Madhumitha, Bigg Boss Tamil Contestants: இந்த செய்தி தொடர்பாக மதுமிதா விளக்கமளித்துள்ளார்
Madhumitha, Bigg Boss Tamil 3: கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறியதற்காக வெளியேற்றப்பட்ட மதுமிதா (Madhumitha) மீது இன்று தொலைக்காட்சி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. காவல் நிலையத்தில் 'முறையாக சம்பளம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என மதுமிதாவின்மீது புகார் அளிக்கப்ட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இன்னிலையில், மதுமிதா அந்த புகாரை நிராகரித்துள்ளார்.
தன்னை தானே காயப்படுத்திக்கொண்டதற்காக சென்ற வார பிக் பாஸ் (Bigg boss) வீட்டிலிருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார். அவர் தற்கொலை செய்ய முயற்சித்ததாக வெளியில் வதந்திகள் பரவி வந்த நிலையில், நிகழ்ச்சி தரப்பிடமிருந்து எந்த ஒரு விரிவான தகவலும் இடம்பெற்றது போல தெரியவில்லை. இன்னிலையில் 'சம்பளம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என அவர் மிரட்டியதாக மதுமிதாமீது புகார் அளிக்கப்ட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
மதுமிதா (Madhumitha) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னதாகவே 11,50,000 ரூபாய் சம்பளம் பெற்றிருந்ததாகவும், நாள் ஒன்றிற்கு 80,000 ரூபாய் விகிதம் இன்னும் 42 நாட்களுக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது போன்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இன்னிலையில், இது தொடர்பாக மதுமிதாவை தொடர்பு கொண்டபோது, "எனக்கு தெரிந்து அது பொய்யான தகவல். பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி எதாவது வழக்கு பதிவாகியிருந்தால் அதுதொடர்பாக எனக்கு அழைப்பு வந்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு எந்த அழைப்பும் வரவில்லை" என மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.