This Article is From Aug 13, 2019

சாக்க்ஷி, அபிராமி, லாஸ்லியா - எளிமினேஷன் பாட்டு பாடிய 'கவின்-சாண்டி'

நாமினேஷன்ல இருக்க 3 பேருக்கும் பாட வேண்டும் என பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார்.

சாக்க்ஷி, அபிராமி, லாஸ்லியா - எளிமினேஷன் பாட்டு பாடிய 'கவின்-சாண்டி'

சென்ற வாரம் பிக் பாஸ் கவின், சாண்டி, இரண்டு பேருக்கும் புது டாஸ்க் ஒன்னு கொடுத்திருந்தார்ங்க பிக் பாஸ். நாமினேஷன்ல இருக்க 3 பேருக்கும் பாட வேண்டும். அட ஒருநாள் தான் டைம் இருந்துங்க. ஆனா அந்த ஒருநாள் டைம்லையும் மாஸ்ஸா பாட்டு ரெடி பண்ணி பாடி முடுச்சுட்டாங்க. செம்மப்பா நீங்க!

அவங்க மூனு பெருக்கு மட்டும் இல்லைங்க, இவங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்க எல்லாருக்கும் பாட்டு பாடுறதத்தான் போலப்பாவே வச்சிருக்காங்க. சாக்க்ஷி, அபிராமி, லாஸ்லியா, இவங்களுக்கு மட்டுமில்லைங்க, ரேஷ்மா, செரின், மோகன் வைத்தியா என எல்லாருக்கும் பாட்டு பாடிருக்காங்க. இந்த வரிசைல கமல், அவரக்கூட விட்டு வைக்கல இந்த பசங்க!

அப்படி அனைவருக்காகவும் பாடிய பாடல்கள் இதோ...

சாக்க்ஷி (Sakshi Agarwal) :('சலாம் குலாமு' ராகத்தில்)

ரசகுல்லாதான், கேட்டியே ரசகுல்லாதான்,
இந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் போட்டியே குல்லாதான்!

நீ மேக்கப் அள்ளி போடுறியே மூஞ்சி ஃபுல்லாதான்,
நீ மேக்கப் அள்ளி போடுறியே மூஞ்சி ஃபுல்லாதான்,
மீராதான் மீட்டிங் கேட்டானு சொன்னியே நல்லாதான்,
அந்த குறும்படத்த போட்டு பாத்தா உனக்கு குல்லாதான்!

போயிட்டு வாம்மா, சாக்க்ஷி போயிட்டு வாம்மா,
உன் அம்மா அப்பாவ நல்லபடிய பாத்துக்கோம்மா!

தன்னா நன்னானா
தன்னான தன்னா நன்னானா
தன்னா நன்னா தன்னா நன்னா
தன்னா நன்னானா!

tdbdu5b

அபிராமி (Abirami):('மாமா பைய்யா' ராகத்தில்)

அபி பொண்ணே! அபி பொண்ணே!
நீ வாய தொரந்தாலே பயம்,
உன் கண்ண பார்த்தாலும் பயம், அந்த கண்ணு கலங்கினாலும் பயம்,
இனி எங்களுக்கு இல்ல அந்த பயம், இனி எங்களுக்கு இல்ல அந்த பயம்!

மீரா மேல பாஞ்சியே,
முகென் மேல சாஞ்சியே,
கொஞ்ச நேரம் கூட அவன விட மாட்றியே!

முகென்னு பைய்யா, 
எகிறி ஓடிரு பைய்யா!

நீ டக்கரு மாடலு பொண்ணு,
நீ இல்லாட்டி எங்களுக்கு ஏது ஃபன்னு,
உன் மனசுக்குப் பட்டது பண்ணு,
நீ எப்பவுமே லைஃப்ல வின்னு,
இப்போ போயிட்டு வா கண்ணு!

63gjg7qo

லாஸ்லியா (Losliya): ('லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. ஜாஸ்மினு' ராகத்தில்)

ஏ லாஸ்.. லாஸ்.. லாஸ்.. லாஸ்.. லாஸ்ம்மா..
அட உனக்கு என்ன உனக்கு என்ன சொல்லும்மா..

மொத வாரம் வீட்டுல, பாட்டு கட்டி ஆடுன,
போக போக வீட்டுல, எங்கேயுமே காணல,
அட என்ன ஆச்சும்மா, உனக்கு என்ன ஆச்சும்மா,
உன் மூஞ்ச பாத்தாலே ரொம்ப சுருங்கி போச்சும்மா!
கதைய சொல்லும்மா, உன் கதைய சொல்லும்மா!

உனக்காக இருக்காரு சேரப்பா,
அவரு பேசுனாலே கொஞ்சம் கொஞ்சம் போருப்பா!

செரின் லவ்வுல சப்பாத்திய தட்டுன,
அவ அண்ணனுக்கு அண்ணனுக்கு காட்டுனா!
லாஸ் சப்பாத்தில கத்திய எடுத்து குத்துனா,
அத பாத்த செரின் அய்யோ அம்மானு கத்துனா!

அட எல்லாத்தையும் ஃப்ரீயா விடு லாஸூ,
இந்த பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்ல தூசு,
உங்க அப்பாகிட்ட போனப்போட்டு பேசு,
அட அவரு தான எல்லாத்துக்கும் பாஸூ,
உனக்கு பாஸூ, உனக்கு பாஸூ,
பாய் பாய் லாஸூ!

1nungd9g

கமல் (Kamal Hasan):

உலக நாயகன் வர்றாரு...ஒத்திக்கோ! ஒத்திக்கோ!
வாய கொஞ்சம் நீயும்தான் போத்திக்கோ! போத்திக்கோ!

வாரத்துல ரெண்டு நாளு வருவாரு..
அவரு வந்தார்னா டார் டார்ரா கிழிப்பாரு!

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...

உலக நாயகன் வர்றாரு...ஒத்திக்கோ! ஒத்திக்கோ!
வாய கொஞ்சம் நீயும்தான் போத்திக்கோ! போத்திக்கோ!

கலைத்தாயின் மூத்த பிள்ளை, கடைத்தாயின் தத்து பிள்ளை..
எங்கள் நாயகனே!
நடிப்புல உன்ன வெல்ல இனிமேலும் யாருமில்ல...
சகலகலா வல்லவனே!

ஆழ்வார்பேட்ட ஆண்டவா, திர்ஷ்டி சுத்தி போடவா...
வீட்டு உள்ள வா...

கண்ணே கலைமானே.. நினைத்தேன் உன்னை நானே..
நடுவுல மானே தேனே!

தேவையில்ல உனக்கு ஆஸ்காரு ஆஸ்காரு
ஆப்பனட்டு எல்லாரும் உக்காரு

நீ மீசைய முருக்குனா செம்ம மாஸூ..
அத மக்கள் இன்னும் மறக்கலையே பிக் பாஸூ...

do74pnf8

பிக் பாஸ் வீடு (Bigg Boss House):

(வானத்தை போல - 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' ராகத்தில்)

எங்கள் வீட்டில் எல்லாம் சண்டைதான், சண்டைதான்!
சண்டையில உடஞ்சது சாண்டி ஓட மண்டைதான்!

என்ன நடந்தாலும், யார் போனாலும், 
உயிர் கொடுப்பது நீங்கள்தான்,
உயிரை எடுப்பது நீங்கள்தான்!

(சங்கமம் - 'மார்கழி திங்கள் அல்லவா' ராகத்தில்)

மார்கழி திங்கள் அல்லவா, விட்டுக்குள் சண்டை அல்லவா - இது
பத்திக்கிற நேரம் அல்லவா
ஒருமுறை பத்தினால் எப்போதானே முடியும், யாருக்கு தெரியும் இது!

சரியா! தவறா!
பிக் பாஸ்ஸ்ஸ்ஸ்...
சொல் ஐய்யா!

hklj577

லாஸ்லியா (Losliya):

அடியே லாஸ்லியா, என்ன பாத்தியா!
கண்டுக்க மாட்றியே, உன் மனசு காஸ்ட்லியா!

காதல சொன்னேனே, கருண காட்னியா!
சோகமா திருஞ்சனே, பாவம் பாத்தியா!

71vo4feg

செரின் (Sherin): (கோலி சோடா - 'ஆல் யுவர் பியூட்டி' ராகத்தில்)

சார்ட்டு ஸ்கர்ட்டுடா,
வாய்ல லிப்ஸ்டிக்டா,
கண்ல மைய்யிடா,
கொஞ்சம் பொய்யிடா,

கண்ணதான சிமிட்டி சிமிட்டி ஊர மயக்குது,
ஆனா சண்டைனு வந்தாதான லுங்கிய கட்டுது!

6kcj5kd8

மீரா (Meera Mithun): 

ஏ...அழகிய மீரா!
உன் தலைல நாரா!
ஒரு மாதிரி சைடு வாங்கியே போறா...போறா!
நீதானே நடக்க மாட்டியா நேரா நேரா!

வாயத்தான் தெரந்தாலே வெளங்காதுடா..
அவ காலடி பட்ட இடம் சுடுகாடுடா..
சூனியம் வக்க அனுப்புனாங்களா...சூனியக்காரி!

சாக்ஷி(Sakshi Agarwal):(கண்ணெதிரே தோன்றினால் - 'சலோமியா' ராகத்தில்)

மேக்-அப் மூஞ்சி சாக்ஷிடா,
மண்டைல புல்லா பூச்சிடா,
கவினு கூட பேச்சுடா, 
மார்னிங் மடிஞ்சு போச்சுடா,

செத்துபோச்சி ஈ ஈ ஈ...
பேய் சாக்ஷி ஈ ஈ ஈ...

db79u33g

பாத்திமா (Fathima Babu):

என்னடா நடக்குது இங்க,
இந்த வீட்டில் இருந்த மம்மி எங்க!

மொத வாரம் ஹேப்பியா, ஜாலியா இருந்தோமே,
நாமினேஷன் வந்ததால மண்டதானே கொலஞ்சோமே!

மாறி மாறி கத்துச்சு, ஆள மாத்தி பேசுச்சு,
சண்டேதானே ரிசல்ட்டு வந்திடுச்சு!

கடைசியில மம்மி போயிட்டாங்க,
அவங்க மெடல அவங்களே உடைச்சாங்க!

ha08noo8

ரேஷ்மா (Reshma):

ரேஷு...ரேஷு...ரேஷு..ரேஷ்மா...ரேஷ்மா...
வாய தொரந்து கேவலாமா பேசுமா...பேசுமா!

ரேஷு...ரேஷு...ரேஷு..ரேஷ்மா...ரேஷ்மா...
நீ போட்டதெல்லாம்...போட்டதெல்லாம் போதும்மா!

சண்டேனு வந்தானா வாம்மா,
உள்ளாற வாம்மா, 
எல்லாரையும் அசிங்கசிங்கமா ஓடவிட்டு கேளுமா!
நல்ல கேளுமா! நல்ல கேளுமா!

69sdf87g

மோகன் வைத்தியா (Mohan Vaidya):

வீட்ட விட்டு போன எங்க கிரேட்டு நைனா..
துக்கத்துல நாங்க, அங்க நீங்க பைனா...

வீட்டுக்குள்ள நீயும் எங்க சூப்பர் ஸ்டாரு..
நீ இல்லாம வீடும் செம்ம செம்ம போரு..

அழு மூஞ்சி நைனா கண்ண தொடப்பா!
கேமராவ பாக்கும்போது ஓவர் சீனுப்பா!

இவற்றில், உங்கள் மனம் கவர்ந்த பாடல் எது என்பதை கமென்ட் செய்யுங்கள்!

-சு முரளி

.