பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் - நவம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- இந்தாண்டு இறுதியில் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது
- லாலு கட்சிக்கும், நிதிஷ் குமார் கட்சிக்கும் இடையே கடும் போட்டி
- மக்கள் நலனின் நிதிஷ் அரசு அக்கறை காட்டவில்லை என தேஜஸ்வி குற்றச்சாட்டு
Patna: பீகாரில் கொரோனா பாதிப்பை சமாளிப்பதைக் காட்டிலும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்குத்தான் முதல்வர் நிதிஷ் குமார் அதிக ஆர்வம் காட்டுவதாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தேஜஸ்வி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆனால் மாநில அரசோ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
ஒட்டுமொத்த அரசு எந்திரமும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உண்மையான பாதிப்பை வெளியிட அரசு மறுக்கிறது.
இனியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் - செப்டம்பரில் கொரோனா பாதிப்பு இன்னும் தீவிரம் அடையும்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். தற்போது பீகாரில் 12,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,997 பேர் குணம் அடைந்துள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் - நவம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)