This Article is From Aug 10, 2019

"என்னோட ஹீரோ நீங்கதான் கமல் சார்"- தர்ஷன், செரினுக்கு மாலையிடும் கஸ்தூரி

Bigg Boss Tamil: 'ஹீரோ, ஜீரோ, வில்லன்' டாஸ்க்கில் கஸ்தூரி.

Bigg Boss Tamil Kasthuri: 'ஹீரோ, ஜீரோ, வில்லன்' டாஸ்க்கில் கஸ்தூரி.

Bigg Boss Tamil Season 3: இன்றைய நாள் காரசாரமாக இருக்கும் என்பதை முதல் ப்ரோமோ (Promo) விளக்கிவிட்டது. ஆனால், அடுத்த ப்ரோமோ அதிலிருந்து அப்படியே மாறுபட்டிருக்கிறது. காரசாரமாக மட்டும் இல்லை, கலகல எனவும் இருக்கும் என காட்டியுள்ளது இந்த ப்ரோமோ.

முன்னதாக கடந்த வாரம், வீட்டில் 'ஹீரோ, ஜீரோ, வில்லன்' டாஸ்க் விளையாடப்பட்டது. அந்த டாஸ்கில் மீண்டும் ஹீரோவானார் சேரன், அதே நேரத்தில் ஒரு நல்ல வில்லனாக தர்ஷன் இருந்தார்.

அதே டாஸ்க் இன்று மீண்டும் விளையாடப்பட்டது, புதிதாக உள்ளே வந்த கஸ்தூரிக்காக (Kasthuri). ஹீரோ யார் என்று தேர்வு செய்து மாலையிடும்படி கமல், கஸ்தூரியிடம் கேட்க, கஸ்தூரி தர்ஷன், செரின், இருவரையும் அழைத்து தர்ஷன் செரினிற்கு ஹீரோ, அதே நேரம் செரின் தர்ஷனுக்கு ஹீரோயின் எனக் கூறி இருவருக்கும் மாலையிட்டார்.

'பாத்தீங்களா, உங்க ஹீரோ யார்னு நீங்க சொல்லவே இல்ல' என்று கமல் கேட்க, "என்னோட ஹீரோ நீங்கதான் கமல் சார்" என்று ஆற்பறித்தார். 

ஆக மொத்தம் சுத்தி வலச்சு பார்க்கையில இன்றைய பிக் பாஸ் செம்ம ட்ரீட்தான்.

முன்னதாக, நேற்று வில்லு பாட்டு பாடும்படி டாஸ்க் கொடுக்க கஸ்தூரி "கவினுக்கு (Kavin) பெயர்ல 'வின்' இருந்தாலும் மனசு முழுக்க லாஸ்ஸத்தான் விரும்புது" என்று பாட்டு படித்திருந்தார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் "ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் பண்ற ஃப்ரண்ட்ஸ்" என்று ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் கமல். "ஃப்ரண்ட்ஷிப்ல மூன்று வகை உண்டு" என்று கமல் என்ன பேசியிருப்பார் என்பதை தெரிந்துகொள்ளவும் மனம் ஆவலாகவே இருக்கிறது.

.