Bigg Boss 3 Tamil, Sakshi: இந்த வார நாமினேஷனில் சாக்க்ஷி, அபிராமி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர்.
Bigg Boss Tamil Season 3 Day 48: முன்னதாக 'ஃப்ரண்ட்ஷிப்ல மூன்று வகை உண்டு- ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் பண்ற ஃப்ரண்ட்ஸ்' என்று விளக்கம் கொடுத்த கமல் (Kamal Hassan) "இது ஃப்ரண்ட்ஷிப்பா? உங்களுக்கும் அந்த கேள்வி இருக்கும்னு நெனைக்கிறேன். கேட்றலாம்!" என்றார்.
"யார்கிட்ட கேக்க போறீங்க? என்ன கேக்க போறீங்க? எப்படி கேட்கப்போறீங்க" என்று ஆர்வமாக இருந்தோம். வான வேடிக்கையாக இருக்கும் என நாங்கள் நினைத்தது புஷ்வானமாக மாறிவிட்டது.
போன வாரம், 'கூடு விட்டு கூடு பாயும்' டாஸ்க்ல ஆரம்பிச்சு, சாக்க்ஷி (Sakshi Agarwal) கேளறிவிட, வழக்கம்போல அபிராமி (Abirami) அழுது, கடைசில முகேன் (Mugen) கட்டில் உடைக்கிற அளவுக்கு போயிருச்சு. இதை பத்தி மட்டுமே பேசிய கமல் "கை எப்படி இருக்கு" என்று முகேனிடம் கேட்க, அந்த பக்கம் இருந்து "கட்டில் எப்படி இருக்குனு கேளுங்க சார்" என்பது பதிலாக இருந்தது. ஏன்னா அவர் குத்திய குத்து அப்படி!
அப்போது 'இது நட்பு தானா?' என கமல் கேட்க. 'இல்லை நான் முகேனை காதலிக்கிறேன்' என பானையை போட்டு உடைத்துவிட்டார் அபிராமி. ஆனால், முகேன் இவரை தோழியாகத்தான் பார்க்கிறார் என்பதையும் குறிப்பிட்டார்.
கடந்த வாரம், வீட்டில் 'ஹீரோ, ஜீரோ, வில்லன்' டாஸ்க் விளையாடப்பட்டது. அந்த டாஸ்கில் மீண்டும் ஹீரோவானார் சேரன் (Cheran), அதே நேரத்தில் ஒரு நல்ல வில்லனாக தர்ஷன் (Tharshan) இருந்தார்.
அதே டாஸ்க் இன்று மீண்டும் விளையாடப்பட்டது, புதிதாக உள்ளே வந்த கஸ்தூரிக்காக (Kasthuri). போன முறை ஹீரோ, ஜீரோ, வில்லன் என்று பாதாகைகள் கொடுக்க, இம்முறை அதற்கு மாற்றாக மாலை, முட்டை, பாக்சிங் கிளவ்ஸ் ஆகியவை வைக்கப்படிருந்தது.
ஹீரோ யார் என்று தேர்வு செய்து மாலையிடும்படி கமல், கஸ்தூரியிடம் கேட்க, கஸ்தூரி தர்ஷன், செரின், இருவரையும் அழைத்து தர்ஷன் செரினிற்கு ஹீரோ, அதே நேரம் செரின் தர்ஷனுக்கு ஹீரோயின் எனக் கூறி இருவருக்கும் மாலையிட்டார். 'பாத்தீங்களா, உங்க ஹீரோ யார்னு நீங்க சொல்லவே இல்ல' என்று கமல் கேட்க, "என்னோட ஹீரோ நீங்கதான் கமல் சார்" என்று ஆற்பறித்தார்.
கவின்தான் (Kavin) ஜீரோ என்று அவர் கையில் முட்டையை கொடுத்த கஸ்தூரி, கைகளில் பாக்சிங் கிளவ்ஸை மாற்றிக்கொண்டு சாண்டிதான் (Sandy) வில்லன் என அவருக்கு ஒரு பன்ச் கொடுத்தார்.
வழக்கமாக, கமல் பேச வந்தால் எதையோ ஒன்றை கொழுத்தி போடுவார். அது 'ஹீரோ, ஜீரோ, வில்லன்' டாஸ்க் போல காமெடியாகவும் போகலாம். 'யார் புறம் பேசுயிருப்பார்கள் என்று கண்டுபிடியுங்கள்' என யூகங்கள் போல ஒன்றுமே இல்லாமலும் போகலாம். 'கூடு விட்டு கூடு பாயும்' டாஸ்க் போல காட்டிலை உடைக்கும் நிலைக்குக் கூட தள்ளப்படலாம். அந்த வரிசையில் இந்த வாரம் கமல் அளித்துள்ள டாஸ்க் 'ஏஞ்சல் - டெவில்'.
தாங்கள் தேவதை என்று என்னும் ஒருவர் தலையில் ஏஞ்சல் கிரீடத்தையும், வில்லன் என்று என்னுபவருக்கு டெவில் கிரீடத்தையும் மாட்ட வேண்டும். இந்த டாஸ்க்கில் அதிக ஏஞ்சல் கிரீடங்களை பெற்று தேவதையாக வலம்வந்தார் செரின். அதே நேரம், பல ட்விஸ்ட்களையும் கொடுத்தார். ஏஞ்சல் கிரீடத்தை செரின் சாக்க்ஷிக்குதான் மாட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதை மதுமிதாவின் தலைகளில் சூட்டினார். சாக்க்ஷிக்கே இதில் பெரிய ஆச்சரியம்தான். ஆச்சரியத்திற்கும் மேல் ஆச்சரியமாக தர்ஷனுடன் இணைந்து சாக்க்ஷி தலையில் டெவில் கிரீடத்தை சூட்டினார் செரின். அந்த டாஸ்க் முடிவில் கவின், கஸ்தூரி, அபிராமி, சாக்க்ஷி என அனைவர் தலையிலும் இரண்டு டெவில் கிரீடங்கள் இருந்தது.
அது சரிங்க, சாக்க்ஷிக்கு டெவில் கிரீடம் சூட்டுனா மக்கள் பக்கத்துல இருந்து என்னங்க இவ்வளவு பெரிய சத்தம், எதையோ சொல்ல வர்றாங்களோ!
வழக்கமா, நாமினேஷனில் இருப்பவர்களில் காப்பாற்றப்பட்ட ஒருவரின் பெயரை சனிக்கிழமையே அறிவிப்பார் கமல். அப்போ எல்லாம் 5, 6 பேர் நாமினேஷன்ல இருப்பாங்க. இப்போ இருக்குறதே மூனு பேர்தான், சொன்னா சுவரஸ்யம் போயிடுமே. அதனால 'இன்று காப்பாற்றப்படும் ஒருவர் யார் என்பதை நாளை தெரிந்துகொள்ளலாம்'-னு சொல்லிட்டு கமல் கெளம்பிட்டார்.