Read in English
This Article is From May 01, 2019

கழுதை மீது சவாரி செய்து வேட்பு மனுத்தாக்கல்! மிருகவதை சட்டத்தின் கீழ் வேட்பாளர் மீது வழக்கு!!

அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகள் சவாரி செய்து அவர்களை வதைக்கின்றனர். இதனை குறிப்பால் உணர்த்தவே தான் சவாரி செய்ததாக வேட்பாளர் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

கழுதை மீதேறி வரும் சுயேச்சை வேட்பாளர் மணி பூஷன் சர்மா

New Delhi:

கழுதை மீது சவாரி செய்து பீகாரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் மிருகங்களை துன்புறுத்தியாக கூறி, அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணிபூஷன் சர்மா என்ற அந்த வேட்பாளர், தனது குதிரை சவாரியை நியாயப்படுத்தி பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகள் சவாரி செய்கின்றனர். அதனை குறிப்பால் உணர்த்தவே இவ்வாறு செய்ததாக சர்மா தெரிவித்தார்.

இந்தியாவில் மிருகவதைக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படுகிறது. இதற்கு அபராதத்துடன், அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

இதற்கிடையே மணிபூஷன் சர்மாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர் போட்டியிடவிருந்த ஜெகனாபாத் மக்களவை தொகுதியில் கடைசி கட்டமாக வரும் 19-ம்தேதி தேர்தல் நடக்கிறது.

Advertisement
Advertisement