This Article is From Aug 29, 2019

'ஆண் என்னங்க, பெண் என்னங்க!'- கவின்-சாண்டி, பிக் பாஸ் வீட்டின் அவெஞ்சர்ஸ்!

Bigg Boss Tamil 3:கடந்த நாட்களில் ஆண்கள் பெண்கள் என பிரித்து, மதுமிதா கவின், முகென், தர்சன், சாண்டி என அனைவரிடமும் சண்டையிட, அந்த சண்டையில் உருவானதுதான் இந்த 'We are the Boys-uu' பாடல்.

Advertisement
Entertainment Written by

பாட்டு பாடும் கவின், சாண்டி, முகென்

Bigg Boss Tamil 3: நேற்று வீட்டில் சண்டைகள் நிறைந்ததாக இருந்தாலும், சாண்டி (Sandy), முகென் (Mugen), தர்ஷன் (Tharshan), கவின் (Kavin), லாஸ்லியா (Losliya) என்ற இந்த ஐவர் கூட்டணியின் 'We are the Boys-uu' என்ற பாடல் தொடர்ந்து வீட்டிற்குள் ஒலித்தபடியே இருந்தது. கவின்-சாண்டி எப்போது, லிரிக்ஸ் எழுதி பாட்டுபாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுவரை, அவர்கள் இம்மாதிரி பாடிய பாடல்கள் பல. அவற்றில் இப்போது, இந்த 'We are the Boys-uu' பாடலும் இணைந்துள்ளது.

அவர்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும், சந்தோசமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒரே விஷயம் பாட்டு பாடுவது. மோகன் வைத்தியா வீட்டை விட்டு சென்றாலும் பாட்டு, உள்ளே இருக்கும் செரின், லாஸ்லியா என அனைவருக்கும் பாட்டு, இப்படி பிக் பாஸ் வீட்டில் இவர்களுடைய நாட்கள் பாடல்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அப்படி, கடந்த நாட்களில் ஆண்கள் பெண்கள் என பிரித்து, மதுமிதா கவின், முகென், தர்சன், சாண்டி என அனைவரிடமும் சண்டையிட, அந்த சண்டையில் உருவானதுதான் இந்த 'We are the Boys-uu' பாடல்.

'We are the Boys' பாடல் வரிகள்: (We are the Boys Song Lyrics)

Advertisement

ஊர்ல நாலு பேரு, உதவாக்கர இருப்பான்,
உதவி பண்ணாலும் கெட்ட பேரு எடுப்பான்!

நின்னா குத்தாமா!
நடந்த குத்தமா!
சிரிச்சா குத்தமா!
உனக்கு என்ன பண்ணா பத்துமா?

Advertisement

Because, We are the Boys-uu

'எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா?'

Advertisement

என்ன பாவம் பண்ணிப்புட்டோம், எங்கள குத்தம் சொல்றீங்க,
சமாதானம் பேச வந்த பழைய குப்பைய அல்றீங்க!

ஆண் என்னங்க, பெண் என்னங்க,
எல்லாருமே இங்க ஓர் இனங்க!

Advertisement

உங்க கண்ணத்தான் திறந்து பாருங்க,
எங்க கூட வந்து நிக்கிறதும் பொண்ணு தானுங்க!

Because, We are the Boys-uu

Advertisement

இவர்கள் இப்படி பாடிக்கொண்டிருக்க, இவர்கள் ஐந்து பேர் கூட்டணியை பிக் பாஸ் வீட்டின் அவெஞ்சர்ஸ் கூட்டணி, பிரண்ட்ஷிப் கோல்ஸ் 100% மேட்ச் என மீம் போட்டு தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.

  .  
  .  
  .  

ஒரு புறம் இப்படி இருக்க, இன்னொரு புறம் இவர்களை கலாய்த்தபடியும் இருந்தார்கள்.

நேற்றைய நாளின் ஒரு பகுதியாக ஹலோ (Helo) மெசேஜ் டாஸ்க் வழங்கப்பட்டது. லாஸ்லியா 'உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என தளபதி டயலாக்கை பேச, கவின் 'ஒருத்தர் மேல நீங்க வச்சிருக்க விஸ்வாதத்த காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என தல டயலாக் பேசினார். இவர்களுக்கு இடையில் சாண்டி 'மேயிற மாட நக்குற மாடு கெடுத்த மாதிரி, சும்மா இருந்த என்ன சொறிஞ்சு விட்டுட்டாங்க குருநாதா' என கவுண்டமனி டயலாக் அடித்தார். அடுத்த வந்த வனிதா, "வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, I am Back, I am Waiting' என சூப்பர் ஸ்டாரில் ஆரம்பித்து, தல, தளபதி வரை அனைவரின் டயலாக்கை பேசித் தீர்த்துவிட்டார். இந்த டாஸ்க்கின் முடிவில், அற்புதமாக பாட்டுப்பாடிய அபிராமி சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

  .  

இந்த வாரம் பிக் பாஸ் (Bigg Boss) வீட்டில் நடந்த பிரச்னைகள் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் தெரிவியுங்கள்!

Advertisement