This Article is From Sep 28, 2019

Bigg Boss Tamil3, Day 97: மீண்டும் ‘ஃபேக்டரி ரீசெட்டுக்கு’ திரும்பிய லோஸ்லியா - அழுது வடிஞ்சதெல்லாம் ஓவர்!

கவின் சென்றது முதல் இரண்டு நாளாக அழுது வடிந்து கொண்டிருந்த லோஸ்லியா நேற்று உற்சாகமாக ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்...

Bigg Boss Tamil3, Day 97: மீண்டும் ‘ஃபேக்டரி ரீசெட்டுக்கு’ திரும்பிய லோஸ்லியா - அழுது வடிஞ்சதெல்லாம் ஓவர்!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளார். மற்ற அனைவரும் நாமினேஷனுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கவின் பிக் பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியைவிட்டு வெளியேறி விட்டார். 

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவினை நினைத்து லோஸ்லியா கதறி அழுதார். சாண்டியும் கண்ணீர் விட்டபடியேதான் கவினை வழியனுப்பி வைத்தார். வீட்டில் உள்ள சக நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். 

கவின் சென்றது முதல் இரண்டு நாளாக அழுது வடிந்து கொண்டிருந்த லோஸ்லியா, நேற்று உற்சாகமாக ஆடிப் பாடிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட சகப் போட்டியாளர்கள் லோஸ்லியா, ‘ஃபேக்டரி ரீசெட்டுக்கு' போய் விட்டதாக கேலி செய்தனர். 

அதன்பின் 'அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட ஐஸ்வர்யா தத்தா சிறப்பு விருந்தினராக வருகைத் தந்தார். பாக்ஸிங் கிளவுஸ் அணிந்து கொண்டு தெர்மாகோல் நிரப்பும் போட்டியில் தர்ஷன் வெற்றி பெற்றார். அதன்பின் ‘கண்கட்டு' வித்தை டாஸ்க்கில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த டாஸ்க்கில் பந்தில் ஒட்டப்பட்டிருக்கும் சலுகைகளில் தனக்குப் பிடித்ததை ஹவுஸ் மேட்ஸ், தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பந்தை கண்ணைக் கட்டிக் கொண்டு உதைத்து கோல் போடவேண்டும். 

தர்ஷன் தனக்குப் பிடித்த ‘பரோட்டா கோழிக்கறி' என்பதையும் சாண்டி ‘கிரில் சிக்கனையும்' ஷெரின் ‘ஸ்பா'வையும், முகேன் ‘ஹெட் மசாஜ்ஜையும்' லோஸ்லியா ‘பிக் பாஸின் புகைப்படத்தையும்' தேர்வு செய்தனர். 

இந்த டாஸ்க்கில் முகேன் மட்டும் ‘கோல்' அடிக்கத் தவறிவிட்டார். மற்ற அனைவரும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றனர். 

சாண்டியும் லோஸ்லியாவும், “கவின் இங்கிருந்து போனது அவனுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும்” என்று பேசிக் கொண்டனர். 

.