மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். (Representational)
Jahanabad:
பீகாரின் ஜெஹனாபாத் மாவட்டத்தில் அதிவேக ரயில் மோதியதில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெஹானாபாத் நிலையத்திற்கும் கரணா நிறுத்தத்திற்கும் இடையில் நான்கு இறந்த உடல்களும் காயமடைந்த குழந்தையும் ரயில்வே தடங்களுக்கு அருகில் குடியிருப்பாளர்கள் கண்டதாக ரயில்வே காவல்துறை அதிகாரி கிருஷ்ண குமார் தெரிவித்தார்.
இதுவரை இறந்தவர்களின் அடையாளம் யாரென கண்டறிய முடியவில்லை. முழுமையான விசாரணைக்கு பின் வழக்கின் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.