Read in English
This Article is From Jul 15, 2019

பிக் பாஸ்: நான்காம் வார நாமினேஷனில் இடம்பெறப்போவது யார்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவதாக வனிதா வெளியேறினார்.

Advertisement
Entertainment Written by

பிக் பாஸ்-ன் சனி மற்றும் ஞாயிறுகள் கமலிற்கான நாட்கள். கமலின் மொழியில் சொன்னால் 'மக்களுடனும், மக்களுடனும் அலவலாவிக் கொள்ளுதலிற்கான நாள்'. அப்படித்தான் அவர் கூறுவார். வாரம் முழுவதும் நடந்த சம்பவங்களிற்கான உரையாடல்களும், கருத்துகள், தீர்வுகள் மற்றும் வீட்டு மக்கள் செய்த தவறுகளுக்கு கண்டிப்புகள் என அனைத்தும் கமலின் பக்கத்திலிருந்து வரும். இடையில் பொது சமாசாரங்களையும் பேசுவார். அவ்வப்போது கமலின் சிறு வயது நினைவுகளையும் கேட்கலாம்.

நாம் முன்பு எதையெல்லாம் எதிர்பார்த்தோமோ, அதுவெல்லாம் கமலிடமிருந்து ஒலித்துவிட்டது. முதலில் உரையாடல்கள், கருத்துகள், தீர்வுகள். இம்முறை துவங்கியது அபிராமியிடமிருந்து. ஆனால், முடிவு பெற்றது வனிதாவிடம். அபிராமியின் நடவடிக்கைகள் பற்றி வனிதாவிடம் கருத்து கேட்க, 'அவர் தன் மீது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக அபிராமி இவ்வாறு செய்கிறார் என எனக்குத் தோன்றுகிறது' என்பது வனிதாவின் பதில்.

கமல், பதிலிலிருந்து வார்த்தைகளைத் திரித்து பதில் அளிப்பதில் வல்லவர். அதற்கு ஒரு ஆகச் சிறந்த உதாரணம், வனிதாவின் கருத்திற்குக் கமல் கூறிய பதிலாக இருக்கும். 'கவனம் வேறு யார் மீதும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக வனிதா இப்படி செய்கிறார் என எனக்குத் தோன்றுகிறது' இதுதான் கமல் கூறிய ரிப்பீட் கருத்து. சொல் கையாடலில் நான் வித்தகன் என்பதை ஒவ்வொரு முறையும் கமல் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

Advertisement

நேற்றும் இதற்கு மீண்டும் ஒரு சான்றை அளிக்கிறார் கமல். அவர் பேச முற்படும்போது வனிதா குறுக்கிடுகிறார். இவ்வாறு, பல முறை வீட்டிற்குள் நடந்திருக்கிறது. ஒவ்வொருவர்  மற்றொருவர் மாதிரி ரியாக்ட் செய்தார்கள். அபிராமி, ஷெரின், சாக்ஷியிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது கூட வனிதா தலையிட்டார். அந்த தலையீடு மீண்டும் மீண்டும் தொடர, 'மீன் சந்தை' (Fish Market) என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கமலின் ரியேக்ஷன் சற்று வித்தியாசமாக இருந்தது. 'நாம் எவ்வளவு பேசுகிறோமோ, அந்த அளவிற்கு கவனிக்கவும் வேண்டும்' என்ற அறிவுரையுடன், 'நான் பேசலாமா?' என தன் பேச்சைத் துவங்குகிறார். இந்த அறிவுரை வனிதாவிற்கு மட்டுமல்ல. அனைவருக்கும் ஏற்புடையதே!

அந்த மீன் சந்தைக்கும் கமல் ஒரு கவுன்டர் அளிக்காமல் இல்லை. 'சத்தமில்லை என்றால் மீன் சந்தைக்கு மவுசு குறைந்துவிட்டது என அர்த்தம்' என்றார்.
 

Advertisement

அடுத்து, வீட்டு மக்கள் செய்த தவறுகளுக்கான கண்டிப்புகள். இந்த வார துவக்கத்தில், அரைகுறை உடை காரணமாக பாலியல் வன்புணர்வு போன்றவையெல்லாம் ஏற்படுகிறது என மதுமிதா கூறியிருந்தார். அதற்கு கமல், "பாலியல் வன்புணர்வு என்பது உடையின் காரணம் அல்ல. அப்படி உடைதான் காரணம் என்றால், குழந்தைகளுக்கு அந்த துயரம் ஏற்படுகிறதே. எப்போதும் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டாதீர்கள்" என கூறியிருந்தார். 

அடுத்து ‘தக் லைஃப்' தர்ஷனிற்கான பாராட்டு. இந்த வார கேப்டன் பதவிக்கான போட்டியின் போது தர்ஷன் குரல் கொடுத்தது, கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தது உட்பட பலவற்றிற்கான பாராட்டு. அடுத்து தர்ஷன் தன்மீது காதல் கொண்டுள்ளதாக மீரா சிலரிடம் கூறியிருந்தார். கமலின் விசாரணைக்குப் பின்பு தான் தெரிகிறது தர்ஷன் அப்படிக் கூறவில்லை, மீராதான் தர்ஷனிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார் என்று. இன்னும், மீரா இங்கொன்றும் அங்கொன்றும் பேசுவதை நிறுத்தியபாடில்லை.

Advertisement

அடுத்து, கமலின் சிறு வயது நினைவுகள். எப்போதும் தன் சிறு வயது நினைவுகளை கூறும் கமல், இம்முறை சற்று வித்தியாசமாக, லாஸ்லியாவின் 'மைனம்மா' கதையைக் கேட்டார். நிச்சயம், அவர் கதை சொன்ன விதம் அனைவரையும் லாஸ்லியாவை ரசித்துப் பார்க்க வைத்திருக்கும். மேலும், இன்னும் அவர் குழந்தையாகவேதான் இருக்கிறார் என்பதையும் காண்பித்திருக்கும்.

நாம் எப்போதும் எதிர்பார்ப்பதுபோல சஸ்பென்ஸ் கொடுத்து எலிமினேஷனை அறிவிப்பது கமலின் வாடிக்கை. முதலில் மோகன் வைத்தியாவின் பெயர், அடுத்துப் பார்த்தால் அவர் பாதுகாக்கப்பட்டாராம். அடுத்த கார்டில் சரவணன் பெயர். வெளியே செல்லப்போகிறோம் என்ற சந்தோஷத்தை 'நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்' என நிறுத்தி வைக்கிறார் கமல். இம்மாதிரி ஆச்சரியங்களுக்குப் பிறகு, வனிதா வெளிய வந்துருங்க, என எளிமினேஷனை அறிவித்துவிட்டார்

Advertisement

கேப்டன் எல்லாம், முன்னாடியே தேர்வு பண்ணியாச்சு. அடுத்து என்ன, இந்த வார நாமினேஷன் யார்?

இன்று வெளியான ப்ரோமோவில், இந்த வார நாமினேஷன் யார் என்ற கேள்விக்கு மீரா, சரவணன் பெயர் பரவலாக ஒலிக்கிறது. மோகன் வைத்தியா பெயரும் இடம் பெற தவறவில்லை. புதிதாக சாக்ஷியின் குரலில் அபிராமியின் பெயர் ஒலிக்கிறது. தர்ஷனின் பெயர் கூட இடம்பெற்றிருந்தது.

Advertisement

மீரா மற்றும் சரவணனின் பெயர்கள் ஒலித்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில், நாமினேஷன் பட்டியலில் இவர்கள் இருவரை எதிர்பார்க்கலாம். அடுத்து மோகன் வைத்தியா. சென்ற வாரம் போன்றே இவரின் பெயர் பட்டியலில் தொடரலாம். ஒருவேளை தொடராமலும் போகலாம். சாக்ஷி அபிராமியின் பெயரை கூறியிருக்கிறார். ஒருவேளை, சென்ற வாரம் கேப்டனாக அபிராமி இருந்ததனால், சாக்ஷியால் அந்த பெயரைக் கூற முடியவில்லையோ. ஒருவர் தர்ஷன் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். நாமினேஷனில் இவர்களின் பெயர்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இந்த வார நாமினேஷனில் இவர்கள் இடம் பெற்றிருக்கலாம்.

என்னடா, நாமினேஷன் யார்னு கேட்ட கமல் மாதிரி புரியாமையே பேசுறானே-னு யோசிக்கிறீங்களா. முன் சொன்னது மாதிரிதான், இந்த நாட்கள் கமலிற்கான நாட்கள்!

-சு முரளி

Advertisement