அனைவரும் 'குட் ஆர் ஈவில்' (Good or Evil) விளையாட்டு பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த விளையாட்டு எப்படி என்றால், சிலர் ஈவிலாக இருப்பார்கள், மற்றவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். இந்த ஈவில், நல்லவர்களுக்கு நடுவிலேயே இருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் நல்லவர்கள் பக்கத்தில், ஒருவர் பின் ஒருவராக ஈவில் அணியினரால் கொல்லப்படுவார்கள். ஆட்டத்தில், நல்லவர்கள் பக்கத்தில் அனைவரும் கொல்லப்படுவதற்குமுன், யார் ஈவில் என கண்டுபிடிக்க வேண்டும். இந்த விளையாட்டைக் கொஞ்சம் டிங்கரிங் பார்த்து, 3வது வாரத்தின் 'பிக் பாஸ்' லக்சரி பட்ஜெட் டாஸ்க்-க்காக (Bigg Boss - Luxury Budget Task) அறிவிக்கப்பட்டிருந்தது.
'வீட்டிற்குள் கொலைகாரர்கள் நுழைந்துவிட்டார்கள் என மற்றவர்களை எச்சரித்த பிக் பாஸ், வனிதா (Vanitha) மற்றும் முகேன் (Mugen Rao) இருவரிடத்தில் மட்டும் நீங்கள்தான் அந்தக் கொலையாளிகள் எனக் கூறுயிருந்தார்.
இவர்கள் வேலை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்வது. கொலை என்றால் கொலையல்ல. பிக் பாஸ் ஒரு செயலை சொல்வார். இவர்கள் இருவரும் சேர்ந்த சமந்தப்பட்டவர்களை அந்த செயலை செய்ய வைத்துவிட்டால், அவர்கள் கொல்லப்பட்டதாக அர்த்தம். இந்த டாஸ்க்கில் வனிதா ஒரு மொபைல்போனை கைகளில் வைத்துக்கொண்டு சிஐடி போலவே சுற்றுகிறார்.
டாஸ்க் துவங்கிய நாளின், முதல் விக்கெட் சாக்ஷி (Sakshi Agarwal). சாக்ஷியின் மேக்-அப்பை அவராகவே அகற்ற வேண்டும் என்பது அவருக்கான டாஸ்க். இரண்டாவது மோகன் வைத்தியா. மோகன் வைத்தியா (Mohan Vaidya), மைக்கெல் ஜாக்சன் போல நடனமாட வைக்க வேண்டும் என்பது இவருடைய டாஸ்க். வனிதா - முகேன் கூட்டணி, இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக செய்தது. இறந்துபோனால், ஆவியாகத்தானே சுற்ற வேண்டும். ஆவி போலவே உடை அணிந்து ஒரு ஆவியாக பிக் பாஸ் வீட்டில் இருவரும் பயணிக்கிறார்கள்.
டாஸ்க்கின் இரண்டாவது நாளில், ஷெரின் (Sherin Shringar) மற்றும் ரேஷ்மா (Reshma Pasupuleti) ஆகியோர்தான் பிக் பாஸின் டார்கெட். ஷெரின், தர்ஷனிற்கு முத்தம் கொடுக்க வேண்டுமாம், முகேன் தன் கைகளினாலேயே 'கோல்ட் காபி' (Cold Coffee) போட்டு, அதை ரேஷ்மாவிற்கு கொடுப்பது மட்டுமில்லாமல், அவர் மீது அந்த கோல்ட் காபியைக் கொட்ட வேண்டுமாம். இருவரும் கூட்டு சேர்ந்து இந்த டாஸ்க்கையும் செய்து முடித்துவிட்டனர்.
ஒரு நாளுக்கு இரண்டு பேர் என கணக்கு போட்டு காலி செய்யும் பிக் பாஸ், இரண்டு நாட்களில் நான்கு விக்கெட்களையும் தூக்கிவிட்டார். முதலில் காலியானது 'குக்கிங் டீம்'. மோகன் வைத்தியா, சாக்ஷி, ஷெரின் என அனைவரும் குக்கிங் டீம்தான். தப்பியது, வனிதா மட்டும்தான். அவரை அவரே கொலை செய்துகொள்ள முடியாதே.
பிக் பாஸ், உணவளிப்பவர்கள் கொலை செய்யப்பட்டால், வீட்டு மக்கள் எவ்வளவு அவதிப்படுவார்கள் என்பதை உணர்த்த விரும்புகிறாரோ என்னவோ!
அடுத்து அவரின் குறி பாத்ரூம் கிளினிங் டீமின் மீது. ரேஷ்மா அவுட். இதையும் பிக் பாஸ் காரணத்துடனேயேதான் செய்திருப்பார் போல. இவர்கள் இல்லையென்றால் குடிமக்களின் நிலை என்னவாகும். அதாவது பிக் பாஸ் வீட்டு குடிமக்களின் நிலை என்னவாகும்.
பாத்ரூம் கிளினிங் டீமில் இருப்பது இன்னும் இருவர்தான். சேரன் (Cheran) மற்றும் மீரா (Meera Mithun). அப்படியென்றால், பிக் பாஸ் ஓட அடுத்த டார்கெட் இவர்கள்தானா?
இதற்கான பதிலை இன்றைய ஷோ கூறிவிடும்.
கவனிக்கப்பட வேண்டியோர் மீது கவனம் திரும்ப வேண்டும். பார்ப்போம், இந்த இருவரும் ஒருநாள் இல்லையென்றால் மக்கள், பிக் பாஸ் வீட்டு மக்கள் என்ன அவதிகளை சந்திக்கிறார்கள் என்று…
-சு முரளி