This Article is From Aug 08, 2019

தர்ஷனுக்கு குடைபிடிக்கும் மதுமிதா, கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர்!

Bigg Boss: இந்த வாரம், வீட்டில் உள்ளவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது.

தர்ஷனுக்கு குடைபிடிக்கும் மதுமிதா, கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர்!

Kasthuri Bigg Boss Season 3 Tamil: பிக் பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி

Bigg Boss Tamil season 3: இன்றைய நாளின் 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான ப்ரோமோக்களில் கஸ்தூரி (Kasthuri) வீட்டிற்குள் சென்றது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், இந்த 3வது ப்ரோமோ கஸ்தூரி அந்த வீட்டின் புதிய போட்டியாளர் என்பதை உறுதி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. 

அவர் வருகையை முன்னிட்டு ஒரு நல்ல செய்தியாக இந்த வாரம், வீட்டில் உள்ளவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 

7v830ngo

அதுமட்டுமின்றி, புதிதாக உள்ளே சென்ற கஸ்தூரிக்கு சில ஸ்பெஷல் பவர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சில டாஸ்க்கள் வழங்கப்பட்டிருக்கும். அதை யாருக்கு வேண்டுமானாலும் அளித்துக்கொள்ளலாம்.

அதில் மூன்று டாஸ்க்கள் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றிருந்தன. முதலில் யாருக்காவது குடை பிடிக்க வேண்டும். அந்த டாஸ்க்கை தர்ஷன் - மதுமிதாவிற்கு அளித்தார் கஸ்தூரி. அதன்படி டாஸ்க்கில் வீட்டிற்குள் மதுமிதா தர்ஷனுக்கு குடை பிடிக்க வேண்டும்.

அடுத்த டாஸ்க்கள் தோப்புக்கரணம் போட வேண்டும், தலைகீழாக நிற்க வேண்டும். இந்த இரண்டு டாஸ்க்களையும் செரின் மற்றும் சாக்க்ஷிக்கு அளித்துள்ளார் கஸ்தூரி.

இப்படியாக பிக் பாஸ் வீட்டிற்குள்(Bigg Boss) கஸ்தூரியின் முதல் நாள் துவங்குகிறது. இந்த ஸ்பெஷல் பவர்ஸ் கஸ்தூரிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக் பாஸ், உங்கள் திருவிளையாடலில் இதுவும் ஒரு பகுதியா?

.