பிக் பாஸ் வீட்டில் 37வது நாளான நேற்று, இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் அளிக்கப்பட்டது. 'போடு, ஆட்டம் போடு'. வீட்டு மக்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சினிமா கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒவ்வொரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. டாஸ்க் பஸர் ஒலித்தவுடன், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உடையை போட்டுக்கொண்டு, கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டும். அவர்களுக்கான பாடல் ஒலிக்கும்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக மேடையில் ஏறி ஆட்டம் ஆட வேண்டும். அவர் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு வந்து ஆடிவிட வேண்டும். பாடல் ஒலித்து 15 நொடிகளுக்குப்பின் ஒரு வார்னிங் சவுண்டு ஒலிக்கும். அது ஒலிக்கும் பட்சத்தில் லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைக்கப்படும். அனைவருக்கும் சேர்ந்து ஒரு குரூப் சாங்கும் இருக்கு. அந்த பாடல் ஒலிக்கும் போது அனைவரும் ஆட்டம் ஆட வேண்டும்.
அப்படி யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது?
அந்த வீட்டின் இந்த வார மன்மதனாக சாண்டி (ஒரு சேஞ்சுக்கு). அவருக்கு வழங்கப்பட்ட பாடல் 'தத்தை, தத்தை, தத்தை'. இந்த வாரத்தில் சாண்டி வல்லவன் சிம்புவாக வீட்டிற்குள் வலம் வர வேண்டும்.
மங்காத்தா அஜித்தாக கவினை மாற்றிவிட்டார் பிக் பாஸ். அவருக்கு வழங்கப்பட்ட வேதாளத்திலிருந்து "ஆலுமா! டோலுமா!!". போக்கிரி விஜய் கதாப்பாத்திரத்தை முகேனிற்கு அளித்தார் பிக் பாஸ். "ஆடுங்கடா என்ன சுத்தி" பாடலுக்கு அவர் ஆட்டம் போட வேண்டுமாம்.
சகலகலாவல்லவனாக தர்ஷன் அவருக்கான பாடல், "இளமை இதோ! இதோ!''.
'முள்ளும் மலரும்' ரஜினியாக சேரன். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என இவர் ஆட வேண்டும்.
'கடைவீதி கலகலக்கும்' என்ற பாடலுக்கு சின்னகவுண்டர் விஜயகாந்த் போல சரவணன்.
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என தன் நாட்டிய கலையால் அபிராமி கேட்க வேண்டுமாம். ஆமா, யாரைப் பாத்துக் கேக்கணும்?!
'போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி', அப்படியாக செரின். சிங்கார வேலன் குஷ்புவாக செரின்.
தெய்வத்தாய் சரோஜா தேவியாக மாறி, மதுமிதா, "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை" என்ற பாடலுக்கு ஆட வேண்டும்.
நீலாம்பரியாக ரேஷ்மா. ஆனால் படையப்பா நீலாம்பரியாக இல்லை, பஞ்சத்தந்திரம் மேகியாக 'வை ராஜா வை' பாடலுக்கு!
'96' ஜானுவாக லாஸ்லியா. பலர் மனம் கவர்ந்த கதாபாத்திரத்தில், மனம் கவரும் லாஸ்லியா "கட்டு, கட்டு, கீரை கட்டு" பாடலுக்கு ஆட்டம் ஆட வேண்டும்.
கடைசியில குரூப் சாங், "ஊத்திக்கினு கடுச்சுக்கலாம்"!