This Article is From Aug 26, 2019

'சீக்ரெட் ரூமா? நான் போகல!, வரும் வாரம் எளிமினேஷன் கிடையாது'-சர்ப்ரைஸ் கொடுக்கும் Bigg Boss!

Bigg Boss Vote: அடுத்த வாரம் 'எளிமினேஷன்' இல்லை. 'நீங்கள் ஓட்டு போடவும் தேவை இருக்காது' (Bigg Boss Vote) என்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

'சீக்ரெட் ரூமா? நான் போகல!, வரும் வாரம் எளிமினேஷன் கிடையாது'-சர்ப்ரைஸ் கொடுக்கும் Bigg Boss!

Bigg Boss 3 Tamil, Kasthuri: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்

Bigg Boss 3 Tamil: இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கஸ்தூரி (Kasthuri) வெளியேற்றப்பாட்டார். கடந்த வார நாமினேஷனில் சேரன் (Cheran), கஸ்தூரி உட்பட, நிகழ்ச்சியில் இதுவரை நாமிணேஷன் பக்கமே தலை வைக்காத  சாண்டி (Sandy), தர்ஷன் (Tharshan) ஆகியோரும் இடம்பெற்றிருந்தார். இவர்களில் கஸ்தூரி எளிமினேட் (Bigg Boss Elimination) செய்யப்படுகிறார் என எந்த ஒரு ஆராவரமும் இன்றி அறிவித்துவித்தார் கமல். கஸ்தூரி வெளியே வந்ததும் எப்போதும்போலான உரையாடல்கள், கஸ்தூரிக்கான ஸ்பெஷல் வீடியோ, அதற்கு அடுத்துதான் இந்த கேள்வியை கமல் முன் வைத்தார். 'இந்த நிகழ்ச்சியில சீக்ரெட் ரூம்னு ஒரு விஷயம் இருக்கு' என்றார் கமல் (Kamal Hassan).

கடந்த வாரங்களில் அனைவரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இந்த சீக்ரெட் ரூம்தான் (Secret Room). நிகழ்ச்சி தன் பாதி பயணத்தை கடந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு மேலாகியும் இந்த ரகசிய அறை பற்றி எந்த பேச்சுமே இடம்பெறவில்லை என்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அந்த ஏமாற்றத்தை இந்த வாரம் கமல் போக்கிவிட்டார். ஆனால், வருத்தமான விஷயம் என்னவென்றால் கஸ்தூரி அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். 'நான் முன்னதாக இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் செல்லலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், என் குழந்தைகளின் குறலை கேட்ட பிறகு என் முடிவை மாற்றிக்கொண்டேன். இப்போது எனக்கு சீக்ரெட் ரூம் வேண்டாம், வெளி உலகத்தை பார்க்கனும், வீட்டுக்கு போகனும்' என்று மறுத்துவிட்டார்.

சரி எப்போ, அவரோட குழந்தையோட குறலை கேட்டாங்க, கஸ்தூரி? 

சென்ற வாரம். ஸ்கூல்-டீச்சர் டாஸ்கின் ஒரு பகுதியாக தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியர் யார் என்று பிக் பாஸ் கேட்டிருந்தார். அனைவரும் தங்களின் ஆசிரியர்கள் பற்றி சொல்ல, கஸ்தூரி தன் குழந்தைதான் என்னுடைய ஆசிரியை என்று மனம் திறந்தார். 

வீட்டில் இருந்த அனைவரும் யார் யாரை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஆசிரியர் என்று குறிப்பிட்டார்களோ, அவர்களை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தொடர்பு கொண்டு தங்கள் மாணவ? மாணவிகள் பற்றி கருத்து கேட்டுள்ளார். அந்த ஒலிப்பதிவை பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் ஒலிக்கச்செய்தார்கள் அப்படிதான், இந்த சம்பவம் அரங்கேறியது.

அப்போ அடுத்த வாரம் 'சீக்ரெட் ரூம்' இருக்கும்ல?

சரி, இந்த வாரம் இல்லையென்றால் என்ன, அடுத்த வாரம் சீக்ரெட் ரூம் இருக்கும்ல என்ற ப்க் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஒரு டிவிஸ்ட் கொடுத்தார் கமல். அந்த டிவிஸ்ட் என்னவென்றால் அடுத்த வாரம் 'எளிமினேஷன்' இல்லை என்பதுதான். கூடவே, 'நீங்கள் ஓட்டு போடவும் தேவை இருக்காது' (Bigg Boss Vote) என்று சர்ப்ரைஸ் கொடுத்தார். ஆனால், இது வீட்டின் உள்ளே உள்ளவர்களுக்கு தெரியாது என்பதுதான் மிகப்பெரிய டிவிஸ்ட். இந்த விஷயம் தெரியாமல், இன்று வீட்டில் நாமினேஷன் (Bigg Boss Nomination) நடக்கப்போகிறது. இப்போது யார் யாரை நாமினேஷனில் கைகாட்டப்போகிறார்கள் என்பதை பார்க்க மிக ஆவலாகவே இருப்பார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

எளிமினேஷன் இருந்த தான சீக்ரெட் ரூம் இருக்கும், எளிமினேஷனே இல்லைனா!

ஆசிரியர்களின் அறிவுரை மட்டுமில்லைங்க, கமலே ஒரு ஆசிரியராக மாறி அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். ஒவ்வொருவரையும், தனித்தனியாக அழைத்து அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை கூறினார். அதுமட்டுமின்றி, அவர்கள் எந்த இடங்களில் பின் தங்கியுள்ளனர், எப்படி தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார். ஆனால், இந்த அறிவுரைகள் போட்டியாளர்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

.