This Article is From Jul 10, 2019

பிக் பாஸ்: மொபைல்போனுடன் வனிதா, கொல்லப்பட்ட சாக்ஷி - மோகன் வைத்தியா, அடுத்து யார்?

"பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. சற்றுமுன் வந்த தகவலின்படி சிறையிலிருந்து கொடூரமான கொலையாளிகள் தப்பிவிட்டனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்"

பிக் பாஸ்: மொபைல்போனுடன் வனிதா, கொல்லப்பட்ட சாக்ஷி - மோகன் வைத்தியா, அடுத்து யார்?

'புயலுக்கு பின் அமைதி' போல, 'பிக் பாஸ்' வீட்டிலும், முதல் இரண்டு வாரங்களில் தாக்கப்பட்ட புயலுக்குப்பின் அமைதி நிலவி வருகிறது. முதலில் வெளியேறிய பாத்திமா, முன்றாவது கேப்டனான அபிராமி, என பல தகவல்கள் தெரிந்ததே. எப்போதும் வாரம் துவங்கும்போது 3 செயல்கள் கட்டாயமாக நடக்கும்… புது தலைவர், சமைக்க - சுத்தம் செய்ய அணிகள், மூன்றாவதாக நாமினேஷன். அப்படி இந்த வார நாமினேஷனில் மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர்.

முதல் இரண்டு பேர் யார் என நாமினேஷன் முன்பே, நாம் உறுதி செய்து வைத்துக்கொள்ளலாம். கமல் 'யார் வெளியே சென்றால் வீடு நன்றாக இருக்கும்?' என கேட்ட கேள்விக்கு வீட்டு மக்கள் அளித்த பதில்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம், இவர்கள் இருவர் நாமினேஷனில் இருப்பர்கள் என. ஆம், மதுமிதா மற்றும் மீரா ஆகியோர்தான். அனைவருக்கும், இவர்மீது கொஞ்சம் பாசம் அதிகம், அதனால், முன்றாவதாக அந்த பட்டியலில் இடத்தை பிடித்திருப்பது சரவணன். முதல் இரண்டு வாரங்களில் நாமினேஷனிலிருந்து தப்பிய வனிதா, இந்த வாரம் மாட்டிக்கொண்டார். கடைசியாக மோகன் வைத்தியா. 

'சரி நாமினேசன் எல்லாம் முடிஞ்சது, அடுத்து என்ன?' 

'லக்சரி பட்ஜெட் டாஸ்க்', எப்படி இந்திய பட்ஜெட்டை பார்த்துப் பார்த்து நிர்மலா சீதாராமன் படித்தார்களோ, பிக் பாஸ், அவரும் அதே மாதிரிதான், பல ஒற்றுமை, எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணுவார். 

இந்த முறை அறிவிப்பைக் கூறுவது பிக் பாஸ் அல்ல, "பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. சற்றுமுன் வந்த தகவலின்படி சிறையிலிருந்து கொடூரமான கொலையாளிகள் தப்பிவிட்டனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்களிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள், போலீஸார் எச்சரிக்கை" என்கிறது அந்த அறியப்படாத குரல். 

"எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க. இது உங்களின் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்", என்று பிக் பாஸ் எச்சரிக்கிறார். 

em5v003g

இந்த வாரம், 'குட் ஆர் ஈவில்' (Good or Evil) விளையாட்டைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, 'லக்சரி பட்ஜெட் டாஸ்க்'-க்காக அறிவிக்கப்படுகிறது. இந்த வார பிக் பாஸ் வீட்டின் டாஸ்க். அப்பாவியாக 14 பேர், மீதமிருக்கும் 2 பேர் 'ஈவில்' பக்கம். வனிதா மற்றும் முகேன்-தான், பிக் பாஸ் விட்டின் இந்த வார கொலைகாரர்கள்.

இந்த டாஸ்கை செய்ய வனிதாவின் கைகளில் ஒரு மொபைல்போன் வழங்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில், முதல் அசைன்மென்ட் சாக்ஷி. இரண்டாவது மோகன் வைத்தியா. சாக்ஷியின் மேக்-அப்பை அவராகவே அகற்ற வேண்டும். மோகன் வைத்தியா, மைக்கெல் ஜேக்சன் நடனமாட வேண்டும். இதை அவர்கள் செய்துவிட்டால், அவர்கள் கொலை செய்யப்பட்டதாக அர்த்தம்.

எப்போதும் வனிதா எப்படி தன் வேலைகளை சரியாக செய்வாரோ, இந்த முறையும் அப்படியே. முகேன் உதவியுடன், வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்து இரண்டு பேரையும், பிக் பாஸ் வீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் சுடுகாட்டிற்கு ஆவிகளாக அனுப்பிவிட்டார். இடையில், கொலையாளிகள் அபிராமி, லாஸ்லியா, மதுமிதா-தான் எனப் பேச்சு ஏற்பட அனைவரின் கவணமும் அவர்கள் பக்கம் திரும்பியது. அதனால், இப்போதைக்கு பாதுகாப்பான பக்கத்தில் நிற்கிறார்கள் வனிதா மற்றும் முகேன்.

qdrc5efg

பலியான சாக்ஷி, மோகன் வைத்தியாவின் நிலை என்ன?

"ஆவிகள் யார் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள். ஆவிகளிடம் யாராலும் பேச முடியாது, ஆவிகள் பேசுவது யாருக்கும் கேட்காது!"- இது பிக் பாஸ் கூறியது.

தற்காலிகமாக டாஸ்க்கை நிறுத்தி வைத்த பிக் பாஸ், 'இந்த டாஸ்க் நாளை மீண்டும் தொடரும்.' என அறிக்கிறார். 

நாளை யார் கொலை செய்யப்படுவார்கள், எப்படி கொலை செய்யப்படுவர்கள், தங்கள் வேலையை சரியாக செய்வார்களா கொலையாளிகள், இல்லை மாட்டிக்கொள்வார்களா? 

ஆடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி வரை, 'காத்திருப்போம்'!

-சு முரளி

.