This Article is From Aug 12, 2019

'வொர்த் இல்ல!' - பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா!

Bigg Boss Tamil: வனிதா, இன்றைய பிக் பாஸில் விருந்தாளியாக உள்ளே நுழைந்திருக்கிறார்.

Advertisement
Entertainment Written by

Vanitha, Bigg Boss Tamil 3:பிக் பாஸ் விட்டிற்குள் விருந்தாளியாக வனிதா!

Bigg Boss 3 Tamil: பிக் பாஸின் 50வது நாளை முன்னிட்டு, வீடு ஸ்டார் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. மேலாளராக சேரன் (Cheran) தலைமை சமையல்காரராக மதுமிதா (Madhumitha). உதவியாளர்களாக கஸ்தூரி (Kasthuri), தர்ஷன் (Dharshan), அபிராமி (Abirami), லாஸ்லியா (Losliya), உணவு பரிமாறுபவர்களாக கவின் (Kavin), சாண்டி (Sandy), முகேன் (Mugen), செரின் (Serin) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது போன்ற காட்சிகளை இன்றைய பிக் பாஸின் முதல் ப்ரோமோ காட்டுகிறது.

ஒரு ஹோட்டல் என்றால் அதற்கு விருந்தாளிகள் வேண்டுமல்லவா?

அப்படி பிக் பாஸ் ஹோட்டலுக்கு விருந்தாளியாக, ஒருவர் பயங்கர ஆரவாரத்துடனும், ஆட்டத்துடனும் உள்ளே நுழைகிறார். அவர் வேறு யாரும் இல்லை, இரண்டாவதாக வீட்டை வீட்டு வெளியேற்றப்பட்ட வனிதாதான் (Vanitha), இன்றைய பிக் பாஸில் விருந்தாளியாக உள்ளே நுழைந்திருக்கிறார்.

Advertisement

வருக வருக என விருந்தாளியை வரவேற்றுள்ளார்கள், வீட்டு மக்கள்!

வீட்டிற்குள் சென்ற வனிதா, பார்ப்பவர்கள் அனைவரிடமும் சரமாரியாக கடிந்து தள்ளுகிறார். அனைவரின் செயல்களையும் பார்த்த அவர் 'வொர்த் இல்ல! வொர்த் இல்ல' என்று காட்டமாக பேசுகிறார்.

Advertisement

முதலில் 'இந்த லவ்வு மன்னாங்கட்டி எல்லாத்தையும் விட்டிருங்க, வொர்த் இல்ல!' என்று அனைவரிடமும் கடிந்து கொண்டார் வனிதா.

இதில் கவினையும் விட்டு வைக்கவில்லை, "அவரிடமும், உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நான் பேச மாட்டேன். உண்மையா சொல்றேன் கவின் வொர்த் இல்ல!"

Advertisement

ஆங்கேயும் அந்த 'வொர்த் இல்ல!' டயலாக்கை வனிதா பேச மறக்கவில்லை.

Advertisement

கவினை மட்டுமில்ல, அவர் சேரனையே விட்டு வைக்கவில்லை. கவினிடம் தொடங்கி, தர்ஷன், செரின், லாஸ்லியா என செரன் வரை ஒரு காட்டு காட்டியிருக்கிறார். அவரை பற்றி தெரியாததா?

சரி பிக் பாஸ் வனிதாவை வீட்டிற்குள் அனுப்பியது வொர்த்தா? வொர்த் இல்லையா?

Advertisement