Bigg Boss Tamil Sesaon 3, Kasthuri: வில்லுப் பாட்டு பாடும் கஸ்தூரி!
Bigg boss Tamil season 3: பிக் பாஸ்(Bigg boss) வீட்டின் இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படி வெளியான ஒரு ப்ரோமோவில் வழக்கமாக காலையில் பாடம் கற்றுக்கொடுக்கும்படி வழங்கப்படும் டாஸ்க்கில், இன்றைய நாளுக்கு கஸ்தூரியை வில்லுப் பாட்டு பாடும்படி சொல்லியிருப்பார்கள் போல தெரிகிறது.
நேற்றிருந்தே, ஒவ்வொருவராக கலாய்த்து தீர்த்த கஸ்தூரி (Kasthuri), இந்த வில்லுப்பாட்டிலும் அதை செய்யத்தவரவில்லை. அதில் சில காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம்பெற்றிருந்தன.
முதலாவதாக 'பத்தவச்சிட்டியே பரட்ட' என்ற சாண்டி மாஸ்டரின் டயலாக்கை சொல்லி தன் வில்லுப்பாட்டை ஆரம்பித்தார். அதற்கு எல்லோரும் ஆமாம் சொல்ல, "பிக் பாஸ் விட்டுக்குள்ள வைல்ட்-கார்டா கஸ்தூரி வந்திருக்காக" என தன் பாட்டை ஆரம்பிச்சார்.
அதன்பின், "கவினுக்கு (Kavin) பெயர்ல 'வின்' இருந்தாலும் மனசு முழுக்க லாஸ்ஸத்தான் விரும்புது" என பத்த வச்சிட்டார். அப்போது சாக்க்ஷியின் ரியேக்சன் கவணிக்கப்ப்ட வேண்டிய ஒன்று. அவர் அப்படி சொல்ல 'ஐயோ, பத்த வக்கிறியே பரட்ட' என எல்லாரும் குறல் கொடுத்தனர்.
கடைசியில லாஸ்லியாவுக்கு ஓ போடவும் சொன்னார். இது ஒருபுறம் இருக்க, முன்னதாக வெளியான ப்ரோமோவில் கவினிற்கு கடுமையாக டோஸ் கொடுத்திருந்தார்.
"ஒரே நேரத்தில் நான்கு பேரை காதலிக்கிறேன் என்று சொல்வது விளையாட்டா?" என்று காட்டமாக கேள்வி கேட்டார். பின் கவின் வடிவேலு மாதிரி "நானும் ப்ளேபாய்தான்! நானும் ப்ளேபாய்தான்! நானும் ப்ளேபாய்தான்!" என்று கலாய்க்கவும் செய்தார்.
"நீங்க நல்லவரா? கெட்டவரா?" உங்களை புரிந்துகொள்ளவே முடியலையே. இந்த ப்ரோமோக்களை பார்க்கையில், இன்றைய நாளும் கஸ்தூரியின் ஆதிக்கம் தானா!