஒலிக்கும் பட்சத்தில் லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைக்கப்படும். அனைவருக்கும் சேர்ந்து ஒரு குரூப் சாங்கும் இருக்கு!
என்னடா இன்னைக்கு நாள் முழுவதும் ஒரே பாட்டாவே போயிட்டு இருக்கே!
குரூப் சாங் பற்றி கடைசியில் சொன்ன பிக் பாஸ், அந்த பாடலை முதலிலேயே ஒலிக்க விட்டுவிட்டார். குறிப்பிட்ட நேரத்தில் சிலர் மேடையில் ஏறாததால் வார்னிங் ஒலியுடன் அந்த பாடல் நிறுத்தப்பட்டது.
அந்த டாஸ்கின் முதல் தனிநபரின் பாடலாக கடைவீதி கலகலக்கும் பாடல் ஒலிக்க விஜயகாந்த் வேடமளிக்கப்பட்ட சரவணன், அவசர அவசரமாக ஓடி வந்து ஒரு ஆட்டம் போட்டார். அந்த பாடல் ஒலிக்கும் நேரத்தில், அவர் பாத்ரூம் கதவுகளை திறந்து உள்ளே சென்றார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. உங்க டெடிகேஷன் லெவலிற்கு ஒரு சல்யுட் சார்.
அடுத்து 'முள்ளும் மலரும்' ரஜினியாக வந்த சேரனிற்கான பாடல். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்ற பாடல், பாட ஒரு கவலையும் இல்லாமல் ஆட்டம் ஆடினார் சேரன்.
அடுத்து, 'ஆலுமா! டோலுமா!'. மங்காத்தா அஜித்போல, அஜித் போல இல்ல, அஜித்தாகவே மாறிவிட்ட கவின் அலுமா டோலுமா பாடலுக்கு ஆடினார். சாப்பிட்டுக் கொண்டிருந்த கவின் தன் கையை கூட கழுவாமல் நேராக ஆட்டத்தில் இறங்கிவிட்டார். வேற லெவல் கவின்.
அடுத்து ஜானு, லாஸ்லியா "கட்டு, கட்டு, கீரை கட்டு" பாட்டுக்கு ஆட்டமாடினார். கொஞ்சம் திரிஷா சாயலியே!
'தத்தை, தத்தை, தத்தை' பாடலுக்கு வீட்டின் இந்த வார மன்மதனாக சாண்டி ஆட்டம் ஆடினார். அட அவர் மட்டும் ஆடல, வீடே அவருடன் சேர்ந்து ஆட்டம் ஆடுச்சு.
கடைசியாக சரோஜா தேவியாக மாறிய மதுமிதா, "ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை" என்ற பாடலுக்கு ஆடினார்.
அடுத்து என்ன ஆச்சு, டாஸ்க் சொன்னாங்க, பாட்டு போட்டாங்க, டேன்ஸ் ஆடுனாங்க. அப்புறம்?
டாஸ்க் சொன்னாங்க, பாட்டு போட்டாங்க, டேன்ஸ் ஆடுனாங்க.
அந்த நாள் அப்படியாகவே முடிந்தது. நாளின் முடிவில் லாஸ்லியா, மற்றும் முகேன் ஆகியோர் அவர்கள் ஊரின் சிறப்பை மற்றவர்கள் முன் சொன்னார்கள்.
பிக் பாஸ் கொடுத்ததுலையே, இந்த ஒரு டாஸ்க்ல மட்டும்தான் எந்த சண்டையும் வரல. நீங்க சொன்ன டாஸ்க்லையே உருப்படியான டாஸ்க் இதுதான் பிக் பாஸ்.
சரி அந்த நாள் அமைதியா எந்த பிரச்னையும் இல்லாம போயிருச்சு. ஆனால் அப்படி இருந்ததான் பிக் பாஸுக்கு பொருக்காதே!
போட்றா, ஒரு மொட்ட கடுதாசிய!
பிக் பாஸின் இன்றைய ப்ரோமோக்களை பார்க்கையில், இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் இன்று முடிவடைந்துவிட்டது போல தெரிகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் தான் எந்த ஒரு பிரச்னையும் இன்றி முடிவடைந்திருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னைக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருக்கார் பிக் பாஸ். டாஸ்க் என்னனா 'மொட்ட கடுதாசி'. வீட்டில் உள்ளவர்கள், மற்ற எதோ ஒரு நபரிடம் எதாவது ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ளலாம், தங்கள் பெயரை குறிப்பிடத் தேவையில்லை.
பிக் பாஸின் இன்றைய ப்ரோமோக்களை பார்க்கையில், அனைவரது கேள்விக்கணைகளும் கவின், லாஸ்லியா ஆகியோரை நோக்கியே தொடுக்கப்பட்டது போல. கவின் அந்த கேள்விகளால் மனம் உடைந்தார், லாஸ்லியா கோபமடைந்தார்.