This Article is From Aug 10, 2019

சாக்க்ஷிய டெவில்னு சொன்னதுக்கு இவ்வளவு சவுண்டா - இன்றைய பிக் பாஸில்?

Bigg Boss Tamil Season 3: சரவணன் ஏன் வெளியேற்றப்பட்டார்- விடை கிடைக்குமா?

சாக்க்ஷிய டெவில்னு சொன்னதுக்கு இவ்வளவு சவுண்டா - இன்றைய பிக் பாஸில்?

Bigg Boss 3 Tamil: டெவில் மகுடத்தை தர்ஷன் சாக்க்ஷிக்கு சூட்டினார்

Bigg Boss Tamil Season 3: பிக் பாஸின் (Bigg boss) இன்றைய நாள் என்பது பல கேள்விகளுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் நாளாகவே உள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறான ஒரு நல்ல விவாதம் இருக்கும் என்பதை பிக் பாஸ் முதல் ப்ரோமோ உறுதி செய்துள்ளது. அதே நேரம், விவாதமாக மட்டுமே இருக்காது, "நாங்கள் அப்ப அப்ப காமெடியும் பண்ணுவோம்" என்கிறது இரண்டவது ப்ரோமோ.

வழக்கமாக, கமல் பேச வந்தால் எதையோ ஒன்றை கொழுத்தி போடுவார். அது 'ஹீரோ, ஜீரோ, வில்லன்' டாஸ்க் போல காமெடியாகவும் போகலாம். 'யார் புறம் பேசுயிருப்பார்கள் என்று கண்டுபிடியுங்கள்' என யூகங்கள் போல ஒன்றுமே இல்லாமலும் போகலாம். 'கூடு விட்டு கூடு பாயும்' டாஸ்க் போல காட்டிலை உடைக்கும் நிலைக்குக் கூட தள்ளப்படலாம்.

அப்படி இந்த வாரம் கமல் அளித்துள்ள 'ஏஞ்சல் - டெவில்' டாஸ்க் எப்படி இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது சரிங்க இந்த மகுடம் சூடுற விழால தர்ஷன் சாக்க்ஷிக்கு டெவில் மகுடம் சூட்டுனதுக்கு என்னங்க, ஆடியன்ஸ் பக்கத்துல இவ்வளவு சவுண்டா?

இந்த வார நாமினேஷன்ல, லாஸ்லியா அபிராமியோட சேர்த்து, சாக்க்ஷியும் இருக்காங்களே. மக்கள் எதையோ சொல்ல வர்றாங்களோ?

முன்னதாக வெளியான ப்ரோமோவில் 'ஃப்ரண்ட்ஷிப்ல மூன்று வகை உண்டு- ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ், க்ளோஸ் பண்ற ஃப்ரண்ட்ஸ்' என்று விளக்கம் கொடுத்த கமல் "இது ஃப்ரண்ட்ஷிப்பா? உங்களுக்கும் அந்த கேள்வி இருக்கும்னு நெனைக்கிறேன். கேட்றலாம்!" என்றார்.

யார்கிட்ட கேக்க போறீங்க? என்ன கேக்க போறீங்க?

சாக்க்ஷி, முகேன், அபிராமி இவங்க மூனு பேரும் கண்டிப்பா இந்த விவாத்துல இருப்பாங்கனு தெரியுது. போன வாரம், 'கூடு விட்டு கூடு பாயும்' டாஸ்க்ல ஆரம்பிச்சு, சாக்க்ஷி கேளறிவிட, வழக்கம்போல அபிராமி அழுது, கடைசில முகேன் கட்டில் உடைக்கிற அளவுக்கு போயிருச்சு. இதை பத்தி கமல் பேசுவாரா?

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் வீட்ல மாட்டுமில்ல இங்க இருக்க அதிகபடியான மக்கள் மனசுல இருக்க ஒரு கேள்வி, பிரச்னை நடந்து முடுஞ்சு ஒரு வாரம் ஆன பிறகு ஏன் அதே பிரச்னைய காரணமா வச்சி சரவணனை வெளியே அனுப்புனீங்க. இதற்கான விவரத்தை சனிக்கிழமை கமல் சொல்வார்னு பிக் பாஸ் சொன்னார். அப்படி கமல் சொல்லலனாலும், கவின்- சாண்டி இதை பத்தி கண்டிப்பா கேப்பாங்கனு எதிர்பார்க்கப்படுது.

vpeqe9c8

அனைத்திற்கும் மேலாக இந்த வார எளிமினேஷன். லாஸ்லியா(losliya), அபிராமி (Abirami), சாக்க்ஷி (Sakshi) அப்படினு மூனு பேர், இந்த வார லிஸ்ட்ல இருந்தாலும், யார் வெளிய போவாங்க என்ற பார்வை அபிராமி, சாக்க்ஷி மேல மட்டும்தான் இருக்கு. முதல்ல சாக்க்ஷிக்கு அதிக எதிர்ப்பு இருந்தாலும், இந்த வாரம் எந்த பிரச்னைலையும் அவர் சிக்கல. அதுமட்டுமில்லாம, இவ்வளவு நாள் இருந்த சாக்க்ஷிக்கும் இப்ப இருக்க சாக்க்ஷிக்கு நிரைய வித்தியாசம் இருந்துச்சு. இந்த வாரம் முழுசா குழந்தை மாதிரியே நடந்துக்கிட்டாங்க. ஒருவேளை எளிமினேஷன் பயம் வந்திருச்சோ?

.