This Article is From Jun 12, 2019

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 36 குழந்தைகள் பலி

36 குழந்தைகள் இறந்துள்ளனர் சுமார் 133 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சுகாதாரத்துறை அதிகாரிகள் முஸாஃபர்நகரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Patna:

பீகார் மாநிலம் முஸாஃபர் நகரில் மூளைக்காய்ச்சல் காரணமாக 48 மணிநேரத்தில் 36 குழந்தைகள் இறந்துள்ளனர். சுமார் 133 குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இறப்புக் காரணம் ஹைபோக்ளேசெமியா (hypoglycemia) என்ற நோயே காரணம் என்கின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவினால் இந்த இறப்புகள் நடந்துள்ளது.

மிக அதிகமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் குழந்தைகளால் நிரம்பி வழிகிறது. கிராமத்திலிருந்து வந்தவர்களே மிக அதிகம்.

கோடைக் காலங்களில் இந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கம் குறிப்பாக 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளே இதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு காரணம் மக்களிடம் இந்த நோய் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததே காரணம் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் முஸாஃபர்நகரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

.